கட்டுரைகள்

October, 2014

  • 25 October

    ரமழானை வரவேற்போம்

    அருள் வளம் பொருந்திய அற்புத மாதமாம் ரமழான் வந்துள்ளது. அல்ஹம்துலில்லாஹ்! பாவ மன்னிப்பும் இரட்டிப்பு நன்மையும் வழங்கப்படுகின்ற இந்தப் புனித மாதத்தின் சிறப்புக்களை அறிந்து பக்குவத்துடனும் அழகிய முறையிலும் இம்மாதத்தினை அனுசரித்து நடக்க நாம் முற்பட வேண்டும். குர்ஆனின் மாதம்: இந்த ரமழானுக்கு அல்லாஹ் வழங்கிய எல்லாப் புனிதத்துவத்துக்கும் அடிப்படையாக அமைவது இம்மாத்தில் இறுதி வேதமாம் அல்குர்ஆன் அருளப்பட்டதேயாகும். “ரமழான் மாதம் எத்தகையதென்றால், அதில்தான் மனிதர்களுக்கு வழிகாட்டியாகவும், நேர்வழியைத் தெளிவுபடுத்தக் கூடியதாகவும், (சத்தியத்தையும், அசத்தியத்தையும்) பிரித்தறிவிக்கக் கூடியதாகவுமுள்ள அல்குர்ஆன் இறக்கி வைக்கப்பட்டது. எனவே, உங்களில் ...

  • 25 October

    இயக்க வெறி தவிர்த்து இயக்கங்கள் கொள்கை தெளிவு பெற வேண்டும்

    எமது நாட்டில் தீவிரவாத இனவாதக் குழுவொன்று சில வருடங்களாகவே இனவாத விஷ விதையை நாட்டில் வளர்த்து வருகின்றது. இக்குழுவினால் சிறுபான்மை சமுதாயங்களுக்கு குறிப்பாக முஸ்லிம் சமூகத்திற்கு எதிரான எண்ண அலைகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. முஸ்லிம்களது மத, பொருளாதார, சமூக நிலவரங்கள் பேரினவாத சஞ்சிகைகளில் இலக்குகளாக மாறியுள்ளன. முஸ்லிம்களது பள்ளிவாசல்களையும் வர்த்தக நிலையங்களை யும் இதனால்தான் குறிவைக்கின்றனர். அண்மைக் காலமாக பேரினச் சூறாவளி அளுத்கம, பதுளைப் பகுதியில் மையம் கொண்டு பாரிய அளவில் உயிர், பொருள், சேதங்களை விளைவித்து விருகின்றன. நாடு பூராக இஸ்லாமிய எதிர்ப்புணர்வை ...

  • 25 October

    அன்ஸாரித் தோழர்கள் அண்ணன் எப்ப சாவான் திண்ணை எப்ப காலியாகும் என பதவிக்காகக் காத்திருந்தவர்களா?

    நபித்தோழர்கள் அன்ஸாரிகள், முஹாஜிர்கள் என இரண்டாக வகுக்கப்படுவர். முஹாஜிர் என்றால் மக்காவில் இருந்து மதீனாவுக்கு ஹிஜ்ரத் சென்றவர்களைக் குறிக்கும். அன்ஸார் என்றால் உதவியாளர்கள் என்பது அர்த்தமாகும். தம்மை நோக்கி ஹிஜ்ரத் செய்து வந்தவர்களுக்காக அர்ப்பணிப்புக்களைச் செய்த மதீனாவாசிகளே அன்ஸாரிகள் என அழைக்கப்படுகின்றனர். ஷியாக்களும், தவ்ஹீதின் பெயரில் தமிழ் பேசும் சமூகத்திற்கு மத்தியில் நபித்தோழர்களைத் திட்டித் தீர்க்கும் வழிகெட்ட கொள்கையுடையவர்களும் இந்த அன்ஸாரி களைப் பதவி மோகம் கொண்டவர்களாக சித்தரித்து வருகின்றனர். நபி(ஸல்) அவர்கள் மரணித்த பின்னர் அன்ஸாரித் தோழர்கள் “ஸகீபா பனீ ஸாஇதா” எனும் ...

  • 25 October

    பிடிவாதத்திற்கும் சகிப்புத் தன்மைக்கும் இடையில் விட்டுக் கொடுப்பு

    தமிழில் மொழிப்பெயர்க்கப்ட்ட அஷ்ஷைய்க் பின்பாஸ்(ரஹ்) அவர்களின் ஃபத்வா கேள்வி: நமக்குள் ஒன்றுபட்ட விடயங்களில் ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்வோம். முரண்பட்ட விடயங்களில் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து நடந்து கொள்வோம்! என்ற இமாம் ஹஸனுல்பன்னா (ரஹ்) அவர்களது கூற்று சரியானதுதானா? பதில்: அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்! அவனது தூதர் மீதும் அவரது தோழர்கள் மீதும் அல்லாஹ்வின் ஸலவாத்தும் ஸலாமும் உண்டாவதாக! மேலே குறிப்பிட்ட கூற்று (தப்ஸீர்) அல்மனாரின் ஆசிரியர் ஷைக் ரஸீத் ரிழா அவர்களுடைய கூற்றாகும். பின்னர் ஷைய்க் ஹஸனுல்பன்னா(ரஹ்) அவர்கள் தனது ரஸாயில்களில் இதனைக் ...

