முத்ஆ கூத்துக்கள்

    வளைகுடா நாடொன்றில் ஒரு வைத்தியர் பணி புரிந்து வந்தார். அவருடன் இன்னொரு ஷீஆ வைத்தியரும் பணி புரிந்து வந்தார். இவ்விருவருக்குமிடையில் பின்வருமாறு முத்ஆ தொடர்பில் ஒரு கலந்துரையாடல் இடம்பெற்றது.

சுன்னா வைத்தியர்    :    முத்ஆ எனும் தற்காலிகத் திருமணம் உங்கள் மத்தியில் ஹலாலானது என்றா கூறுகின்றீர்?

ஷீஆ வைத்தியர்    :    ஆம்! ஹலால்தான்.

சுன்னா வைத்தியர்    :    அதாவது, எந்த இடத்தில் உள்ள எந்தப் பெண்ணாக இருந்தாலும் கூலியையும் காலத்தையும் நிர்ணயித்து இந்தத் திருமணத்தைச் செய்யலாம் அப்படித்தானே?

ஷீஆ வைத்தியர்    :    ஆமாம்.

சுன்னா வைத்தியர்    :    எந்தப் பெண்ணுடனும் சரி, எந்த இடத்திலும் சரி, எந்தக் காலத்திலும் சரி அப்படித்தானே!

ஷீஆ வைத்தியர்    :    ஆமாம். ஆனால், அவள் திருமணம் முடித்தவளாக இருக்கக் கூடாது.

சுன்னா வைத்தியர்    :    உனக்கு திருமணம் முடிக்காத சகோதரி உண்டா?

ஷீஆ வைத்தியர்    :    ஆமாம்.

சுன்னா வைத்தியர்    :    உங்கள் வீட்டு தொலைபேசி எண்ணைத் தர முடியுமா?

ஷஆ வைத்தியர்    :    எதற்காக?

சுன்னா வைத்தியர்    :    உன் சகோதரியுடன் தொடர்பு கொண்டு முத்ஆவுக்கான ஒரு ஒப்பந்தம் செய்யத்தான்.

    இந்த சந்தர்ப்பத்தில் அந்த ஷீஆ வைத்தியரின் முகம் சிவந்தது. முகத்தில் கோபம் தெரிந்தது. பதில் கூறாது இருந்தார்.

சுன்னா வைத்தியர்    :    ஏன் முகம் மாறுகிறது! நான் ஹலாலான ஒன்றைத்தானே கேட்டேன்.

அந்த ஷீஆ வைத்தியர் வாயடைத்துப் போனார்.

(அஷ்ஷீஆ ஹுமுல் அதுவ்வு பஹ்தர் ஹும் – ஷீஆக்கள் – அவர்கள்தான் எதிரிகள். அவர்கள் விடயத்தில் எச்சரிக்கையாக இருங்கள்’ என்ற நூலில் இருந்து.. பக்கம்:86)

முத்ஆ விடயத்தில் ஷீஆ உலமாக்களின் திருகுதாளங்களை உணர்த்தும் ஒரு நிகழ்வு மேற்படி நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஹுஸைன் மூஸவி எனும் ஷீஆ அறிஞர் ‘லில்லாஹி தும்ம லித் தாரிகி, கல்புல் அஸ்ராக் வதப்ரி அதுல் அயிம்மதுல் அத்ஹார்’ என்ற நூலில் ஒரு சம்பவத்தைக் குறிப்பிடுகின்றார்.

இமாம் குவ்ஹீ அவர்களுடன் அவரது அலுவலகத்தில் ஒரு நாள் நான் இருந்தேன். அப்போது இரண்டு இளைஞர்கள் வந்தார்கள். அவ்விருவரும் ஒரு விடயத்தில் கருத்து வேறுபாடு பட்டதாகவும் பின்னர் இது குறித்து இமாம் குவ்ஹீயிடம் கேட்டுத் தெளிவு பெறுவதாக முடிவு செய்ததாகவும் காட்டிக் கொண்டனர்.

அவர்களில் ஒருவர், ‘தலைவரே! முத்ஆ பற்றி என்ன கூறுகின்றீர்கள்? அது ஹலாலா, ஹராமா? என்று கேட்டான்.

அவனை இமாமவர்கள் பார்த்தார்கள். பின் ஏதோ உணர்ந்தவராக, ‘நீ எங்கே தங்கியுள்ளாய்’ என்று கேட்டார்கள்.

அதற்கு நான் ‘மவ்சூலில் வசிக்கிறேன். தற்போது சுமார் இரண்டு மாதங்களாக நஜ்பில் உள்ளேன்’ என்றான்.

இமாமவர்கள், ‘அப்படியென்றால் நீ சுன்னிதானே!’ என்றார்.

அதற்கவன், ‘ஆம்’ என்றான்.

இமாமவர்கள், ‘முத்ஆ எங்களிடத்தில் ஆகுமானது. உங்களிடத்தில் ஹராமானது’ என்று கூறினார்.

உடனே அந்த இளைஞன் ‘நான் எனது குடும்பத்தைப் பிரிந்து இரண்டு மாதங்களாக இங்கே உள்ளேன். நான் ஊருக்குப் போகும் வரை உங்கள் மகளை எனக்கு மணமுடித்து வைக்கக் கூடாதா?’ எனக் கேட்டான்.

