அல்லாஹ்வின் அழகுத் திருநாமங்கள்.

அல்லாஹ்வைப் பற்றி சரியாக அறிந்து கொள்வதென்பது இஸ்லாமிய அகீதாவின் அடிப்படைகளில் முக்கியமானதொன்றாகும். அல்லாஹ்வை அவனும் அவனது தூதர்களும் அறிமுகப்படுத்திய விதத்தில் அறிந்து, ஏற்றுக் கொள்ள வேண்டும். அல்லாஹ்வை அறிந்து கொள்ள அவனது அழகுத் திருநாமங்களும் பண்புகளும் முக்கிய வழிகளாகும். அல்லாஹ்வின் திருநாமங்கள் ‘அஸ்மாஉல் ஹுஸ்னா’ எனவும், அவனது பண்புகள் ‘அஸ்மாஉஸ் ஸிபாத்’ எனவும் குறிக்கப்படுகின்றன. அல்லாஹ்வின் திருநாமங்களின் எண்ணிக்கையை வரையறுக்க முடியாது. குறைந்தளவு எண்ணிக்கையாக 99 திருநாமங்கள் உள்ளன என ஹதீஸ்கள் குறித்துக்காட்டுகின்றன. அல்லாஹ் பற்றிய நம்பிக்கையில் இதன் முக்கியமானது. இதில் பிழைவிடுவது குப்ருக்கும் ...

Read More »

தொழுகையில் அனுமதிக்கப்பட்ட அம்சங்கள் – 3

    தொழும் போது தடுக்கப்பட்ட விடயங்கள் குறித்து நாம் பார்த்து வருகின்றோம். விரல்களைக் கோர்த்தல்: தொழும் போது ஒரு கையின் விரல்களை மறு கையின் விரல்களோடு கோர்ப்பது தடுக்கப்பட்டுள்ளது. ”உங்களில் ஒருவர் தனது வீட்டிலேயே வுழூச் செய்து கொண்டு பள்ளிக்கு வந்தால் அவர் திரும்பிச் செல்லும் வரையில் தொழுகையிலேயே இருக்கிறார்’ என நபி(ச) அவர்கள் கூறிவிட்டு, ‘இப்படிச் செய்யாதீர்கள்’ எனக் கூறி தமது விரல்களைக் கோர்த்துக் காட்டினார்கள்.’ அறிவிப்பவர்: அபூஹுரைரா(வ) ஆதாரம்: இப்னு குஸைமா- 439, ஹாகிம்-744 (இமாம் அல்பானி, தஹபி ஆகியோர் இதனை ...

Read More »

புனித மாதங்கள்

‘(போர் செய்யத் தடுக்கப்பட்ட) புனித மாதத்திற்குப் புனித மாதமே நிகராகும். புனிதப்படுத்தப்பட்ட (அவற்றின் புனிதம் மீறப்பட்டால் அவற்று)க்கும் பழிவாங்குதல் உண்டு! ஆகவே, எவரேனும் உங்கள் மீது வரம்பு மீறினால் அவர் உங்கள் மீது வரம்பு மீறியது போன்று நீங்களும் அவர் மீது வரம்பு மீறுங்கள்! மேலும், அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள். நிச்சயமாக அல்லாஹ் பயபக்தியாளர்களுடன் இருக்கின்றான் என்பதையும் அறிந்து கொள்ளுங்கள்.’ (2:194) புனித மாதங்களில் போர் செய்யக் கூடாது என இஸ்லாம் கூறுகின்றது. அந்தப் புனித மாதங்களில் எதிரிகள் போரை ஆரம்பித்தால் நாம் எதிர் ...

Read More »

அகீதா விடயங்கள் ஆய்வுக்குட்பட்டவை அல்ல

    அகீதா (நம்பிக்கை), மறைவான விடயங்கள் தொடர்பான குர்ஆனும் ஆதாரபூர்வமான ஹதீஸ்களும் சொல்லும் செய்திகள் ஆய்வுக்குரியவை அல்ல. அவை அப்படியே நம்பி ஏற்கப்பட வேண்டியவையாகும். அகீதா விடயங்களில் ஆய்வுகள் செய்வது வழிகேட்டை உருவாக்கக் கூடியதாகும். அல்குர்ஆன் மறைவான விடயங்கள் பற்றிக் கூறும் போது பின்வருமாறு குறிப்பிடுகின்றது. ‘அலிஃப், லாம், மீ;ம்.’ ‘இது வேதமாகும். இதில் எவ்வித சந்தேகமும் இல்லை. பயபக்தியாளர்களுக்கு நேர்வழி காட்டக்கூடியதாகும்.’ ‘அவர்கள் மறைவானவற்றை நம்பிக்கை கொள்வார்கள்ளூ தொழுகையையும் நிலைநாட்டுவார்கள்ளூ நாம் அவர்களுக்கு வழங்கியவற்றிலிருந்து (நல்லறங்களில்) செலவும் செய்வார்கள்.’ (2:1-3) மறைவான விடயங்கள் ...

