ஜும்ஆப் பிரசங்கத்துக்கு முன் மஃஷர் ஓதுவது பற்றிய மார்க்கத் தீர்ப்பு | ஜூம்ஆத் தொழுகை-5 [பிக்ஹுல் இஸ்லாம்-043]

மஃஷர் முஅத்தின் சுன்னத்துத் தொழச் சொல்லி மக்கள் எல்லாம் எழுந்து தொழுத பின்னர் முஅத்தின் அஸாவைப் பிடித்துக் கொண்டு அரபியிலும் தமிழிலும் ஒரு குட்டி குத்பா செய்வார். அதுதான் மஃஷர் ஓதுதல் என்று மக்களால் கூறப்படுகின்றது. அந்தக் குட்டிக் குத்பாவில் ‘யா மஃஷரில் முஸ்லிமீன்’ என அவர் ஆரம்பிப்பார். அதில் மஃஷரில்” என்று வருவதால் மக்கள் மஃஷர் ஓதுதல் என்று இதற்குக் கூறுகின்றனர். அதில் அவர் குத்பாவை காது தாழ்த்திக் கேட்க வேண்டும் என்றும் உன் தோழனைப் பார்த்து பேசாதே என்றால் கூட உனது ...

Read More »

ஜும்ஆவின் முன் சுன்னத்து | ஜூம்ஆத் தொழுகை-4 [பிக்ஹுல் இஸ்லாம்-042]

ஜும்ஆவின் முன் சுன்னத்து முதல் அதான் கூறப்பட்ட பின்னர் முஅத்தின் ஜும்ஆவின் முன் சுன்னத்தை தொழுமாறு கூறுவார். அதன் பின் எல்லோரும் எழுந்து ஜும்ஆவின் முன் சுன்னத்துத் தொழுவர். இந்தப் பழக்கம் இலங்கையில் மட்டுமல்லாது மற்றும் பல நாடுகளிலும் உள்ளது. சென்ற இதழில் நபி(ச) அவர்கள் காலத்திலும் அபூபக்கர், உமர்(வ) இருவர் காலத்திலும் உஸ்மான்(வ) அவர்களின் ஆட்சியின் ஆரம்ப காலத்திலும் ஜும்ஆவுக்கு ஒரு அதான் மட்டுமே கூறப்பட்டு வந்தது. அந்த அதான் இமாம் வந்து மிம்பரில் அமர்ந்த பின்னர் கூறப்பட்டது என்பது குறித்து நாம் ...

Read More »

சொத்துப் பங்கீட்டில் பெண்ணுக்கு ஏன் இந்த அநீதி! | அல்குர்ஆன் விளக்கக் குறிப்புக்கள்-32 [சூறா அந்நிஸா–09]

“இரு பெண்களுக்குரிய பங்கு போன்றது ஒரு ஆணுக்கு உண்டு என உங்கள் பிள்ளைகள் விடயத்தில் அல்லாஹ் உங்களுக்குக் கட்டளையிடுகின்றான்.” (4:11) ஆணை விட பெண்ணுக்கு சொத்து அரைவாசி குறைவாகக் கொடுக்கும் படி இந்த வசனம் கூறுகின்றது. பெண்ணுக்கு பாதிப் பங்கு என்பது அநீதியானது என முஸ்லிம் அல்லாத பலரால் விமர்சிக் கப்படுகின்றது. இது குறித்த தெளிவு அவசியமாகும். நபி(ச) அவர்கள் இஸ்லாமிய பிரசாரம் செய்ய முன்னர் பெண்ணுக்கு எவ்வித சொத்துரிமையும் இருக்கவில்லை. அவளே சொத்துடன் சொத்தாகப் பகிரப்பட்டு வந்தாள். இஸ்லாம் பெண்ணுக்கு சொத்துரிமை வழங்கியது. ...

