பெண்கள் பள்ளிக்குச் செல்லலாமா?

ரமழான் காலங்களில் பெண்கள் மஸ்ஜிதுக்குச் செல்கின்றனர். பெண்கள் மஸ்ஜிதுக்குச் சென்று தொழுவது ஆகுமானதா? என்ற ஐயம் பலருக்கும் எழலாம். பொதுவாக ரமழான் காலத்திலும் சரி, ஏனைய காலங்களில் ஐவேளைத் தொழுகைக்கும் சரி பெண்கள் பள்ளிக்குச் செல்ல அனுமதி உள்ளது. ஆனால், பெண்கள் பள்ளியில் தொழுவதை விட வீட்டில் தொழுவதே சிறந்ததாகும். நபி(ச) அவர்களது காலத்தில் பெண்கள் ஐவேளைத் தொழுகைக்கும் பள்ளிக்குச் சென்றுள்ளனர். நபி(ச) அவர்கள் பெண்கள் பள்ளிக்கு வருவதைத் தடுக்கவும் இல்லை, ஆர்வமூட்டவும் இல்லை. அவர்கள் பள்ளிக்கு வருவதாயின் பேண வேண்டிய ஒழுங்குகளைப் போதித்தார்கள். ...

Read More »

குர்ஆனைப் பார்த்து ஓதித் தொழலாமா?

நீண்ட நேரம் குர்ஆன் ஓதித் தொழுவதற்காக குர்ஆனைப் பார்த்து ஓதித் தொழலாமா என்ற சந்தேகம் சிலருக்கு உண்டு. அதிகம் மனப்பாடம் இல்லாதவர்கள் குர்ஆனைப் பார்த்து ஓதித் தொழுவதற்கு எந்தத் தடையும் இல்லை. நபி(ச) அவர்கள் சிறு குழந்தையைச் சுமந்து கொண்டு தொழுகை நடாத்தியுள்ளார்கள். ஆயிஷா(ரழி) அவர்களின் அடிமை ஒருவர் குர்ஆனைப் பார்த்து ஓதி அன்னையவர்களுக்கு இமாமத் செய்துள்ளார்கள். (புஹாரி) எனவே, குர்ஆனைப் பார்த்து ஓதித் தொழுவதற்குத் தடை இல்லை. இருப்பினும் முன்னால் பெரிய முஸ்ஹபை வைத்து அதைப் பார்த்துத் தொழ முடியுமாக இருந்தால் தக்பீரைப் ...

Read More »

நோன்பாளி மறதியாக உண்ணல், பருகல்

நோன்பு நோற்றவர் மறதியாக உண்டால், பருகினால் அவரது நிலை என்ன என்ற சந்தேகம் பலருக்கும் எழுவதுண்டு. மறதி என்பது மனித பலவீனங்களில் ஒன்றாகும். அல்லாஹ் மறதிக்கு மன்னிப்பளிக்கின்றான். ‘ஒரு நோன்பாளி மறதியாக உண்டால் அல்லது பருகினால் அவர் தனது நோன்பைப் பூர்த்தியாக்கட்டும். அல்லாஹ்வே அவருக்கு உணவளித்தான், நீர் புகட்டினான்’ என நபி(ச) அவர்கள் கூறினார்கள். (புஹாரி: 6669, இப்னுமாஜா: 1673)

Read More »

தராவீஹ் தொழுகையைப் பின்பற்றி இஷா தொழலாமா?

இரவு தாமதித்து பள்ளிக்கு வரும் போது இமாம் தராவீஹ் தொழுவித்துக் கொண்டிருக்கின்றார். அவரைப் பின்பற்றி நாம் இஷா தொழுகையைத் தொழலாமா? இரவு தாமதித்து பள்ளிக்கு வரும் போது இமாம் தராவீஹ் தொழுவித்துக் கொண்டிருக்கின்றார். அவரைப் பின்பற்றி நாம் இஷா தொழுகையைத் தொழலாமா என்ற சந்தேகம் பலருக்கும் எழுவதுண்டு. இது போன்ற சந்தர்ப்பங்களில் தனியாகத் தொழாமல் அல்லது வேறு ஜமாஅத் நடாத்தாமல் தராவீஹ் தொழுவிக்கும் இமாமைப் பின்பற்றித் தொழுவதே சிறந்ததாகும். இமாமினதும், மஃமூமினதும் நிய்யத்து ஒன்றாக இருக்க வேண்டிய அவசியமில்லை. சுருக்கித் தொழும் இமாமைப் பின்பற்றி ...

Read More »