Author: admin
-
நோன்பு கால இரவுகளில் இல்லறம் – அல்குர்ஆன் விளக்கம்
‘நோன்பு (கால) இரவில் உங்கள் மனைவியரிடம் உறவு கொள்வது உங்களுக்கு ஆகுமாக்கப்பட்டுள்ளது. அவர்கள் உங்களுக்கு ஆடையாகவும்இ நீங்கள் அவர் களுக்கு ஆடையாகவும் இருக்கின்றீர்கள். உங்களுக்கு நீங்களே (இரகசியமாக) துரோகமிழைத்துக் கொண்டிருந்ததை அல்லாஹ் நன்கறிவான். எனவேஇ உங்கள் பாவமன்னிப்பை ஏற்று உங்களை மன்னித்தான். இப்போது முதல் (நோன்பு கால இரவில்) உங்கள் மனைவியருடன் உறவு கொண்டு அல்லாஹ் உங்களுக்கு விதித்ததைத் தேடிக் கொள்ளுங்கள். இன்னும் ஃபஜ்ரு நேரம் என்ற வெள்ளை நூல் (இரவு என்ற) கறுப்பு நூலிலிருந்து தெளிவாகும்…
-
அவர்களைக் கண்ட இடத்தில் கொல்லுங்கள் – அல்குர்ஆன் விளக்கம்
‘அவர்களை (போரின் போது) நீங்கள் எங்கு கண்டாலும் கொல்லுங்கள். இன்னும், உங்களை அவர்கள் வெளியேற்றியவாறே நீங்களும் அவர்களை வெளியேற்றுங்கள். குழப்பம் விளைவிப்பது கொலையை விடக் கொடியதாகும். மஸ்ஜிதுல் ஹராமில் உங்களுடன் அவர்கள் போரிடும் வரை நீங்கள் அவர்களுடன் அங்கு போரிட வேண்டாம். ஆனால், உங்களுடன் அவர்கள் போரிட்டால் நீங்கள் அவர்களைக் கொல்லுங்கள். இதுதான் நிராகரிப்பாளர்களுக்குரிய கூலியாகும்.’ (2:191) அவர்களைக் கொல்லுங்கள் என குர்ஆன் கூறுவதை சிலர் வேண்டுமென்றே தவறாகச் சித்தரிக்கின்றனர். முஸ்லிம் அல்லாதவர்களை இஸ்லாம் கொல்லச் சொல்கின்றது…
-
பொறுமையின் பெறுமை
குர்ஆன் கூறும் பொன்னான போதனைகளில் பொறுமையும் ஒன்றாகும். பொறுமையைப் போதிப்பது எளிதானது. ஆனால், நடைமுறையில் அதை கடைப்பிடித்துக் காட்டுவதே கடினமானதாகும். நபியவர்கள் பொறுமையின் பொக்கிஷமாக வாழ்ந்து எமக்கு வழிகாட்டியுள்ளார்கள். பொறுமையின் பெருமை குறித்தும் அதை எப்படி ஏற்படுத்திக் கொள்வது என்பது குறித்தும் சற்று நோக்குவோம். பொறுமையின் பெருமை: அல்குர்ஆனில் பல வசனங்கள் நபி(ச) அவர்களை விளித்து பொறுமையைப் போதிக்கின்றது. ‘(நபியே!) நீர் பொறுமையுடன் இருப்பீராக! உமது பொறுமை அல்லாஹ்வுக்கே அன்றி வேறில்லை. அவர்களுக்காக நீர் கவலை கொள்ள…
-
அல்லாஹ்வின் அழகுத் திருநாமங்கள்.
அல்லாஹ்வைப் பற்றி சரியாக அறிந்து கொள்வதென்பது இஸ்லாமிய அகீதாவின் அடிப்படைகளில் முக்கியமானதொன்றாகும். அல்லாஹ்வை அவனும் அவனது தூதர்களும் அறிமுகப்படுத்திய விதத்தில் அறிந்து, ஏற்றுக் கொள்ள வேண்டும். அல்லாஹ்வை அறிந்து கொள்ள அவனது அழகுத் திருநாமங்களும் பண்புகளும் முக்கிய வழிகளாகும். அல்லாஹ்வின் திருநாமங்கள் ‘அஸ்மாஉல் ஹுஸ்னா’ எனவும், அவனது பண்புகள் ‘அஸ்மாஉஸ் ஸிபாத்’ எனவும் குறிக்கப்படுகின்றன. அல்லாஹ்வின் திருநாமங்களின் எண்ணிக்கையை வரையறுக்க முடியாது. குறைந்தளவு எண்ணிக்கையாக 99 திருநாமங்கள் உள்ளன என ஹதீஸ்கள் குறித்துக்காட்டுகின்றன. அல்லாஹ் பற்றிய நம்பிக்கையில்…
-
தொழுகையில் அனுமதிக்கப்பட்ட அம்சங்கள் – 3
தொழும் போது தடுக்கப்பட்ட விடயங்கள் குறித்து நாம் பார்த்து வருகின்றோம். விரல்களைக் கோர்த்தல்: தொழும் போது ஒரு கையின் விரல்களை மறு கையின் விரல்களோடு கோர்ப்பது தடுக்கப்பட்டுள்ளது. ”உங்களில் ஒருவர் தனது வீட்டிலேயே வுழூச் செய்து கொண்டு பள்ளிக்கு வந்தால் அவர் திரும்பிச் செல்லும் வரையில் தொழுகையிலேயே இருக்கிறார்’ என நபி(ச) அவர்கள் கூறிவிட்டு, ‘இப்படிச் செய்யாதீர்கள்’ எனக் கூறி தமது விரல்களைக் கோர்த்துக் காட்டினார்கள்.’ அறிவிப்பவர்: அபூஹுரைரா(வ) ஆதாரம்: இப்னு குஸைமா- 439, ஹாகிம்-744…