Read More »

கடனா? வஸிய்யத்தா? | அல்குர்ஆன் விளக்கக் குறிப்புக்கள்-31 [சூறா அந்நிஸா–08]

ஒருவர் தனது சொத்தில் 1/3 க்கு அதிகமாகாத அளவுக்கு வஸிய்யத் செய்யலாம். அந்த வஸிய்யத் பொது அமைப்புக்காகவும் இருக்கலாம். குர்ஆன் குறிப்பிட்ட, வாரிசுரிமை பெறாத தனி நபர்களாகவும் இருக்கலாம். இஸ்லாமிய அடிப்படையில் ஒருவரின் மரணத்தின் பின்னர்தான் சொத்துக்கள் பங்கிடப்படும். அவரது இறுதிக் கிரியைகளுக்கான செலவுகள் போன பின்னர் அவரது கடன்கள் மற்றும் வஸிய்யத்துக்கள் நிறைவேற்றப்பட்டதன் பின்னர்தான் அவரது சொத்துக்கள் பகிரப்பட வேண்டும். இது பற்றி குர்ஆன் குறிப்பிடும் போது, “(இவ்வாறு பங்கீடு செய்வது) அவர் செய்த மரண சாசனம், அல்லது கடன் என்பவற்றை நிறை ...

Read More »

பொதுச் சட்டத்தில் விதிவிலக்கு | அல்குர்ஆன் விளக்கக் குறிப்புக்கள்-30 [சூறா அந்நிஸா–07]

பொதுச் சட்டத்தில் விதிவிலக்கு “இரு பெண்களுக்குரிய பங்கு போன்றது ஒரு ஆணுக்கு உண்டு என உங்கள் பிள்ளைகள் விடயத்தில் அல்லாஹ் உங்களுக்குக் கட்டளையிடுகின்றான்.” (4:11) உங்கள் குழந்தைகளில் பெண்ணுக்குக் கொடுப்பது போன்ற இரண்டு மடங்கு ஆண் பிள்ளைக்குக் கொடுக்கப்பட வேண்டும் என்று இந்த வசனம் கூறுகின்றது. உங்கள் பிள்ளைகள் என்று இங்கு குறிப்பிடப்படுகின்றது. இந்தப் பொதுச் சட்டத்தில் இருந்து சிலர் விதிவிலக்காகுவார்கள். நபிமார்களின் வாரிசுகள்:ஒரு நபிக்குக் குழந்தை இருந்தால் அவரது சொத்துக்கு அந்தக் குழந்தை வாரிசாக மாட்டாது. அவரது சொத்துக்கள் (ஸதகா) தர்மமாகவே அமையும். ...

Read More »

குத்பாவுக்குச் செல்வதின் ஒழுங்கு | ஜூம்ஆத் தொழுகை [பிக்ஹுல் இஸ்லாம்-040]

குத்பாவுக்குச் செல்வதின் ஒழுங்கு குத்பாவுக்குச் செல்வது, அங்கு அமர்வது தொடர்பிலும் இஸ்லாம் எமக்கு வழிகாட்டியுள்ளது. இவற்றில் பெரும்பாலானவற்றை நாம் இன்று மீறும் விதத்திலேயே நடந்து கொள்கின்றோம். 1. நேரத்துடன் பள்ளிக்குச் செல்வது:ஜும்ஆவுக்காக நேரகாலத்துடன் பள்ளிக்குச் செல்வது சுன்னாவாகும். இந்த சுன்னா இன்று பெரும்பாலும் மீறப்பட்டே வருகின்றது. ஜும்ஆ ஆரம்பிக்கப்படும் போது பள்ளியில் கொஞ்சம் பேர்தான் இருக்கின்றனர். இரண்டாம் ஜும்ஆ முடியும் தறுவாயில் பள்ளிக்கு வெளியிலும் மக்கள் நின்று கொண்டிருக்கின்றனர். இந்த வழிமுறை தவறானதாகும். இமாம் மிம்பருக்கு ஏறும் முன்னர் வந்து விட வேண்டும். இமாம் ...

