பிக்ஹுல் இஸ்லாம் – தொழுகையில் அனுமதிக்கப்பட்ட அம்சங்கள் – 2

03.    தேவைக்காக கனைத்தல்:

தொழும் போது ஏதேனும் ஒன்றை உணர்த்துவதற்காக தொழுபவர் கனைக்கலாம். இது குறித்து இமாம் இப்னு தைமிய்யா (ரஹ்) அவர்கள் பின்வருமாறு கூறுகின்றார்கள்.

‘நபி(ச) அவர்கள் தொழுகையில் பேசுவதைத்தான் தடுத்தார்கள். கனைத்தல் என்பது பேச்சில் அடங்காது. அது தனியாகவோ அல்லது மற்றொன்றுடன் இணைத்தோ அது அர்த்தத்தையும் தராது. கனைத்தவன் பேசியவன் என்று பேர் சொல்லப்படவும் மாட்டான். கனைப்பவரின் நோக்கம் என்ன என்பது ஏதேனும் உப காரணமொன்றின் மூலமாகவே உணரப்படும். இந்நிலையில் கனைத்தல் என்பது சைக்கினை செய்வது போன்று மாறிவிடுகின்றது.’
(மஜ்மூஉல் பதாவா 22ஃ17)

04.    தொழுகையில் அல்ஹம்து லில்லாஹ் கூறுதல்:

தொழுகையின் போது ஒருவர் தும்மிவிட்டால் அவர் தொழும் ஒருவர் ‘அல்ஹம்துலில்லாஹ்’ என்று கூறலாம். ஆனால், அதற்குப் பதில் சொல்லும் விதமாக ‘யர்ஹமுகல்லாஹ்’ – அல்லாஹ் உனக்கு அருள் புரிவானாக! என்று கூறக்கூடாது. அல்ஹம்து சொல்வது அல்லாஹ்வை புகழ்வதாகவும் யர்ஹமுகல்லாஹ் சொல்வது ஒரு மனிதன் மற்ற மனிதனைப் பார்த்துப் பேசுவதாகவும் அமையும்.

தொழுகையில் கதைப்பது ஆரம்பத்தில் அனுமதிக்கப்பட்டிருந்தது. பின்னர் அது தடுக்கப்பட்டது. தொழுகையில் கதைப்பது தடுக்கப்பட்ட பின்னர் நடந்த நிகழ்ச்சியொன்று இதைத் தெளிவுபடுத்துகின்றது.

‘நபி(ச) அவர்களுடன் தொழுது கொண்டிருந்தேன். அப்போது ஒருவர் தும்மினார். நான் யர்ஹமுகல்லாஹ் என்றேன். மக்கள் என்னை வித்தியாசமாகப் பார்த்தார்கள். ‘உங்களுக்கு என்ன பிடித்துள்ளதுÉ ஏன் என்னைப் பார்க்கின்றீர்கள்’ என்று கேட்டேன். அவர்கள் தமது கைகளால் தொடைகளில் தட்டி என்னை அமைதியாக இருக்கச் சொன்னார்கள். நான் அமைதியாக இருந்தேன். என் தாயும் அவரே! தந்தையும் அவரே! நபியவர்களை விட சிறந்ததொரு ஆசிரியரை அவருக்கு முன்னரும் பார்த்ததில்லை, பின்னரும் பார்த்ததில்லை. அவர் எனக்கு அடிக்கவில்லைÉ அதட்டவில்லைÉ திட்டவில்லை. இருந்தாலும் எமது இந்தத் தொழுகையில் மனிதர்களுடன் தொடர்புபட்ட பேச்சுக்கள் எதுவும் பேசக் கூடாது. தொழுகை என்பது தஸ்பீஹ், தக்பீர், குர்ஆன் ஓதுதல் போன்றவற்றை உள்ளடக்கியது என்று கூறினார்கள்.’
அறிவிப்பவர்: முஆவியதுப்னுல் ஹகம் அஸ்ஸுலமீ
ஆதாரம்: தாரமீ: 1554, நஸாஈ: 1218,
இப்னு ஹிப்பான்: 2247

