Author: admin

  • பெண்ணின் உரிமை காக்கும் இஸ்லாம்

    இஸ்லாம் அழைக்கிறது – 4 பெண்ணின் உரிமை காக்கும் இஸ்லாம் இஸ்லாம் பலதார மணத்தை அனுமதித்துள்ளது. ஒரு ஆண் ஒரே நேரத்தில் நான்கு பெண்களை மணந்து அவர்களுடன் இல்லறம் நடாத்தலாம் என்பது இஸ்லாமிய சட்டமாகும். இந்த சட்டத்தின் மூலம் இஸ்லாம் பெண்ணினத்திற்கு அநீதி இழைத்துள்ளது. இஸ்லாம் ஆணாதிக்க சிந்தனையுடன் செயற்படுகின்றது! ஆண்களுக்கு அளித்த இந்த சலுகையை இஸ்லாம் பெண்களுக்கு அளிக்குமா? என்றெல்லாம் கேள்வி எழுப்பப்படுகின்றது. இஸ்லாம் பலதார மணத்தை அனுமதித்துள்ளது என்பது உண்மையே! இருப்பினும் இது பெண்ணினத்திற்கு…

  • இனவாதிகளால் முஸ்லிம்களின் பொருளாதார மையங்கள் அழிக்கப்படலாம் என்ற ஆபத்தான நிலையில் இன்ஷூரன்ஸ் செய்யலாமா

    பிக்ஹுன் னவாஸில் பிரச்சினையா சந்தர்ப்பத்தில் மார்க்கச் சட்டம் மார்க்கச் சட்டங்களை இயற்றும் போது சில வேளை சந்தர்ப்ப சூழ்நிலைகளைக் கருத்திற் கொண்டு சில முடிவுகள் செய்யப்படலாம். அந்த முடிவுகள் வேறு சூழல்களுக்குப் பொருந்தாமல் கூட இருக்கலாம். இது போன்ற சந்தர்ப்பங்களில் பத்வா கொடுத்தவர் பற்றி எப்படி நடுநிலையாகப் புரிந்து கொள்வது என்ற விளக்கம் அவசியமாகும். உதாரணமாக, முஸ்லிம்கள் சிறுபான்மையாக வாழும் ஒரு நாட்டில் இனக் கலவர சூழல் இருக்கின்றது என்று வைத்துக் கொள்ளுங்கள். இனவாதிகளால் முஸ்லிம்களின் பொருளாதார…

  • கியாமுல் லைல் தொழுகையின் ஒழுங்குகள்

    பிக்ஹுல் இஸ்லாம் – 12 சுன்னத்தான தொழுகைகள் – 4   கியாமுல் லைல் தொழுகையின் ஒழுங்குகள்: இரவுத் தொழுகைக்காக தயாரானதும் இலகுவான இரண்டு ரக்அத்துக்கள் தொழுது கொள்வது சிறந்ததாகும்.   ‘உங்களில் ஒருவர் இரவுத் தொழுகைக்காக எழுந்தால் இலகுவான இரண்டு ரக்அத்துக்கள் தொழுவதன் மூலம் தனது தொழுகையை ஆரம்பிக்கட்டும் என நபி(ச) அவர்கள் கூறினார்கள்.” அறிவிப்பவர்     : அபூஹுரைரா(வ) நூல் : முஸ்லிம் (768-198), இப்னு குஸைமா 1150   ‘நபி(ச) அவர்கள் இரவில் தொழ…

  • ஐவேளைத் தொழுகை

    ஐவேளைத் தொழுகை:                 ‘தொழுகைகளையும் (குறிப்பாக) நடுத் தொழுகையையும் பேணிக் கொள்ளுங்கள். அல்லாஹ்வுக்கு ‘(முற்றிலும்) அடிபணிந்தவர்களாக நில்லுங்கள்”” (அல்குர்ஆன்  2:238)   இஸ்லாம் ஐவேளைத் தொழுகையைக் கடமையாக்கியுள்ளது. இது ஒவ்வொரு முஸ்லிமுக்கும் தெரியும். இருப்பினும் அஹ்லுல் குர்ஆன் என்ற பெயரில் இயங்கும் ஒரு குழுவினர் உள்ளனர். அவர்கள் ஹதீஸ்களை முழுமையாக மறுப்பவர்கள். தம்மைக் குர்ஆன்வாதிகள் என அழைத்துக் கொள்கின்றனர். அவர்கள் மூன்று வேளை தொழுதால் போதுமானது, ஐவேளை தொழ வேண்டும் என்று குர்ஆனில் வரவில்லை. மாறாக ஹதீஸில்தான்…

  • பாரிஸ் தாக்குதலும் பயங்கரவாதப் பட்டமும்

    பாரிஸ் தாக்குதலும் பயங்கரவாதப் பட்டமும் பாரிஸில் பயங்கரவாதத் தாக்குதல் தொடுக்கப்பட்டது. ISIS தீவிரவாதிகள் இந்தத் தாக்குதலைத் தொடுத்ததாக ஒத்துக்கொண்டுள்ளார்கள். இந்தத் தாக்குதலின் மூலம் ஐரோப்பிய சமூகத்தில் இஸ்லாத்தின் மீதும் முஸ்லிம்கள் மீதும் வெறுப்பும் கோபமும் ஏற்பட்டுள்ளது. பிரான்ஸ் மற்றும் ஜெர்மனியில் பள்ளிவாயில்கள் தாக்கப்பட்டன, குர்ஆன் எரிக்கப்பட்டது. அமெரிக்காவின் ஜனாதிபதி வேட்பாளர் ‘டொனால்ட் ட்ரம்ப்” இச்சந்தர்ப்பத்தைப் பயன் படுத்தி தனது முஸ்லிம் வெறுப்புணர்வை வெளிப்படுத்தி ஆதரவு தேட முற்பட்டுள்ளார். அமெரிக்காவில் உள்ள ஒட்டுமொத்த முஸ்லிம்களையும் வெளியேற்ற வேண்டும் என்று…

  • தலாக்கும் ஜீவனாம்சமும்

    அல்குர்ஆன் விளக்கக் குறிப்புக்கள் தலாக்கும் ஜீவனாம்சமும்   ‘நீங்கள் (உங்கள்) மனைவியரைத் தீண்டாமலோ அல்லது அவர்களுக்கு மஹரை நிர்ணயம் செய்யாமலோ அவர்களை விவாகரத்துச் செய்வது உங்கள் மீது குற்றமில்லை. எனினும், வசதி உள்ளவர் தனது சக்திக்கு ஏற்பவும், வசதியற்றவர் தனது சக்திக்கு ஏற்பவும் சிறந்த முறையில் அவர்களுக்கு ஏதேனும் வசதியை அளித்து விடுங்கள். (இது) நன்மை செய்பவர்கள் மீது கடமையாகும்.”   ‘நீங்கள் அவர்களுக்கு மஹரை நிர்ணயம் செய்து, அவர்களைத் தீண்டுவதற்கு முன் விவாகரத்துச் செய்து விட்டால்…