Current Issues

December, 2017

  • 2 December

    சிறுபான்மைச் சமூகம்!!

    உலகின் பல பாகங்களிலும் முஸ்லிம் மக்கள் முஸ்லிம் அல்லாத பிற சமூகங்களுக்கு மத்தியில் சிறுபான்மை சமூகமாக வாழ்ந்து வருகின்றனர். உலகில் வாழும் நால்வரில் ஒருவர் முஸ்லிம் எனும் அளவில் முஸ்லிம்களின் எண்ணிக்கை அதிகரித்திருந்தாலும் முஸ்லிம்களில் பெரும்பாலானவர்கள் பிற மக்களுக்கு மத்தியில் சிறுபான்மையாகவே வாழ்ந்து வருகின்றனர். சிறுபான்மை முஸ்லிம்கள் பிற சமூகங்களுடன் சேர்ந்து வாழும் போது பல்வேறுபட்ட சமய, சமூக, பொருளாதார, அரசியல் ரீதியிலான பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருகின்றனர். இந்தப் பிரச்சினைகளை எவ்வாறு அணுகுவது? இந்தப் பிரச்சினைகளுக்கான மார்க்க ரீதியிலான தீர்ப்பை எப்படிப் பெறுவது? ...

November, 2017

  • 20 November

    கட்டிக் காக்க வேண்டிய குடும்பக் கட்டமைப்பு!!

      சமூகக் கட்டமைப்பின் அத்திவாரமாகத் திகழ்வது குடும்பக் கட்டமைப்பாகும். குடும்பக் கட்டமைப்பைச் சிதைத்துவிட்டால் சமூகக் கட்டமைப்பு சிதைந்து சின்னாபின்னமாகிவிடும். மனிதனை ஓரளவாவது நிதான சிந்தனையுடன் செயற்பட வைப்பது குடும்பப் பொறுப்பாகும். குடும்பக் கட்டமைப்பு சிதைந்துவிட்டால் பொறுப்புணர்வு குண்றிவிடும். அதன் பின்னர் அவிழ்த்துவிட்ட மாடு போன்று அவரவர் அவரவரது மனம் போன போக்கில் போக ஆரம்பித்துவிடுவர். கணவன்-மனைவி என்கின்ற உறவு இல்லையென்றால் ஆணும் பெண்ணும் எங்கு வேண்டுமானாலும் போகலாம், எப்படி வேண்டுமானாலும் வாழலாம் என்கின்ற நிலை தோன்றிவிடும். இந்நிலை பெருமளவில் வெளியுலகில் ஏற்பட்டுவிட்டது. இவ்வாறே பெற்றார்-பிள்ளை ...

  • 2 November

    ரேஹிங்கியா ஒரு வரலாற்றுத் துரோகம்!!

    மியன்மார், அநியாயத்தின் அக்கிரமத்தின் புதிய அகராதி! ‘ஆங்சான் சூகி’ – ‘அசின் விராது’ கொடூரக் கொலைக் களத்தின் கோர முகம்! ரோஹிங்கிய முஸ்லிம்கள் நவீன யுகத்தின் கொத்தடிமைகள்! ஒரு வரலாற்றுத் துரோகத்தின் மறுவடிவம்! ஆம், வரலாறு நெடுடிகிலும் அராக்கான் பகுதி முஸ்லிம்கள் பௌத்த தீவிரவாதத்தால் கொடூரமான கொலைகள், கூட்டுக் கற்பழிப்புக்கள், கூட்டுக் கொலை, சிறுவர் சிறுமியர் சித்திரவதை செய்து சிதைக்கப்படுதல் என வரலாறு காணாத வன்கொடுமைகளைச் சந்தித்து வருகின்றனர். ரோஹிங்கிய முஸ்லிம்கள் மியன்மாரைச் சேர்ந்தவர்கள் அல்லர், வந்தேறிகள் என்று கூறித்தான் இந்த அநியாயங்களையும் அக்கிரமங்களையும், ...

October, 2017

September, 2017

August, 2017

  • 23 August

    பாவம் ஒரு பக்கம் பழி நம்பக்கமா?┇கட்டுரை.

