Non Muslims

June, 2017

April, 2017

  • 25 April

    பைபிளில் முஹம்மத் (07) – இயேசு அறிவித்த தேற்றவாளர் | கட்டுரை.

    இயேசு அறிவித்த தேற்றவாளர் ‘ஒரு இறைத்தூதர் வருவார், அவர் தன்னை விட மகிமை மிக்கவராக இருப்பார், அவர் சகல சத்தியங்களுக்குள்ளும் மக்களை வழி நடாத்துவார் அவரது போதனை முழு மனித சமூகத்துக்குமுரியதாக இருக்கும். அவரது போதனை மாற்றப்பட மாட்டாது. உலகம் உள்ளளவும் பின்பற்றத்தக்க வழிகாட்டலாக அது இருக்கும். அவர் வெறுமனே போதனை செய்பவராக மட்டும் இல்லாமல் குற்றவியல் சட்டங்கள் மூலம் மக்களைக் கண்டித்து வழிநடாத்துவார்’ என முஹம்மத் நபி பற்றி இயேசு முழுமையான முன்னறிவிப்புக்களைச் செய்துள்ளார். அவர் முஹம்மத் நபி குறித்துளூ பரிசுத்த ஆவியானவர், ...

  • 24 April

    ஈஸா நபியின் அற்பதப் பிறப்பு குளோனிங் ஆகுமா? | அல்குர்ஆன் விளக்கக் குறிப்புக்கள் – 06 | கட்டுரை.

    ஈஸா நபியின் அற்புதப் பிறப்பு குளோனிங் ஆகுமா? ‘மர்யமே! நிச்சயமாக அல்லாஹ் தன்னிடமிருந்துள்ள ஒரு வார்த்தையைக் கொண்டு உமக்கு (ஒரு குழந்தையை வழங்க) நன்மாராயம் கூறுகின்றான். அதன் பெயர் மர்யமின் மகன் ஈஸா அல்மஸீஹ் என்பதாகும். அவர் இம்மையிலும், மறுமையிலும் உயர்ந்த அந்தஸ்துடையவராகவும் (அல்லாஹ்வுக்கு) நெருக்கமானவர்களில் உள்ளவராகவும் இருப்பார்’ என வானவர்கள் கூறியதை (எண்ணிப் பாருங்கள்.)’ ‘மேலும் அவர் தொட்டிற் பருவத்திலும், வாலிபப் பருவத்திலும் மக்களுடன் பேசுவார். இன்னும் (அவர்) நல்லவர்களில் உள்ளவருமாவார் (என்றும் கூறினர்.)’ ‘(அதற்கு மர்யம்) ‘என் இரட்சகனே! எந்த ஆடவரும் ...

March, 2017

February, 2017

  • 12 February

    ஜல்லிக்கட்டுப் போராட்டம் உணர்த்தும் உண்மைகள் | கட்டுரை.

    ஜல்லிக்கட்டு என்றும் ஏறு தழுவுதல் என்றும் அழைக்கப்படும்; காளை மாட்டை அடக்கி வீரத்தை வெளிப்படுத்தும் தமிழர் பாரம்பரிய விளையாட்டை இந்திய நீதிமன்றம் தடுத்தது. தடுக்கப்பட்டது ஒரு விளையாட்டுத் தான்! இந்த விளையாட்டில் விபத்துக்களும் ஆபத்துக்களும் உள்ளன. ஆயிரம் விளையாட்டுக்கள் இருக்கும் போது ஒரு விளையாட்டைத் தடுத்தால் என்ன என்ற எண்ணத்தில் தமிழ் மக்கள் இதைக் கணிக்கவில்லை; தமிழர் பாரம்பரியத்தையும் கலாசாரத்தையும் தடுக்கும் செயலாகவே இதைக் கணித்தனர். ஜல்லிக்கட்டுக்காக காளை மாடுகளை வளர்க்கும் மரபு நீங்கி, காளை இனத்தை அழிக்கும் சதித்திட்டமாக இதைப் பார்த்தனர். இந்தத் ...

January, 2017

  • 15 January

    முஹம்மது நபியும் மாற்று மதத்தவர்களும் | Article.

    அஷ்ஷெய்க் எஸ்.எச்.எம். இஸ்மாயில் ஸலபி (ஆசிரியர் உண்மை உதயம்) நபி(ச) அவர்கள் இஸ்லாத்தின் போதகராவார். இஸ்லாத்தை பயங்கர வாதமாகவும் தீவிரவாதமாகவும் சித்தரிப்பவர்கள் முஹம்மது நபியைக் கொடூரமானவராகச் சித்தரிக்க முற்படுகின்றனர். நபி முஹம்மத்(ச) அவர்கள் மாற்று மதத்தவர்களுடன் எப்படி நடந்து கொண்டார்கள் என்பது வரலாற்றில் ஆதாரபூர்மாகப் பதியப்பட்டுள்ளது. முஹம்மது நபி கொடூர குணம் கொண்டவராக இருந்ததே இல்லை. ‘நபி(ச) அவர்கள் மென்மையான சுபாவமுடையவராக இருந்தார்கள்” என ஆயிஷா(ர) அவர்கள் அறிவிக்கின்றார்கள். நூல்: முஸ்லிம் 1213-137 அவர்கள் எதிலும் இலகுத் தன்மையை நேசிப்பவராகவே இருந்தார்கள். பின்வரும் நபிமொழி ...

