மறுக்கப்படும் ஆதாரபூர்வமான ஹதீஸ்கள் (தொடர் 05)

நபி(ஸல்) அவர்களுக்கு சூனியம் செய்யப்பட்டிருந்தால் அதைக் காஃபிர்கள் விமர்சனம் செய்திருப்பார்கள். அப்படி விமர்சனம் செய்ததாக எந்தத் தகவல்களும் இல்லை. எனவே, விமர்சனம் இல்லை என்பதே நபி(ஸல்) அவர்களுக்குச் சூனியம் வைக்கப்படவில்லை என்பதற்கான சான்றாகத் திகழ்கின்றது என்ற அடிப்படையில் சகோதரர் நபியவர்களுக்கு சூனியம் செய்யப்பட்டதாகக் கூறும் ஆதாரப்பூர்வமான ஹதீஸை மறுக்கின்றார். உள்ளதை வைத்து விமர்சனம் செய்வதுதான் நியாயமான விமர்சனமாகும். ஆனால், அவர் இந்த வாதத்தை பல்வேறுபட்ட மிகைப்படுத்தல்கள் செய்து ஹதீஸில் கூறப்படாத செய்திகளை மேலதிகமாக இணைத்தே வலுப்படுத்த முனைகிறார். எதிரிகள் விமர்சனம் செய்யாதது ஏன்? நபிகள் ...

Read More »

மறுக்கப்படும் ஆதாரபூர்வமான ஹதீஸ்கள் (தொடர் 04)

பாதுகாக்கப்பட்ட இறைவேதம்: நபி(ஸல்) அவர்களுக்கு சூனியம் செய்யப்பட்ட ஹதீஸை ஏற்றுக்கொண்டால் குர்ஆனின் நம்பகத் தன்மையில் அது சந்தேகத்தை ஏற்படுத்தி விடும் என்ற வாதத்தை முன்வைத்து பிஜே அவர்கள் அது பற்றிய ஸஹீஹான ஹதீஸை மறுக்கின்றார். அவர் முன்வைக்கும் வாதத்தின் போலித் தன்மையையும், அவர் தனக்குத் தானே முரண்படும் விதத்தையும், தனது வாதத்தை நிலைநிறுத்துவதற்காக ஹதீஸில் கூறப்பட்டதற்கு மாற்றமாக மிகைப்படுத்தும் அவரது போக்கையும், குர்ஆன் தொகுப்பு வரலாற்றில் குர்ஆனில் சந்தேகத்தை ஏற்படுத்தும் வண்ணம் அவர் கூறியுள்ள கருத்துக்கள் பற்றியும் இந்தத் தொடரில் விரிவாக அலசுவோம். பிஜே ...

Read More »

மறுக்கப்படும் ஆதாரபூர்வமான ஹதீஸ்கள் (தொடர் 03)

அன்பின் நண்பர்களுக்கு, அஸ்ஸலாமு அலைக்கும். சூனியம் என்றால் வெறும் தந்திர வித்தைதான் என்ற கருத்துத் தவறானது என்பது குறித்தும், ‘(நபியே) மனிதர்களிலிருந்து உம்மை அல்லாஹ் பாதுகாப்பான்’ என்ற குர்ஆன் வசனத்திற்கு நபியவர்களுக்கு சூனியம் செய்யப்பட்டதாகச் கூறும் ஹதீஸ் முரண்படுகின்றது என்ற வாதம் போலியானது என்பது குறித்தும் இந்தொடரில் ஆராயப்படுகின்றது. கடந்த இரு தொடர்களில்… குர்ஆனுக்கு முரண்படும் ஆதாரபூர்வமான ஹதீஸ்களை மறுக்க வேண்டும் என்ற ஆய்வாளர் PJ-யின் நிலைப்பாடு, முன்னர் சூனியம் இருக்கிறது, நபி(ஸல்) அவர்களுக்கு சூனியம் செய்யப்பட்டது என்ற ஹதீஸை சரிகண்டேன். எனினும், மறு ...

