வரலாறு

November, 2014

  • 1 November

    நபிகளாரின் பார்வையில் நபித்தோழர்கள்

    இந்த உலகில் எவரும் பெறாத, இனியும் பெற முடியாத பல சிறப்புக்களை நபித்தோழர்களான ஸஹாபாக்கள் பெற்றுள்ளனர். நபி(ஸல்) அவர்களது நட்பு எனும் சிறப்பைப் பெற்றிருந்தனர். இதனை இனி யாரும் பெறமுடியாது. நபி(ஸல்) அவர்கள் மூலமாகவே நேரடியாக மார்க்கத்தை அறியும் அரிய வாய்ப்பைப் பெற்றனர். இனி இதை யாரும் பெற முடியாது. வஹி இறங்குவதையும் அதன் அடையாளங்களையும் கண்களால் கண்டனர். இனி இதை யாரும் அடைய முடியாது. இவ்வாறு யாரும் பெறமுடியாத பெரும் பாக்கியத்திற்குரியவர்களாக அல்லாஹ்வே அவர்களைத் தேர்ந்தெடுத்தான். தனது நபியின் நண்பர்களாக தனது மார்க்கத்தின் ...

  • 1 November

    ஆயுதக் குழு பூச்சாண்டி

    இலங்கை முஸ்லிம் அரசியல் தலைவர்களில் அலவி மௌலானா வித்தியாசமானவர். ஆழ்ந்த அனுபவமும், சமூகப்பற்றுமிக்கவராகவும் மதிக்கப்பட்டு வருபவர். ஏனைய அரசியல்வாதிகளை அரசியல்வாதிகளாகவே பார்த்து வந்த பொதுமக்களில் சிலர் அலவி மௌலானாவை ஆன்மீகத் தலைவர் போன்று மதித்து வந்தனர். மார்க்கப்பற்றுமிக்க அரசியல் தலைவர்களில் ஒருவராக மதிக்கப்படுபவர். பொதுமாக்களால் மொளலானா, மௌலானா என அன்பாக அழைக்கப்படுபவர். இவர் அண்மையில் வெளியிட்ட சமூகத்துரோகக் கருத்துக்களால் பொதுமக்களின் வெறுப்பையும், அதிருப்தியையும் சந்திக்க ஆரம்பித்துள்ளார். செத்துக் கொண்டிருக்கும் தமது அசத்தியக் கருத்துக்களைக் காப்பாற்றிக் கொள்வதற்காக அண்மைக் காலமாகச் சில கயவர்கள் தமக்கு மாற்றுக் ...

  • 1 November

    ஆளில்லா விமானங்களால் ஆட்டங்காணும் அமெரிக்கா

    ஈராக்கில் இரத்தம் குடித்து வந்த அமெரிக்க அரக்கர்கள் இம்மாத இறுதிக்குள் ஈராக்கை விட்டும் வெளியேறுகின்றனர். சதாம் ஹுஸைனிடம் பேரழிவு ஆயுதங்கள் இருக்கின்றன என்ற பொய்யைச் சொல்லி 2003 இல் ஈராக் மீதான போரைத் துவக்கியவர்கள் ஒன்பது ஆண்டு கொடூரத்திற்குப் பின்னர் வெளியேறுகின்றனர். இலங்கையில் இறுதிக்கட்டப் போரின் போது இடம் பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள், யுத்த குற்றங்கள் குறித்து விசாரணை வேண்டும் என மனித உரிமை ஆர்வலர்கள் அழுத்தம் கொடுத்து வருகின்றனர். ஈராக்கிற்கு எதிரான போர், அங்கே மீறப்பட்ட யுத்த தர்மங்கள், மனித உரிமை ...

October, 2014

  • 31 October

    முஹம்மது நபி (ஸல்) அவர்கள் ஏற்படுத்திய புரட்சி

    உலக வரலாறு பல்வேறுபட்ட புரட்சியாளர்களைக் கண்டுள்ளது. ஆனாலும், அவர்களின் புரட்சிகள் ஒரு நூற்றாண்டு நீங்குவதற்குள்ளேயே புஸ்வானமாகி, அல்லது நடைமுறைச் சாத்தியமற்றது என்பது புலனாகிப் போனதைக் காணலாம். ஆயினும், அநாதையாக பிறந்து, ஆடுமேய்த்து வளர்ந்து, எழுத வாசிக்கத் தெரியாது வாழ்ந்த அண்ணல் நபி(ச) அவர்கள் ஏற்படுத்திய வாழ்வின் சகல துறை சார்ந்த புரட்சி 14 நூற்றாண்டுகள் தாண்டியும் நிலைத்து நிற்பதைக் காணலாம். அவர்கள் ஏற்படுத்திய அந்த மகத்தான புரட்சி குறித்து சில விடயங்களை மிகச் சுருக்கமாகக் கோடிட்டுக் காட்டலாம் என எண்ணுகின்றேன். உலகம் பல்வேறுபட்ட ஆன்மீகப் ...

  • 31 October

    அடிமேல் அடித்தால் அமெரிக்காவும் அதிரும்

    சர்வதேச சண்டியன் அமெரிக்காவிற்கு இது இறங்கு முகம். தொடர்ச்சியாக சில அதிர்ச்சி வைத்தியங்களுக்கு உள்ளாகி அதிர்ந்து போயுள்ளது. ஈராக் ஆப்கானில் பட்ட அடியில் வாடி வதங்கியுள்ளது. அதன் பொருளாதாரம் சரசரவென சரிந்துள்ளது. இது ஒரு பேரிடியாகும். ‘அடி உதவுவது போல் அண்ணன் தம்பியும் உதவ மாட்டார்கள்’ என்று கூறுவார்கள். ஈராக் மற்றும் ஆப்கானில் பட்ட அடியால் படித்த பாடத்தின் காரணமாகத்தான் லிபியாவில் நேரடியாக மூக்கை நுழைக்காமல் கொல்லைப் புற வழியாகத் தனது கோர முகத்தைக் காட்டி வருகிறது. அண்மையில் ஐக்கிய நாடுகள் அவையில் பலஸ்தீனத்திற்குத் ...