  • 13 January

    பைபிளில் முஹம்மத். (05) |இஸ்மாயில் நபியின் சந்ததியில் இறைத்தூதர் முஹம்மத் நபி (ச) | Article.

    அஷ்ஷெய்க் எஸ்.எச்.எம். இஸ்மாயில் ஸலபி (ஆசிரியர்: உண்மை உதயம்) இஸ்மவேல் ஈஸாக் (இஸ்மாயீல்-இஸ்ஹாக்) ஆகிய இரு தூதர்களும் ஆசிர்வதிக்கப்பட்டனர். இஸ்ஹாக் நபியின் சந்ததியில்தான் ஏராளமான இறைத்தூதர்கள் வந்தார்கள். இஸ்மாயில் நபியின் சந்ததியில் ஒரேயொரு இறைத்தூதர்தான் வந்தார். அவர்தான் இறுதி இறைத்தூதர் முஹம்மத் நபியாவார்கள். முஹம்மது நபியை ஏற்றுக் கொள்ளாவிட்டால் இஸ்மவேல் – இஸ்மாயில் நபி ஆசிர்வதிக்கப்பட்டார் என்ற பைபிளின் செய்தி பொய்ப்பிக்கப்பட்டதாகிவிடும் என்பது குறித்து ஏற்கனவே நாம் விபரித்தோம். எதிர்பார்க்கப்பட்ட அந்த நபி முஹம்மத்(ச) அவர்களே!: ‘எருசலேமிலிருந்து யூதர்கள் ஆசாரியரையும் லேவியரையும் யோவானிடத்தில் அனுப்பி: ...

  • 13 January

    இஸ்லாம் இனவாதமுமல்ல மதவாதமுமல்ல. | Article.

    ஒருவர் ஒரு மொழியைப் பேசுவது மொழிவாதமாகாது! தனது மொழி அல்லாத ஏனைய மொழிகளை எதிர்ப்பதே மொழிவாதமாகவும் மொழி வெறியாவும் இருக்கும். இவ்வாறே ஒருவர் ஓரு இனத்தைச் சேரர்ந்தவராக இருப்பதிலும் பிரச்சினை இல்லை. தனது இனத்தின் முன்னேற்றத்திற்கு பாடுபடுவதும் பிழையில்லை. பிற இனத்தை இழிவாகப் பேசுவதும் எதிரர்ப்பதுமே இனவாதமாகும். இவ்வாறே ஒருவர் தனது மதத்தைப் பின்பற்றுவது தவறன்று. அது அவரவர் கொள்கையைப் பொறுத்ததாகும். ஆனால், தனது மதத்தைப் பின்பற்றும் ஒருவர், அடுத்தவர்கள் தமது மதத்தைப் பின்பற்றுவதைத் தடுப்பதும், அதற்கு முட்டுக்கட்டை போடுவதுமே மதவாதமாகும். இஸ்லாம் இந்த ...

November, 2016

  • 30 November

    அல்குர்ஆன் விளக்கக் குறிப்புகள் – தடம் புரளும் உள்ளங்கள் | Article.

    ‘எங்கள் இரட்சகனே! எங்களுக்கு நீ நேர்வழி காட்டிய பின்னர் எங்கள் உள்ளங்களை தடம்புறளச் செய்து விடாதே! மேலும், உன்னிட மிருந்து அருளை எமக்கு வழங்குவாயாக! நிச்சயமாக நீயே பெரும் கொடையாளனாவாய்.’ (3:8) முதஷாபிஹத்தான வசனங்களை வைத்து உள்ளத்தில் குழப்பமுள்ளவர்கள் குழப்பத்தை ஏற்படுத்துவார்கள் என்று எச்சரிக்கை செய்த பின்னர் இந்த துஆவை அல்லாஹ் எமக்குக் கற்றுத் தருகின்றான். நேர்வழி என்பது அல்லாஹ்வின் கையில் இருக்கின்றது. உள்ளத்தில் நோய் உள்ளவர்களின் குதர்க்கமான வாதங்களால் எமது உள்ளங்கள் தடம் புரண்டுவிடக் கூடாது என்பதற்காக இந்தப் பிரார்த்தனையை நாம் செய்ய ...