நோன்பின் மகத்துவம். | கட்டுரை.

இஸ்லாம் போதிக்கும் அடிப்படையான இபாதத்துக்களில் நோன்பும் ஒன்றாகும். ரமழான் மாதத்தில் நோன்பிருப்பது இஸ்லாத்தின் அடையாளச் சின்னங்களில் ஒன்றாகும். நோன்பின் மாண்புகளையும் மகத்துவங்களையும் புரிந்து கொள்ள இஸ்லாம் அதற்கு வழங்கியுள்ள சிறப்புக்களை அறிந்து கொள்வது முக்கியமாகும். ஆரம்ப காலங்களில் குடும்பத்தில் மூத்தவர்கள் அனைவரும் நோன்பிருப்பதால் சிறுவர்களும் நோன்பு நோற்று வந்தனர். இதனால் நோன்பு என்பது அனைவராலும் கடைப்பிடிக்கப் படும் ஒரு இபாதத்தாக இருந்தது. இந்த நிலை இப்போது குறைந்து வருகின்றது. வளர்ந்தவர்களில் பலரும் தொழிலைக் காரணம் காட்டி நோன்பு நோற்பதைத் தவிர்த்து வருகின்றனர். இளம் சந்ததிகளிடமும் ...

Read More »

நோன்பை முறிப்பவை.

இஸ்லாம் கூறும் அடிப்படைக் கடமைகளில் நோன்பும் ஒன்றாகும். அல்லாஹ்வுக்காக சுபஹிலிருந்து மஃரிப் வரை உண்ணல், பருகல், உடலுறவில் ஈடுபடுதல் என்பவற்றைத் தவிர்ப்பதே நோன்பு என்று கூறப்படும். இந்த நோன்பை சில காரியங்கள் முறித்துவிடும். இதற்கு ‘முப்திலாதுஸ் ஸவ்ம்” (நோன்பை முறிப்பவை) என அறபியில் கூறப்படும். நோன்பு நோற்கும் நாம் இது குறித்து அறிந்திருப்பது அவசியமாகும். 1 – 2) உண்ணல், பருகல்: உண்பது, பருகுவது என்பன நோன்பை முறிக்கும். இது பொதுவாக அனைவரும் அறிந்ததே. இதற்குப் பின்வரும் வசனம் ஆதாரமாக அமைகின்றது. ‘…ஃபஜ்ரு நேரம் ...

Read More »

இஜ்திஹாதுடைய விடயங்களில் எதிர் பிரச்சாரம் இல்லை.

நன்மையை ஏவித் தீமையைத் தடுப்பது இஸ்லாத்தின் அடிப்படையான அடையாளங்களில் ஒன்றாகும். தஃவாவின் இலக்கு, விதிமுறை, அதைக் கையாளும் முறை, வரையறைகள் தொடர்பில் விடப்படும் பிழைகளும் உணர்ச்சி வசப்படும் நிகழ்வுகளும் இஸ்லாமிய உம்மத்தில் தேவையற்ற சர்ச்சைகளையும், பிளவுகளையும், குழப்பங்களையும் ஏற்படுத்தியுள்ளன. நன்மையை ஏவுதல் எனும் போது நாம் ஏவுவது நன்மையாக இருக்க வேண்டும். அது நன்மை என்பதற்கு குர்ஆன், சுன்னாவில் ஆதாரம் இருக்க வேண்டும். மார்க்கத்தில் ஆதாரம் இல்லாத பித்அத்தான செயற்பாடுகளை ஏவும் உரிமை எமக்கில்லை. ஒருவர் ஒரு செயலை நல்லது என எண்ணி செய்து ...

Read More »

அல்குர்ஆன் விளக்கம் “வட்டியை அல்லாஹ் அழிப்பான்”

‘அல்லாஹ் வட்டியை அழித்து, தர்மங்களை வளர்க்கின்றான். இன்னும் நிராகரித்துக் கொண்டிருக்கும் பாவிகள் எவரையும் அல்லாஹ் நேசிக்கமாட்டான்.” (2:276) இன்றைய உலகப் பொருளாதாரம் வட்டியுடன் பின்னிப் பிணைந்துள்ளது. பொருளாதார நெருக்கடிகள் நீங்க வேண்டும் என்றால் வட்டி முழுமையாக ஒழிக்கப்பட வேண்டும். உலக நாடுகள் அனைத்தும் பெரும் கடன் சுமையில் உள்ளன. அந்தக் கடனுக்கான வட்டியைக் கட்டுவதற்கே பல கோடிகளை மாதாந்தம் செலவு செய்ய வேண்டிய நிலையில் உள்ளன. அதனால் வரிக்கு மேல் வரியை விதித்து மக்கள் வாட்டி வதைக்கப்படுகின்றனர். தொழில் நிறுவனங்கள் வட்டி கட்டுவதற்காகப் பொருட்களின் ...

Read More »

முஃதஸிலாக்கள் – ஓர் விளக்கம் (04) | முஃதஸிலாக்களும் குர்ஆன் படைக்கப்பட்டது என்ற முரட்டு வாதமும்.