தொழுகையில் தும்மிய ஒருவர்  அல்லாஹ்வைப் புகழ்ந்த போது அந்த வார்த்தைகளை சுமந்து செல்வதில் மலக்குகள் போட்டி போட்டுக் கொண்டதாகக் கூறி நபி(ச) அவர்கள் தும்மியவர் அல்ஹம்துலில்லாஹ் கூறியதை அனுமதித்துள்ளார்கள்.
(பார்க்க: அபூதாவூத் 773, திர்மிதி 40,
நஸாஈ 931)

தேவைக்காகத் தொழுபவருடன் பேசுவது:

‘சூரியக் கிரகணம் ஏற்பட்ட போது நான் ஆயிஷா(ரழி) அவர்களிடம் வந்தேன். மக்கள் தொழுதுகொண்டிருந்தார்கள். ஆயிஷா(ரழி) அவர்களும் தொழுதவர்களாக நின்று கொண்டிருந்தார்கள். மக்களுக்கு என்ன நடந்தது என நான் கேட்டேன். அதற்கு ஆயிஷா(ரழி) அவர்கள் தமது கரத்தால்  வானத்தை நோக்கி சுட்டிக்காட்டினார்கள்…’
அறிவிப்பவர்: அஸ்மா பின்து அபூபக்கர்(ரழி)
ஆதாரம்: புஹாரி 184, 1053, 7287
அஹ்மத் 2775

தொழுகையில் தடுக்கப்பட்டவைகள்:

தொழுகையில் தடுக்கப்பட்ட சில அம்சங்கள் இங்கு சுட்டிக்காட்டப்படுகின்றன. இவை தொழுகையை முறித்துவிடாது. எனினும், தொழுகையின் நன்மையைக் குறைத்துவிடும் என்பதைக் கவனத்திற் கொள்க!

1.    இடுப்பில் கை வைத்தல்:

‘இடுப்பில் கை வைத்துக் கொண்டு தொழுவதை நபி(ச) அவர்கள் தடுத்துள்ளார்கள்’ என அபூஹுரைரா(வ) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.
(ஆதாரம்: புஹாரி 1219, அபூதாவூத் 343)

இடுப்பில் கை வைத்துக் கொண்டு தொழுவது யூதர்கள் வழிமுறை என ஆயிஷh(ரழி) அவர்கள் கண்டிக்கின்றார்கள். (புஹாரி 3458) இவ்வாறே இவ்விதம் தொழுவது சிலுவை வடிவத்தைத் தருவதாக இப்னு உமர்(வ) அவர்கள் கண்டிக்கின்றார்கள். (அஹ்மத் 4955, 5971)

இந்த ஆதாரங்களின் அடிப்படையில் இடுப்பில் கை வைத்துக் கொண்டு தொழுவது தடுக்கப்பட்டதாகும்.

02.    வானத்தை நோக்கிப் பார்வையை உயர்த்துதல்:

தொழும் போது மேலே பார்வையை உயர்த்துவது தடுக்கப்பட்டதாகும்.

‘தொழுகையில் பிரார்த்தனை செய்யும் போது தமது பார்வைகளை வானத்தை நோக்கி உயர்த்துபவர்கள் அதை நிறுத்திக் கொள்ளட்டும். அல்லது அவர்களது பார்வைகள் பறிக்கப்பட்டுவிடலாம்’ என நபி(ச) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா(வ)
ஆதாரம்: முஸ்லிம் 994-33, நஸாஈ 1276, 1284,
அஹ்மத் 9037

ஏற்கனவே தொழும் போது வலம், இடமாக தேவைக்காகப் பார்ப்பது அனுமதிக்கப்பட்டுள்ளதை அறிந்தோம். மேல் நோக்கிப் பார்ப்பது தடுக்கப்பட்டதாகும் என்பதை இந்த ஹதீஸ் மூலம் அறிந்து கொள்ளலாம்.