-
புனித மாதங்கள்
‘(போர் செய்யத் தடுக்கப்பட்ட) புனித மாதத்திற்குப் புனித மாதமே நிகராகும். புனிதப்படுத்தப்பட்ட (அவற்றின் புனிதம் மீறப்பட்டால் அவற்று)க்கும் பழிவாங்குதல் உண்டு! ஆகவே, எவரேனும் உங்கள் மீது வரம்பு மீறினால் அவர் உங்கள் மீது வரம்பு மீறியது போன்று நீங்களும் அவர் மீது வரம்பு மீறுங்கள்! மேலும், அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள். நிச்சயமாக அல்லாஹ் பயபக்தியாளர்களுடன் இருக்கின்றான் என்பதையும் அறிந்து கொள்ளுங்கள்.’ (2:194) புனித மாதங்களில் போர் செய்யக் கூடாது என இஸ்லாம் கூறுகின்றது. அந்தப் புனித மாதங்களில்…
-
அகீதா விடயங்கள் ஆய்வுக்குட்பட்டவை அல்ல
அகீதா (நம்பிக்கை), மறைவான விடயங்கள் தொடர்பான குர்ஆனும் ஆதாரபூர்வமான ஹதீஸ்களும் சொல்லும் செய்திகள் ஆய்வுக்குரியவை அல்ல. அவை அப்படியே நம்பி ஏற்கப்பட வேண்டியவையாகும். அகீதா விடயங்களில் ஆய்வுகள் செய்வது வழிகேட்டை உருவாக்கக் கூடியதாகும். அல்குர்ஆன் மறைவான விடயங்கள் பற்றிக் கூறும் போது பின்வருமாறு குறிப்பிடுகின்றது. ‘அலிஃப், லாம், மீ;ம்.’ ‘இது வேதமாகும். இதில் எவ்வித சந்தேகமும் இல்லை. பயபக்தியாளர்களுக்கு நேர்வழி காட்டக்கூடியதாகும்.’ ‘அவர்கள் மறைவானவற்றை நம்பிக்கை கொள்வார்கள்ளூ தொழுகையையும் நிலைநாட்டுவார்கள்ளூ நாம் அவர்களுக்கு வழங்கியவற்றிலிருந்து (நல்லறங்களில்)…
-
இஸ்லாம் அழைக்கிறது கடவுள் ஒருவனே!
கடவுள் பற்றி மக்கள் மத்தியில் பல கருத்துக்கள் நிலவுகின்றன. சிலர் கடவுள் இல்லை என்கின்றனர். மற்றும் சிலர் கோடான கோடி கடவுள்கள் இருப்பதாக நம்புகின்றனர். வேறும் சிலர் மனிதர்களில் சிலரைக் கடவுளின் அவதாரம் என்கின்றனர். இன்னும் சிலர் மனிதர்களில் சிலரையே கண் கண்ட கடவுளாக வழிப்பட்டு வருகின்றனர். இஸ்லாம் இறைவன் ஒருவன் இருக்கின்றான் என்று கூறுவதுடன் பல தெய்வ நம்பிக்கையைப் பலமாக எதிர்க்கின்றது. அத்துடன், மனிதன் கடவுளாகவும் முடியாது. கடவுள் மனித அவதாரம் எடுப்பதும் இல்லை எனக்…
-
அல்குர்ஆன் விளக்கம் – மரண சாசனம்
இந்த வசனம் மாற்றப்பட்ட வசனங்களில் ஒன்றாகும். ஒருவர் தனது சொத்தில் பெற்றோர், உறவினர்களுக்கு எவ்வளவு கொடுக்க வேண்டும் என மரண சாசனம் எழுதி வைப்பது ஆரம்பத்தில் கடமையாக இருந்தது. அதையே இந்த வசனம் கூறுகின்றது. இதன் பின்னர் ஸூறா நிஸாவின் ‘ஆயதுல் மவாரிஸ்’ எனப்படும் வாரிசுரிமைச் சட்டங்கள் தொடர்பான 4:11-12-13, 4:17 ஆகிய வசனங்கள் அருளப்பட்டன. இந்த வசனங்களில் ஒருவர் மரணித்துவிட்டால் அவரது பெற்றோர், மனைவி, ஆண்மக்கள், பெண் பிள்ளைகள், சகோதர சகோதரிகள் என்போர் அவரது…
-
நல்லுறவை வளர்ப்பதையும் சமூக சீர்கேடுகளை ஒழிப்பதையும் இலக்காகக் கொள்வோம்.
கடந்த சில வருடங்களாக நம் நாட்டின் முஸ்லிம்கள் பல்வேறு நெருக்கடி நிலைகளைச் சந்தித்து வந்தனர். முஸ்லிம்களுக்கு எதிரான இனவாத, மதவாத கருத்துக்களாலும் செயற்பாடுகளாலும் மனம் சொந்து போயிருந்தனர். இனவாதப் பேய் எவ்வித கட்டுப்பாடும் இல்லாமல் ஆட்டம் போட்டதைப் பார்த்து ஆடிப்போயிருந்தனர். நாட்டில் எப்போது வேண்டுமானாலும் ஒரு வன்முறை உருவாக்கப்படலாம் என்ற அச்ச நிலை நீடித்தது. இதனால் சமூக நல்லிணக்க நிகழ்ச்சிகள் முன்னெடுக்கப்பட்டன. பிற சமயத்தவர்களுடன் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்…