குர்ஆன் படைக்கப்பட்டது என்ற முட்டாள்தனமான ஒரு வாதத்தை முன்வைத்து அதில் முரட்டுத்தனமான பிடிவாதத்துடன் முஃதஸிலாக்கள் நடந்து கொண்டனர். முஃதஸிலாக்களின் இந்த முட்டாள்தனமான வாதங்களின் முதுகெலும்பை முறிக்கும் வண்ணம் அஹ்லுஸ் ஸுன்னா அறிஞர்கள் அடிமேல் அடி கொடுத்து இந்த குப்ர் கொள்கையை குழி தோண்டிப் புதைத்தனர். இந்தப் பகுதியில் முஃதஸிலாக்களின் வாதங்கள் சிலவற்றிற்கு அஹ்லுஸ் ஸுன்னா அறிஞர்களின் பதில்கள் சிலவற்றை நாம் பார்க்கவிருக்கின்றோம். செத்துப் போன வாதங்களை உயிர்ப்பிப்பதற்காக இந்த ஆக்கம் எழுதப்படவில்லை. இஸ்லாத்தின் பெயரில் வழிகெட்ட சிந்தனைகளை இறக்குமதி செய்த அனைவரும் குர்ஆன், ஹதீஸின் ...

Read More »

ஸலாதுத் தராவீஹ் (தராவீஹ் தொழுகை).

ரமழான் கால இரவுகளில் தொழப்படும் தொழுகைக்கு ‘தராவீஹ்” என்று கூறப்படும். ஹதீஸ்களில் இந்த வார்த்தை பயன்படுத்தப் பட்டிருப்பதற்கு நேரடியான ஆதாரத்தைக் காண முடியாது. ஏற்கனவே நான் குறிப்பிட்ட அடிப்படையில் இதுவும் ‘கியாமுல் லைல்” இரவுத் தொழுகையின் வட்டத்திற்குள் அடங்கக் கூடியதே! ‘அபூஸலமா அறிவித்தார். ரமலானில் நபி(ச) அவர்களின் தொழுகை எவ்வாறு இருந்தது என்று ஆயிஷா(ர) அவர்களிடம் கேட்டேன். அதற்கவர்கள் ‘நபி (ச) அவர்கள் ரமலானிலும் ரமலான் அல்லாத நாட்களிலும் பதினொரு ரக்அத்களை விட அதிகமாகத் தொழுததில்லை. நான்கு ரக்அத்கள் தொழுவார்கள். அதன் அழகையும் நீளத்தையும் ...

Read More »

கடமைகளை மறந்த உரிமைகள்.

மே 01 சர்வதேச தொழிலாளர் தினமாகக் கொண்டாடப்பட்டு வருகின்றது. ஏனைய சர்வதேச தினங்களை விட தொழிலாளர் தினம்தான் அரசியல் கட்சிகளால் கோலாகலமாகக் கொண்டாடப் படுகின்றது. தொழிலாளர் உரிமையைப் பேசுவதை விட கட்சியின் பலத்தைத் தூக்கிக் காட்டுவதற்கும் கட்சித் தொண்டர்களுக்கு உற்சாகத்தையும், உத்வேகத்தையும் ஊட்டுவதற்குமுரிய தினமாகவே இத்தினம் அரசியல் கட்சிகளால் பெரிதும் கொண்டாடப்படுகின்றது. ஆரம்ப காலங்களில் முதலாளித்துவ வர்க்கங்களால் தொழிலாளர்கள் நசுக்கப்பட்டனர். அவர்களது உரிமைகள் பறிக்கப்பட்டன. உழைப்புக்கு ஏற்ற ஊதியம் வழங்கப்படவில்லை. சக்திக்கு மீறிய பணிகள் அவர்கள் மீது சுமத்தப்பட்டன. இவ்வாறு ஆதிக்க சக்திகளாலும் முதலாளித்துவ ...

Read More »

அல்-குர்ஆன் விளக்க வகுப்பு – அத்தியாயம்: 96 | சூரா அல்-அலக்.

அல்-குர்ஆன் விளக்க வகுப்பு – அத்தியாயம்: 96 சூரா அல்-அலக். காலம்: 30.03.2016 புதன்கிழமை. இடம்: ஜாமிஉத் தவ்ஹீத் ஜும்ஆ மஸ்ஜித் – பறகஹதெனிய, இலங்கை.

Read More »

இஸ்லாமிய அகீதாவுக்கு அச்சுறுத்தலாகும் நவீன சவால்கள் |ஏறாவூர்.

றாபிதது அஹ்லிஸ் ஸுன்னா வழங்கும்; மட்டக்களப்பு பிராந்திய “ஈமானிய எழுச்சி மாநாடு.” காலம்: 22.04.2016 (வெள்ளிக்கிழமை) இடம்: அல்மர்கஸுல் இஸ்லாமி, ஏறாவூர். தலைப்பு: ”இஸ்லாமிய அகீதாவுக்கு அச்சுறுத்தலாகும் நவீன சவால்கள்”.

Read More »