03.    கவனத்தை திசை திருப்புவதைப் பார்த்தல்:

‘பல வண்ணங்கள் உள்ள ஓர் ஆடையை அணிந்து ஒருவர் தொழுத போது நபி(ச) அவர்கள் அந்த வண்ணங்களின் பக்கம் தம் பார்வையைச் செலுத்தினார்கள். அவர்கள் தொழுகையை முடித்ததும், ‘என்னுடைய இந்த ஆடையை எடுத்துச் சென்று அபூ ஜஹ்மிடம் கொடுத்துவிட்டு, அவரின் (வண்ணங்கள் இல்லாத) ஆடையைக் கொண்டு வாருங்கள். இந்த ஆடை சிறிது நேரத்திற்கு முன்னர் என்னுடைய தொழுகையைவிட்டு என் கவனத்தைத் திருப்பிவிட்டது’ என்று கூறினார்கள்’ என ஆயிஷா(ரழி) அறிவித்தார்.

(மற்றோர் அறிவிப்பின்படி, ‘நான் தொழுகையில் நிற்கும் போது அந்த ஆடையின் வண்ணங்களைப் பார்ப்பதால் அது என்னைக் குழப்பிவிடுமோ என அஞ்சினேன்’ என்று இறைத்தூதர்(ச) அவர்கள் கூறினார்கள் என்று உள்ளது.)

‘ஆயிஷா(ரழி) அவர்களிடம் (உருவப் படங்கள் நிறைந்த) ஒரு திரை இருந்தது. அதனால் தங்களின் வீட்டின் ஓர் ஓரத்தை மறைத்திருந்தார் கள். இதைக் கண்ட நபி(ச) ஆயிஷா(ரழி) அவர்களிடம், ‘உன்னுடைய இந்தத் திரையை நம்மை விட்டும் அகற்றிவிடு. அதிலுள்ள படங்கள் நான் தொழுது கொண்டிருக்கும் போது (என் எண்ணத்தில்) குறுக்கிடுகின்றன’ என்று கூறினார்கள்’ என அனஸ்(வ) அறிவித்தார்.’
(புஹாரி: 373, 374)

அலங்காரம் போடப்பட்ட ஆடையின் பால் பார்வை சென்றதால் நபி(ச) அவர்களது கவனமே திசை திரும்பியதாக இந்த ஹதீஸ் கூறுகின்றது. எனவே, தொழும் போது கூடிய அலங்காரங்களைக் கொண்ட ஆடைகளைத் தவிர்க்க வேண்டும். அத்துடன், எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட ஆடைகளை அணிந்து தொழுவதால் அடுத்தவர்களின் கவனம் திசை திருப்பப்படும். குறிப்பாக பின்பக்கம் எழுத்துக்கள் பொறிக்கப்பட்டிருந்தால் பின்னால் தொழுபவர்கள் அதனைக் கவனிக்கலாம். அவர்கள் அதனை வாசிக்கவும் முற்படலாம். அது பற்றி யோசிக்கவும் செய்யலாம். இவ்வாறே கவனத்தை திசை திருப்பக் கூடிய விரிப்புக்கள், மாபிள் அமைப்புக்கள் என்பவற்றையும் தவிர்க்க வேண்டும்.

04.    அவசியமின்றி அங்குமிங்கும் பார்த்தல்:

தொழும் போது தேவையேற்பட்டால் வலது, இடதாகப் பார்க்கலாம் என்பதை நாம் முன்னர் பார்த்தோம். எனினும், அவசியமின்றி அங்குமிங்கும் நோட்டமிடுவது தடுக்கப்பட்டதாகும்.

ஆயிஷா(ரழி) அறிவித்தார்கள். ‘தொழுகை யில் திரும்பிப் பார்ப்பது பற்றி நபி(ச) அவர்களிடம் கேட்டேன். ‘ஓர் அடியானுடைய தொழுகையை ஷைத்தான் அதன் மூலம் பறித்துச் செல்கிறான்’ என்று இறைத்தூதர்(ச) அவர்கள் கூறினார்கள்.
(புஹாரி: 751)

எனவே, தொழும் போது அங்கும் இங்கும் நோக்குவது தடுக்கப்பட்டதாகும். அத்துடன் அது iஷத்தானின் தூண்டுதலில் உள்ளது என்பதையும் புரியலாம்.

இன்ஷh அல்லாஹ் தொடரும்….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.