பொதுவானவை

March, 2015

February, 2015

November, 2014

  • 2 November

    நெஞ்சை விட்டும் அகலாத மாறாத வடுக்கள்

    1995 இல் அதாவது 18 வருடங்களுக்கு முன்னர் எழுதிய கட்டுரையொன்றை இங்கே மீள் பிரசுரம் செய்கின்றோம். ஒரு முறை முழுமையாக வாசித்துப் பாருங்கள். இலங்கை அரசிற்கும் புலிகளுக்கு மிடையிலான யுத்த நிறுத்த ஒப்பந்தம் 1995 ஏப்ரல் 19 இல் கடற்படையின் “ரனசுரு” “சூரியர்” ஆகிய பீரங்கிப் படைகளைப் புலிகள் வெடிக்கச் செய்ததுடன் முறியடிக்கப்பட்டது. மூன்றாம் ஈழப் போர் ஆரம்பமானது. இத்தோடு இலங்கையில் ஓர் அரசியல் அலை ஏற்பட்டது எனலாம். பொதுமக்களில் அநேகமானோர் அன்றாட அரசியல் நிலவரங்களை அறிவதில் பெரிதும் ஆர்வம் காட்டினர். குறிப்பாக யுத்த ...

  • 2 November

    ஈரமுள்ள தமிழ் இதயங்கள் எங்கே!

    தமிழ்-சிங்கள இனப் பிரச்சினையின் போது முடிந்தவரை நாம் இரு தரப்பு மக்களுக்கும் உயிர்களைப் பாதுகாக்கும் விடயத்தில் ஒத்துழைப்பு வழங்கியுள்ளோம். தமிழ் இளைஞர் ஒருவருக்காக ஒரு முஸ்லிம் கிராமமே பாரிய சவாலைச் சந்தித்த ஒரு நிகழ்ச்சியைப் பகிர்ந்து கொள்ளலாம் என நினைக்கின்றேன். நடந்த ஆண்டு நினைவில் இல்லை. நான் சின்னப் பிள்ளை. அப்போது திருகோணமலை ஜமாலிய்யா நாம் வசித்து வந்தோம். எமது வீட்டு வேலியுடன் சிரிமாபுர என்ற சிங்களப் பகுதி ஆரம்பமாகியது. இனக் கலவரக் காலம் அது. ஒரு தமிழ் இளைஞர் முஸ்லிம் கடைக்கு பொருள் ...

  • 2 November

    சம்பிக்க ரணவக்கவின் சரித்திரப் புரட்டு

    இலங்கை முஸ்லிம்கள் மீது பெரும் பான்மை சமூகத்தினர் வெறுப்புக் கொள்ளும் விதத்தில் அவதூறுகள் பரப்பப்பட்டு வருகின்றன. இந்த நாட்டின் பெரும்பான்மை மக்களில் அதிகமானனோர் நல்ல மக்களாவர். ஒரு சின்னஞ் சிறு குழுவினர் முஸ்லிம்கள் மீது வெறுப்பேற்றும் வண்ணம் அவதூறு பரப்பி முஸ்லிம்களுக்கு எதிராக நாடு தழுவிய இனக்கலவரம் ஒன்றை ஏற்படுத்துவதற்கு முயற்சித்து வருகின்றனர். மஸ்ஜித்களுக்கு எதிராகச் செயற்படுதல், முஸ்லிம்களின் வர்த்தக நிலையங்களுக்கும், கல்வி நிலையங்களுக்கும் சிக்கலை உண்டுபண்ணுதல் என இவர்களது தேசத் தூரோகச் செயல்கள் நகர்ந்து கொண்டிருக்கின்றன. இது கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து வருவதை ...

  • 2 November

    புனித பூமி பலஸ்தீனும் முதல் கிப்லா மஸ்ஜிதுல் அக்ஸாவும்

    பலஸ்தீன் பூமியை இஸ்லாம் புனித பூமி என்று கூறுகின்றது. அங்குள்ள மஸ்ஜிதுல் அக்ஸா என்பது முஸ்லிம்களின் முதல் கிப்லாவாகும். இது குறித்த சில குறிப்புக்களை இந்த ஆக்கத்தில் முன்வைக்க விரும்புகின்றோம். 01. அருள் வளம் பொருந்திய பூமி: பலஸ்தீன் பூமி இஸ்ரவேல் சமூம் உருவாக முன்னரே பரகத் பொருந்திய பூமி என அழைக்கப்பட்டது. “அகிலத்தாருக்கு எப்பூமியில் நாம் பாக்கியம் அளித்தோமோ, அதன்பால் அவரையும் லூத்தையும் (அனுப்பிக்) காப்பாற்றினோம்.” (21:71) இந்த வசனத்தில் அகிலத்தாருக்காக அருள் பொழியப்பட்ட பூமி என பலஸ்தீன பூமி அழைக்கப்படுகின்றது. “எனது ...

  • 2 November

    பலரின் கண்களைத் திறக்கச் செய்து கண்மூடிய மங்கை

    09.01.2013 அன்று 11.40 மணியளவில் ரிஸானாவிற்கு வழங்கப்பட்ட மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. இந்த நிகழ்வு பாரிய அதிர்வுகளை உள்நாட்டிலும் சர்வதேச மட்டத்திலும் ஏற்படுத்தியுள்ளது. இஸ்லாத்தின் மீது காழ்ப்புணர்வு கொண்ட சிலர் இதைச் சாட்டாக வைத்து ஷரீஆ சட்டம் காட்டு மிராண்டித்தனமானது, கொடுமையானது எனக் கூப்பாடு போடுகின்றனர். மற்றும் சிலர் கொள்கை ரீதியாகவும் நடத்தை ரீதியாகவும் சவுதி மீதுள்ள கோபத்தைக் கக்குவதற்கான ஊடகமாக இந்த சம்பவத்தைக் கையில் எடுத்துள்ளனர். மற்றும் சிலர் ரிஸானாவை மன்னிக்காத அந்த இறந்த பிள்ளையின் தாயின் கல்மனதைச் சாடுகின்றனர். இவ்வாறு குற்றம் சாட்டி ...

  • 2 November

    அமெரிக்காவின் இரட்டை வேடம்

    அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு கிறிஸ்தவ மத குருவும், சினிமா தயாரிப்பாளரும் இணைந்து வெளியிட்ட ”Innocence of Muslims” ‘ என்ற சினிமா இன்று உலக முஸ்லிம்களையே குமுறச் செய்துள்ளது. இந்த சினிமாவின் ஒரு காட்சியைக் கண்டால் கூட உள்ளத்தில் கடுகளவு ஈமான் உள்ள முஸ்லிமும் எரிமலையாய் குமுறவே செய்வான். அமெரிக்காவினதும் கிறிஸ்தவ உலகினதும் விஸமத்தனத்தின் உச்சக் கட்டமாகவே இதனைக் கருத வேண்டியுள்ளது. நபியவர்களுக்கு உருவம் கொடுப்பதில்லை என்ற கொள்கையைக் கோடான கோடி முஸ்லிம்கள் 14 நூற்றாண்டுகளாக உறுதியுடன் பேணி வருகின்றனர். இதில் ஒரு முஸ்லிம்கூட ...