சற்று மௌனமாக இருந்த அவர், ‘நான் ஒரு தலைவன். தலைவர்களுக்கு இது ஹராம். சாதாரண ஷீஆக்களுக்குத்தான் இது ஹலாலாகும்’ என்று கூறினார்.  அப்போது அந்த இளைஞன் குவ்ஸியை சிரித்தவாறு பார்த்தான். இமாம் தகிய்யா அடிப்படையில் (உள்ளொன்று வைத்து புறம் ஒன்று பேசுகின்றார்) என்பதை அவன் புரிந்து கொண்டதை உணர்த்தும் விதத்தில் அந்தச் சிரிப்பு இருந்தது.

பின்னர் அந்த இரு இளைஞர்களும் வெளியே சென்றனர். நான் இமாமிடம் அனுமதி பெற்று வெளியே சென்று அந்த இளைஞர்களுடன் கதைக்கச் சென்றேன். கேள்வி கேட்டவர் சுன்னத் வல் ஜமாஅத்தைச் சேர்ந்தவர். மற்றவர் ஷீஆ பிரிவைச் சேர்ந்தவர். இருவரும் கருத்து வேறுபாடுபாடு கொண்ட போது மார்க்கத்தில் ஆதாரமாக இருக்கும் இமாமிடம் கேட்க வந்துள்ளனர். நான் அந்த இளைஞர்களுடன் கதைக்க முற்பட்ட போது ஷீஆ இளைஞர் கோபத்தில் கொதிக்க ஆரம்பித்தார். என்னைப் பார்த்த அவர்,

‘பாவிகளே! எங்களுடைய பெண்களுடன் முத்ஆ செய்வதை நீங்கள் ஆகுமானது என்று கூறினீர்கள். அது ஹலால் என்றும், அதன் மூலம் அல்லாஹ்விடம் நெருக்கத்தைத் தேடுவதாகவும் குறிப்பிட்டீர்கள். ஆனால், உங்களது பெண்களுடன் நாங்கள் முத்ஆ செய்வதை ஹராம் என்று கூறுகின்றீர்களா?’ என்று கேட்டார். அவர் ஏசவும் சப்தமிட்டுப் பேசவும் ஆரம்பித்தார். தான் ஷீஆவிலிருந்து அஹ்லுஸ் ஸுன்னாவின் பக்கம் மாறப் போவதாகவும் சத்தியம் செய்தார்…. பக்கம்:86)

முத்ஆ காரணமாக 2,50,000 தந்தையற்ற குழந்தை கள் ஈரானில் இருப்ப தாக ஜனாதிபதி ‘ராப்ஸன்ஜானி’ குறிப்பிட்டுள்ளார். இது முத்ஆவின் சீரழி வால் ஏற்பட்ட இழிவாகும்.

ஸைத் ஹுஸைன் மூஸவி அவர்கள் தனது ‘லில்லாஹி தும்மலித் தாரிஹி’ என்ற நூலில் (பக்கம் 35-37) குமைனியின் முத்ஆ பற்றிய ஒரு தகவலையும் குறிப்பிட்டுள்ளார். குமைனி ஈராக்கில் இருக்கும் போது 4-5 வயது மதிக்கத்தக்க ஒரு சிறுமியை முத்ஆ செய்ததாகவும் இது பற்றி அவரிடம் கேட்ட போது, ‘சிறுமியிடம் இன்பம் அனுபவிப்பது ஆகுமானது. இருப்பினும் கொஞ்சுதல், முத்தமிடுதல், உறவுக்காக தொடைகளைப் பயன்படுத்துதல் போன்ற வழிகள் ஊடாகவே இன்பம் பெற வேண்டும். உடல் உறவுவைப் பொருத்தமட்டில் சிறுமி அதற்கு சக்தி பெற மாட்டாள். (அதைத் தவிர்க்க வேண்டும்) என்று கூறினார்.’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

ஷீஆயிஷத்தை இலங்கையில் பரப்ப முயல்பவர்கள் இது போன்ற அசிங்கத்தையும், ஆபாசத்தையும் இலங்கைத் தீவில் முஸ்லிம்கள் மத்தியில் ஏற்படுத்தவே முற்படுகின்றனர். தற்காலிகத் திருமணம் ஆகுமானது என்ற கீழ்த்தரமான சிந்தனை இன்றைய இளம் சந்ததிகளிடம் ஏற்பட்டுவிட்டால் அதன் விளைவுகளை இலங்கைத் தீவு தாங்காது!

எனவே, சமூகத்தின் மீதும் மார்க்கத்தின் மீதும் ஒழுக்கத்தின் மீதும் நேசமுள்ள யாரும் ஷPஆயிஷத்தின் வளர்ச்சிக்கோ பரவலுக்கோ எந்த வகையிலும் ஒத்துழைப்பாக இருந்து விடக் கூடாது என உறுதி கொள்ள வேண்டியுள்ளது. அல்லாஹ் இப்படிப் பட்ட அநாச்சாரங்களிலிருந்து நம் அனைவரையும் பாதுகாப்பானாக!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.