Read More »

“மஹர்” எனும் மணக்கொடை | அல்குர்ஆன் விளக்கக் குறிப்புக்கள்-28 [சூறா அந்நிஸா–05]

وَاٰ تُوا النِّسَآءَ صَدُقٰتِهِنَّ نِحْلَةً  فَاِنْ طِبْنَ لَـكُمْ عَنْ شَىْءٍ مِّنْهُ نَفْسًا فَكُلُوْهُ هَنِيْٓــٴًـــا مَّرِیْٓـــٴًﺎ‏ “பெண்களுக்கு (மஹர் எனும்) அவர்களின் மணக்கொடைகளை மனமுவந்து கொடுத்து விடுங்கள். அவர்கள் தாமாகவே அதில் எதையேனும் உங்களுக்கு மனமுவந்து விட்டுக் கொடுத்தால் அதைத் தாராளமாக மகிழ்வுடன் உண்ணுங்கள்.” (4:4) பெண்ணுக்கான மணக் கொடை மஹர் என்று கூறப்படும். இஸ்லாமியத் திருமணத்தில் இது முக்கியமானதாகும். இன்று முஸ்லிம்களில் பலரும் பெண் வீட்டாரிடம் சீதனம் பெறுகின்றனர். இது பெரும் குற்றமாகும். இஸ்லாம் பெண்ணுக்கு ‘மஹர்’ – ...

Read More »

இஸ்லாம் விமர்சனங்களும் விளக்கங்களும்

இஸ்லாம் குறித்து பலதரப்பாரும் பல்வேறுபட்ட விமர்சனங்களைச் செய்து வருகின்றனர். சிலர் ஏதேனும் ஒரு மத நிலைப்பாட்டில் இருந்து கொண்டே குறைமதியுடனும் குறை காணும் நோக்குடனும் குரோத மனப்பாங்குடனும் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். இத்தகைய விமர்சனங்களில் சிலவற்றுக்கு அவர்களின் மத நிலைப்பாட்டுடன் சம்பந்தப்படுத்தி சில விளக்கங்களை முன்வைத்தால் களத்தில் இருப்பவர்களுக்குப் பெரிதும் உதவியாக அமையலாம் எனக் கருதுகின்றேன். விபச்சாரத்தைத் தூண்டும் குர்ஆன்(?):லூத் நபியின் சமூகத்தினர் தன்னினச் சேர்க்கையாளர்களாக இருந்தனர். லூத் நபியின் வீட்டிற்கு வானவர்கள் மனித ரூபத்தில் வந்த போது அவர்களுடன் தவறாக நடக்க அந்த ...

Read More »

கடல் பிளந்த அதிசயம்! [திருக்குர்ஆன் கூறும் கதைகள்-32]

இஸ்ரவேல் சமூகம் எகிப்தில் அடிமைகளாக இருந்தனர். அவர்களது விடுதலைக்காக மூஸா நபி போராடினார். பிர்அவ்ன் இஸ்ரவேல் சமூகத்திற்கு விடுதலைக் கொடுக்கவும் இல்லை. அவர்களை நாட்டை விட்டும் வெளியே செல்ல அனுமதிக்கவும் இல்லை. இந்த நிலையில் தான் மூஸா நபி தமது தாயகப் பூமியான பலஸ்தீனத்திற்கு இஸ்ரவேல் சமூகத்தை அழைத்துக் கொண்டு இரவில் பயணித்தார். அவர்கள் பெண்கள் சிறுவர்கள் முதியவர்கள் என பயணித்தனர். ஒருநாள் அதிகாலை வேளை மூஸா நபியும் அவர்களது தோழர்களும் கடலை அடைந்தனர். கண்ணுக்கு எட்டிய தூரத்தில் பிர்அவ்னின் படை வந்து கொண்டிருந்தது. ...

Read More »