Read More »

மறுக்கப்படும் ஆதாரபூர்வமான ஹதீஸ்கள் (தொடர் 02)

அன்புள்ள வாசகர்களுக்கு, இக்கட்டுரையை நிதானமாக நடுநிலையோடு வாசியுங்கள். சத்தியத்தை விட தனிநபரை நேசிக்கும் வழிகேட்டிலிருந்து விடுபட்டு வாசியுங்கள். கட்டுரைத் தொடர் முடியும் வரை முடிவு எடுக்காது உண்மையைத் தேடும் உணர்வுடன் வாசியுங்கள். சூனியம் இருக்கின்றது என்று நாம் கூறுவதை சூனியம் சம்பந்தமாக நடைபெறும் ‘ஷிர்க்’குகளையோ மூட நம்பிக்கைகளையோ நாம் ஆதரிக்கிறோம் என்று அர்த்தப்படுத்திக் கொள்ளாதீர்கள். இங்கு சூனியம் என்ற அம்சத்தை விட ஹதீஸ் மறுக்கப்படுவது என்ற அம்சமே பிரதானமானது என்பதைக் கவனத்திற் கொள்ளுங்கள். தர்க்கவியல் வாதங்களை விட பகுத்தறிவு கேள்விகளை விட ஹதீஸ் உயர்வானது ...

Read More »

மறுக்கப்படும் ஆதாரபூர்வமான ஹதீஸ்கள் (தொடர் 01)

அல்குர்ஆனும் ஆதாரபூர்வமான ஹதீஸ்களுமே இஸ்லாத்தின் மூலாதாரங்களாகும். அல்குர்ஆனில் “அல்லாஹ்வைப் பின்பற்றுங்கள், அவனது தூதரையும் பின்பற்றுங்கள்” என அனேக ஆயத்துக்கள் கூறுகின்றன. அவனது தூதரைப் பின்பற்றுங்கள் என்ற கட்டளையைத்தான் ஹதீஸைப் பின்பற்றுதல் என நாம் புரிந்து செயற்பட்டு வருகின்றோம். இந்த வகையில் ஆதாரபூர்வமான ஹதீஸ்களை நம்புவதும் அவற்றை ஏற்று நடப்பதும் நபி(ஸல்) அவர்களது நபித்துவத்தை நம்புவதையும் அதை ஏற்றுக் கொள்வதையும் வெளிப்படையாகக் காட்டும் முக்கிய அம்சங்களாகும். இந்த அடிப்படையில் ஆதாரபூர்வமான ஹதீஸ்களை ஏற்க மறுப்பது நபித்துவத்தின் ஒருபகுதியை மறுப்பது போன்ற முக்கிய பிரச்சினையாக நோக்கப்பட வேண்டிய ...

Read More »

அல்லாஹ்வின் நாட்டத்திற்கும் தக்லீத் சிந்தனைக்கும் இடையில் சூனியம் – புதிய பித்னா

ஒன்லைன் PJ இணைய தளத்தில் சூனியம் பற்றிப் பேசும் 2:102 வசனத்திற்கு புதிய விளக்கம் ஒன்று அளிக்கப்பட்டுள்ளது. தான் உருவாக்கிய வழிகெட்ட சிந்தனையைப் பாதுகாக்க குர்ஆனைக் கூட திரிவுபடுத்த முனைந்துவிட்டனர் என்பதற்கு இது சிறந்த ஆதாரமாக அமைந்துவிட்டது. இந்த விளக்கத்தை அவதானித்தால் குர்ஆனுடன் விளையாடும் இவர்களது வழிகெட்ட போக்கையும் அல்லாஹ்வையும், ரஸூலையும் மிஞ்சிப் போகும் இவர்களது வழிகெட்ட சுபாவத்தையும் புரிந்து கொள்ளலாம். அந்த வெளியீட்டில் புதிய சூனிய பித்னா என்று உருவாக்கப்பட்டுள்ளது. அதாவது, இல்லாத ஒரு இலக்கண விதியைச் சொல்லி குர்ஆனில் உள்ள ஒரு ...

