கேள்வி பதில்

July, 2015

  • 5 July

    நோன்பாளி மறதியாக உண்ணல், பருகல்

    நோன்பு நோற்றவர் மறதியாக உண்டால், பருகினால் அவரது நிலை என்ன என்ற சந்தேகம் பலருக்கும் எழுவதுண்டு. மறதி என்பது மனித பலவீனங்களில் ஒன்றாகும். அல்லாஹ் மறதிக்கு மன்னிப்பளிக்கின்றான். ‘ஒரு நோன்பாளி மறதியாக உண்டால் அல்லது பருகினால் அவர் தனது நோன்பைப் பூர்த்தியாக்கட்டும். அல்லாஹ்வே அவருக்கு உணவளித்தான், நீர் புகட்டினான்’ என நபி(ச) அவர்கள் கூறினார்கள். (புஹாரி: 6669, இப்னுமாஜா: 1673)

  • 5 July

    தராவீஹ் தொழுகையைப் பின்பற்றி இஷா தொழலாமா?

    இரவு தாமதித்து பள்ளிக்கு வரும் போது இமாம் தராவீஹ் தொழுவித்துக் கொண்டிருக்கின்றார். அவரைப் பின்பற்றி நாம் இஷா தொழுகையைத் தொழலாமா? இரவு தாமதித்து பள்ளிக்கு வரும் போது இமாம் தராவீஹ் தொழுவித்துக் கொண்டிருக்கின்றார். அவரைப் பின்பற்றி நாம் இஷா தொழுகையைத் தொழலாமா என்ற சந்தேகம் பலருக்கும் எழுவதுண்டு. இது போன்ற சந்தர்ப்பங்களில் தனியாகத் தொழாமல் அல்லது வேறு ஜமாஅத் நடாத்தாமல் தராவீஹ் தொழுவிக்கும் இமாமைப் பின்பற்றித் தொழுவதே சிறந்ததாகும். இமாமினதும், மஃமூமினதும் நிய்யத்து ஒன்றாக இருக்க வேண்டிய அவசியமில்லை. சுருக்கித் தொழும் இமாமைப் பின்பற்றி ...

  • 5 July

    நோன்பும் மருத்துவமும்

    நோன்பாளி சில மருந்துகளைப் பயன்படுத்தலாமா என்ற சந்தேகம் பலருக்குள்ளது. குறிப்பாக ஆஸ்துமா, பீனிஸ வருத்தம் உள்ளவர்கள் சுவாசிப்பதை இலகு படுத்துவதற்காக இன்ஹேலர் போன்றவற்றைப் பயன்படுத்துவர். நோன்பு இருக்கும் போது வீசிங் பிரச்சினை ஏற்பட்டால் இதைப் பயன்படுத்தலாமா என்றால் தாராளமாகப் பயன்படுத்திக் கொள்ளலாம். இவ்வாறே ஆவி பிடிப்பதாக இருந்தாலும் பிடிக்கலாம். பெக்லேட் போன்ற டெப்லட் துகல்களைப் பொருத்த வரையில் தவிர்ப்பது சந்தேகத்திற்கு அப்பாற்பட்டதாகும். ஏனெனில், மருந்து துகல்கள் வாய்வழியே உள்ளே செல்கின்றது. எனவே, இதைத் தவிர்ப்பதே நல்லது. இவ்வாறே ஊசி மூலம் மருந்து ஏற்றுவதிலும் தப்பில்லை. ...

  • 5 July

    நோன்பாளி பல் துலக்குதல்?

    நோன்பாளி பல் துலக்கலாமா என்ற சந்தேகம் பலருக்கு உள்ளது. நோன்பாளி பகல் நேரத்தில் பல் துலக்கக் கூடாது என்ற கருத்து தவறானதாகும். பொதுவாக இஸ்லாம் அடிக்கடி பல் துலக்குவதை வரவேற்கின்றது. குறிப்பாக ஒவ்வொரு தொழுகைக்காகவும் பல் துலக்குவது கட்டாய ஸுன்னத்துக்களில் ஒன்றாகும். எனவே, நோன்போடு இருக்கும் போது பல் துலக்குவதில் எந்த தடையும் இல்லை.

  • 5 July

    நோன்பும் நிய்யத்தும்

    நோன்புக்கு மட்டுமன்றி எல்லா அமல்களுக்கும் நிய்யத் முக்கியமானதாகும். நிய்யத் என்றால் குறித்த அமலை அல்லாஹ் வுக்காக செய்கின்றேன் என்று உள்ளத்தில் எண்ணுவதாகும். நிய்யத் என்பது உள்ளத்துடன் சம்பந்தப்பட்ட அமலாகும். அதற்கும் வாயால் மொழிவதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. நோன்புக்கான நிய்யத்தைப் பொருத்த வரையில் பர்ழான நோன்பு நோற்கும் ஒருவர் சுபஹுடைய நேரத்திற்கு முன்னரே நோன்பு நோற்பதாக உறுதி கொள்ள வேண்டும். ‘யார் பஜ்ருக்கு முன்னர் நோன்பு நோற்பதாக உறுதி கொள்ளவில்லையோ அவருக்கு நோன்பே இல்லை’ என நபி(ச) அவர்கள் கூறினார்கள். (தாரமி: 1845, அபூதாவூத்: ...

June, 2015

March, 2015

December, 2014