அழைப்புப் பணியின் அவசியம் (தொடர்-7)

மாற்ற வேண்டியது மார்க்கத்தையா? மக்களையா? இப்போது இன்னுமொரு சந்தேகம் எழலாம். தக்பீர் நெஞ்சில் கட்டினால் மக்கள் அடிக்கின்றனர், ஏசுகின்றனர் எனவே இந்த சின்ன விடயத்தை விட்டுக் கொடுக்கலாம் தானே? எங்கே கட்டினால் என்ன? இடத்தைக் கொஞ்சம் மாற்றிக் கொண்டால் என்ன குறைந்தா போகப்போகிறது? இப்படியும் சில அழைப்பாளர்கள் சிந்திக்கலாம். இஸ்லாமிய பிரச்சாரம் என்றால் மார்க்கக் கருத்திற்கேற்ப மக்கள் நடத்தை, சிந்தனை என்பவற்றை மாற்றுவதேயன்றி, மக்கள் நிலைக்கேற்ப மார்க்க முடிவுகளை மாற்றுவதல்ல என்பதை ஒவ்வொரு அழைப்பாளனும் அழுத்தமாக உள்ளத்தில் பதிய வைத்துக் கொள்ள வேண்டும். இத்தகைய ...

Read More »

அழைப்புப் பணியின் அவசியம் (தொடர்-6)

சின்ன விடயங்களைச் சொன்னால் என்ன? அழைப்புப்பணியில் ஈடுபடுவோர் சில்லறை விஷயங்களைப் பற்றி அலட்டிக் கொள்ளக் கூடாது. அடிப்படையையே ஆட்டங்காணச் செய்யும் எத்தனையோ ஓட்டைகள் இருக்கின்றன. அவற்றை அடைக்காமல் சில்லறை விஷயங்களில் மயிர்பிளக்கும் ஆராய்ச்சிக்காக நம் நேரத்தையும் காலத்தையும் விரயமாக்கலாமா? எனவே, அழைப்புப் பணியில் ஈடுபடுவோர் தாடி வைத்தல், அத்தஹியாத்தில் விரல் அசைத்தல், தக்பீர் நெஞ்சில் கட்டுதல், கத்தம் பாத்திஹா, கந்தூரி, மீலாது, மவ்லது, ராத்திபு, ஹழரா போன்ற சில்லறை விடயங்கள் பற்றி அலட்டிக் கொள்ளக் கூடாது. இல்லையென்றால் எத்தனையோ பெரிய, பெரிய விடயங்கள் பற்றி ...

Read More »

அழைப்புப் பணியின் அவசியம் (தொடர்-5)

கருத்து வேறுபாடுகளைக் கண்டுகொள்ளக் கூடாதா? “பிரச்சாரப் பணி புரிவோர் பிரச்சினைகளை உருவாக்கு பவர்களாக மாறிவிடலாகாது. எனவே “தஃவத்” செய்யும் போது கருத்து வேறுபாடுள்ள விடயங்களில் ஒரு “தாயி” தலையிடக் கூடாது. ஏனெனில், கருத்தொருமித்த விடயங்களில் தான் பிரச்சாரம் கடமையாகும். கருத்து வேறுபாட்டிற்குரிய விடயங்களில் தஃவத் என்பது இல்லை. எனவே, சமூகத்திற்கு முரணான விடயங்களை விட்டு விட்டு, சமூகத்திற்கு உடன்பாடான விடயங்களையே நாம் எமது பிரச்சார இலக்காகக் கொள்ள வேண்டும் என சில சகோதர அழைப்பாளர்கள் கருதுகின்றனர். மேற் குறிப்பிட்ட சிந்தனை நம்நாட்டில் கணிசமானவர்களிடம் தாக்கத்தை ...

Read More »