Read More »

சுன்னாவுக்கும் பித்ஆவுக்குமிடையில் ஷஃபான் மாத நோன்பு

ஷஃபான் மாதம் சுன்னத்தான நோன்புகள் அதிகமாக நோக்கத்தக்க சிறந்த மாதமாகும். இருப்பினும் இந்த மாதத்தின் 15 ஆம் நாளில் விஷேடமாக நோன்பு நோற்கப்படுகின்றது. அது “பராத்”, “விராத்” என முஸ்லிம்களால் அழைக்கப்படுகின்றது. இது பித்அத்தான வழிமுறையாகும். ஷஃபான் 15 ஆம் இரவில்தான் குர்ஆன் அருளப்பட்டது என்று சிலர் நம்புகின்றனர். அல்குர்ஆன் ரமழான் மாதத்தில் அருளப்பட்டது என்ற திருக்குர்ஆனின் கூற்றுக்கு எதிரான கருத்தாக இது உள்ளது. சுன்னத்தான நோன்புகளை நோற்காது மார்க்கம் அனுமதிக்காத 15 ஆம் நாள் நோன்பை மட்டும் மக்கள் நோற்று வருவதால் ஷஃபான் ...

Read More »

அரசியல், சமயத் துறையில் நலிந்துவிட்ட சமூகம்

இலங்கை முஸ்லிம்களின் சமய, சமூக, அரசியல் நிலவரம் தொடர்ந்தும் சட்டியிலிருந்து அடுப்புக்குள் விழும் கதையாகவே தொடர்ந்து கொண்டிருக்கின்றது. சென்ற நோன்புப் பெருநாள் விடயத்தில் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா தவறு விட்டது! ஒரு தவறு நடந்தால் அதிலிருந்து பாடம் படித்து, திருந்தி அது போன்ற தவறு மீண்டும் வராமல் இருக்க வழிவகை செய்ய வேண்டும். ஆனால், பிரச்சினைக்கு மற்றுமொரு பிரச்சினையே தீர்வாக மாறி வருகின்றது. நோன்புப் பெருநாள் விவகாரத்தில் ஜம்இய்யதுல் உலமா விட்ட தவறால் இலங்கை முஸ்லிம்களில் பலரும் ஜம்இய்யதுல் உலமா மீது அவநம்பிக்கையை ...

Read More »

மகாமு இப்றாஹீம் (அல்குர்ஆன் விளக்கம்)

கஃபாவில் இருக்கின்ற மகாமு இப்றாஹீம் குறித்து இந்த வசனம் பேசுகின்றது. இதனை ஒரு அற்புதமாகவும், அத்தாட்சியாகவும் அல்குர்ஆன் எடுத்துக் காட்டுகின்றது. இது குறித்து மற்றுமொரு வசனம் இப்படிப் பேசுகின்றது “அதில் தெளிவான அத்தாட்சிகளும், மகாமு இப்றாஹீமும் உள்ளன. மேலும் அதில் யார் நுழைகிறாரோ அவர் அச்சமற்ற வராகி விடுவார். மனிதர்களில் அதற்குச் சென்றுவர சக்தி பெற்றவர்கள் மீது அல்லாஹ்வுக்காக அவ்வீட்டை ஹஜ் செய்வது கடமையாகும். எவர் நிராகரிக்கின்றாரோ நிச்சயமாக அல்லாஹ் அகிலத்தாரை விட்டும் தேவையற்றவன்.” (3:97) மகாமு இப்றாஹீம் என்பதற்கு, “இப்றாஹீம் நின்ற இடம்”, ...

Read More »

தராவீஹ் நீட்டிச் செய்வதா? கூட்டிச் செய்வதா? எது சிறந்தது?

“கியாமுல்லைல்” என்றால் இரவுத் தொழுகை என்பது அர்த்தமாகும். பொதுவாக, இஷாவின் சுன்னத்திலிருந்து பஜ்ர் வரை தொழப்படும் நபிலான வணக்கத்திற்கே இவ்வார்த்தை பயன்படுத்தப்படும். இது ரமழான் மற்றும் ரமழான் அல்லாத அனைத்துக் காலங்களிலும் ஆர்வமூட்டப்பட்ட ஆன்மீகப் பக்குவத்திற்கு அடிப்படையாக அமையக் கூடிய முக்கிய தொழுகையாகும். ரமழான் காலங்களில் இந்தத் தொழுகைக்கு அதிகூடிய முக்கியத்துவம் உள்ளது. பொதுவாக ரமழானில் தொழப்படும் கியாமுல்லைல் தொழுகைதான் “தராவீஹ்” என அழைக்கப் படுகின்றது. இந்தத் தொழுகையின் ரக்அத்துக்களின் எண்ணிக்கை எத்தனை என்பதில் அபிப்பிராயப் பேதம் உள்ளது. ஆரம்ப காலத்தில் அநேக கருத்து ...

Read More »