    குற்றம் ஒரு பக்கம் இருக்க, குறைகள் மட்டும் முஸ்லிம் சமூகத்தை நோக்கி வீசப்படும் நிலைதான் உலக அளவில் உள்ளது. இந்த உலகம் அழிவுப் பாதையில் சென்று கொண்டிருந்த வேளையில் அதன் ஓட்டத்தைப் பிடித்து இழுத்து நிறுத்தி அதனைச் சரியான வழியில் நகர்த்தியது இஸ்லாம்தான். உலகை அறியாமை ஆண்ட போது அறிவொளி பாய்ச்சியது, அடக்குமுறையை அடக்கி உலகமெங்கும் நீதி நெறியைப் பரப்பியது! பெண் கொடுமையை ஒழித்தது. சாதி வேறுபாட்டை வேரோடு சாய்த்தது. சிசுக் கொலையை நிறுத்தியது. கற்பழிப்பு போன்ற துஷ்பிரயோகங்களை துடைத்தெறிந்தது. இவ்வாறு சரியான திசையில் ...

  • 13 August

    கத்தார் + சஊதி பிரச்சினையில் நடுநிலை தவறி நாறிப்போவதேன்!┇கட்டுரை.

    இஸ்லாம் நடுநிலையான மார்க்கமாகும். எதையும் பக்கச்சார்பு இல்லாமல் நடுநிலை தவறாமல் நோக்குவதையே இஸ்லாம் வலியுறுத்துகின்றது. இஸ்லாமிய உம்மத்தை அல் குர்ஆன் ‘உம்மதன் வஸதா” நடுநிலை சமுதாயம் என்றே அடையாளப்படுத்துகின்றது. ‘(மற்ற) மனிதர்களுக்கு நீங்கள் சாட்சி யாளர்களாக இருப்பதற்காகவும், இந்தத் தூதர் உங்களுக்குச் சாட்சியாளராக இருப்பதற் காகவும் இவ்வாறே உங்களை நடுநிலையான சமுதாயமாக ஆக்கினோம். ” (2:143) ஆனால், கொள்கை வெறியுடன் கலந்த இயக்க வெறி இந்த இஸ்லாமிய பண்பை அழித்து விட்டது. எதையும் இயக்கக் கண்ணாடி போட்டுப் பார்ப்பதையும் நோக்குவதையும் வழக்கமாக மாற்றியுள்ளது. அண்மையில் ...

  • 3 August

    பெருநாள் குத்பா┇இலங்கை அரசுக்கும் பெரும்பான்மை மக்களுக்கும் முஸ்லிம்களின் வேண்டுகோள்┇Shawwal1438┇ParagahadeniyaSL.

    ”பெருநாள் குத்பா”இலங்கை அரசுக்கும் பெரும்பான்மை மக்களுக்கும் முஸ்லிம்களின் வேண்டுகோள் ”PERUNAL KUTBA” ASH SHK S.H.M ISMAIL SALAFI @JTJM PARAGAHADENIYA 26-06-2017.

July, 2017

  • 11 July

    அழைப்புப் பணியில் ஸத்துத் தரீஃஆ┇கட்டுரை.

    இஸ்லாமிய சட்டத்துறையில் ‘ஸத்துத் தரீஆ’ என்பது முக்கியமான ஒரு பகுதியாகும். ஒரு ஆகுமான, நல்ல விடயத்தைச் செய்தால் தீய விளைவு ஏற்படும் என்றிருந்தால் அந்தத் தீய விளைவைத் தவிர்ப்பதற்காக அந்த நல்ல, ஆகுமான விடயத்தைத் தவிர்ப்பதையே ‘ஸத்துத் தரீஆ’ என்பார்கள். தீய விளைவு ஏற்படும் என்றால் நல்லதை விட்டு விடலாம் என்ற கருத்தைத் தரும் இந்த காயிதா அடிப்படை விதியை மையமாக வைத்து, இஸ்லாமிய பிரச்சார அமைப்புக்கள் சத்தியத்தைச் சொன்னால் சண்டை வரும், பிரச்சினை வரும், பிளவுகள் வரும் எனவே, பிரச்சினை களைத் தவிர்ப்பதற்காக ...