Read More »

இஸ்லாம் அழைக்கிறது கடவுள் ஒருவனே!

கடவுள் பற்றி மக்கள் மத்தியில் பல கருத்துக்கள் நிலவுகின்றன. சிலர் கடவுள் இல்லை என்கின்றனர். மற்றும் சிலர் கோடான கோடி கடவுள்கள் இருப்பதாக நம்புகின்றனர். வேறும் சிலர் மனிதர்களில் சிலரைக் கடவுளின் அவதாரம் என்கின்றனர். இன்னும் சிலர் மனிதர்களில் சிலரையே கண் கண்ட கடவுளாக வழிப்பட்டு வருகின்றனர். இஸ்லாம் இறைவன் ஒருவன் இருக்கின்றான் என்று கூறுவதுடன் பல தெய்வ நம்பிக்கையைப் பலமாக எதிர்க்கின்றது. அத்துடன், மனிதன் கடவுளாகவும் முடியாது. கடவுள் மனித அவதாரம் எடுப்பதும் இல்லை எனக் கூறி கடவுளின் பெயரால் அரங்கேற்றப் படும் ...

Read More »

அல்குர்ஆன் விளக்கம் – மரண சாசனம்

    இந்த வசனம் மாற்றப்பட்ட வசனங்களில் ஒன்றாகும். ஒருவர் தனது சொத்தில் பெற்றோர், உறவினர்களுக்கு எவ்வளவு கொடுக்க வேண்டும் என மரண சாசனம் எழுதி வைப்பது ஆரம்பத்தில் கடமையாக இருந்தது. அதையே இந்த வசனம் கூறுகின்றது. இதன் பின்னர் ஸூறா நிஸாவின் ‘ஆயதுல் மவாரிஸ்’ எனப்படும் வாரிசுரிமைச் சட்டங்கள் தொடர்பான 4:11-12-13, 4:17 ஆகிய வசனங்கள் அருளப்பட்டன. இந்த வசனங்களில் ஒருவர் மரணித்துவிட்டால் அவரது பெற்றோர், மனைவி, ஆண்மக்கள், பெண் பிள்ளைகள், சகோதர சகோதரிகள் என்போர் அவரது சொத்தில் எத்தனை விகிதத்தைப் பெறுவார்கள் என்பது ...

Read More »

நல்லுறவை வளர்ப்பதையும் சமூக சீர்கேடுகளை ஒழிப்பதையும் இலக்காகக் கொள்வோம்.

    கடந்த சில வருடங்களாக நம் நாட்டின் முஸ்லிம்கள் பல்வேறு நெருக்கடி நிலைகளைச் சந்தித்து வந்தனர். முஸ்லிம்களுக்கு எதிரான இனவாத, மதவாத கருத்துக்களாலும் செயற்பாடுகளாலும் மனம் சொந்து போயிருந்தனர். இனவாதப் பேய் எவ்வித கட்டுப்பாடும் இல்லாமல் ஆட்டம் போட்டதைப் பார்த்து ஆடிப்போயிருந்தனர். நாட்டில் எப்போது வேண்டுமானாலும் ஒரு வன்முறை உருவாக்கப்படலாம் என்ற அச்ச நிலை நீடித்தது. இதனால் சமூக நல்லிணக்க நிகழ்ச்சிகள் முன்னெடுக்கப்பட்டன. பிற சமயத்தவர்களுடன் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. முஸ்லிம்களின் பொறுமைக்கும், துஆவுக்கும், அமைதியான ...

Read More »

அந்நிய தஃவா அந்நியமாய்ப் போனதேன்!

இலங்கை பல்லின மக்கள் வாழும் ஒரு நாடாகும். இதில் முஸ்லிம்களாகிய நாம் இரண்டாம் சிறுபான்மையினராக வாழ்ந்து வருகின்றோம். இலங்கையின் அரசியல் யாப்பு சிறுபான்மை சமூகங்களின் சகல உரிமைகளையும் உறுதி செய்துள்ளது. ஏனைய நாடுகளுடன் ஒப்பிடும் போது இலங்கை வாழ் முஸ்லிம்கள் அரசியல் ரீதியிலும் நல்ல நிலையில் இருக்கின்றனர் என்றால் அது மிகையல்ல. இலங்கை முஸ்லிம்களைப் பொருத்தவரையில் ஏனைய நாடுகளுடன் ஒப்பிடும் போது இஸ்லாமிய அறிவிலும், இஸ்லாமிய பண்பாடுகளைப் பேண வேண்டும் என்ற உணர்விலும், தனித்துவம் காக்க வேண்டும் என்ற எண்ணத்திலும் உயர்ந்தே உள்ளனர். எமது ...

Read More »