  • 25 October

    அல்லாஹ் தீட்டும் வர்ணம்

    அல்குர்ஆன் விளக்கவுரை: “அல்லாஹ்வின் வர்ணத்தைப் (பின்பற்றுங்கள்.) அல்லாஹ்வை விட வர்ணம் தீட்டுவதில் மிக அழகானவன் யார்? நாம் அவனையே வணங்குவோராக இருக்கின்றோம் (எனக் கூறுவீர்களாக!)” (2:138) அன்றைய கிறிஸ்தவர்களுக்குக் குழந்தை பிறந்தால் 7-ஆம் நாளில் அக்குழந்தையை மஞ்சள் கலந்த நீரில் குளிப்பாட்டுவார்கள். அதனை கத்னாவுக்குப் பகரமான செயற்பாடாகவும் அவர்கள் எடுத்துக் கொள்வார்கள். இவ்வாறு குளிப்பாட்டுவதன் மூலம் அந்தக் குழந்தை கிறிஸ்தவனாக மாறுவதாகவும் அவர்கள் கருதினர். இவ்வாறு ஒருவனை இஸ்லாத்துக்கு எடுப்பதற்கு எவ்விதமான சடங்குகளும் இல்லாது இருப்பதைக் குறையாகக் கண்டனர். இதற்குப் பதிலாகவே இந்த வசனம் ...

  • 25 October

    நபித்தோழர்கள் நம்பிக்கை கொண்டது போல் நம்பிக்கை கொள்வதே சிறந்த முறையாகும்

    அல்குர்ஆன் விளக்கவுரை: “அல்லாஹ்வையும், எங்களுக்கு இறக்கப்பட்டதையும், இப்றாஹீம், இஸ்மாஈல், இஸ்ஹாக், யஃகூப் ஆகியவர்களுக்கும் (இவரது) சந்ததிகளுக்கும் இறக்கப்பட்டவற்றையும், மூஸாவுக்கும், ஈஸாவுக்கும் (மற்றும் ஏனைய) நபிமார்களுக்கும் அவர்களது இரட்சகனிடமிருந்து வழங்கப்பட்டவற்றையும் நம்பிக்கை கொண்டோம். அவர்களில் எவருக்கிடையிலும் நாம் வேற்றுமை பாராட்ட மாட்டோம், நாங்கள் அவனுக்கே முற்றிலும் கட்டுப்பட்டவர்கள் என்று நீங்களும் கூறுங்கள்.” (2:136) இதே கருத்து பின்வரும் வசனங்களிலும் கூறப்படுகின்றன. “இத்தூதர் தனது இரட்சகனிடமிருந்து தனக்கு இறக்கப்பட்டதை நம்பிக்கை கொண்டுள்ளார். முஃமின்களும் (நம்பிக்கை கொண்டுள்ளனர். அவர்கள்) அனைவரும் அல்லாஹ்வையும், அவனது வானவர்களையும், அவனது வேதங்களையும், அவனது ...

  • 25 October

    அழைப்பாளர்களுக்கு – குத்பா

    ஒருவர் உரை நிகழ்த்தும் முன்னர் அல்லது குத்பாவுக்காக மிம்பரில் ஏறுவதற்கு முன்னர் சில தனிப்பட்ட நபர்கள் வந்து இன்றைய குத்பாவில் இதைப் பற்றிச் சொல்லுங்கள், அதைப் பற்றிச் சொல்லுங்கள் எனக் காதைக் கடிப்பார்கள். சில வேளை அது அவரது தனிப்பட்ட கோப தாபத்தைத் தீர்ப்பதற்காக விடப்படும் கோரிக்கையாகவும் இருக்கலாம். எனவே, ஒரு கதீப் நிதானமான நிலைப்பாட்டில் இருக்க வேண்டும். அடுத்தவர்கள் உசுப்பேற்றுவதற்காக வெல்லாம் உச்சிக் கொப்பில் ஏறி நின்று குதிக்கக் கூடாது. நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள், நிர்வாகிகள் தரும் தலைப்புக்குள் உரைகளை அமைத்துக் கொள்வதே பொருத்தமானதாகும். ...

  • 25 October

    உஸ்மான்(வ) அவர்கள் மீதான குற்றச்சாட்டுக்கள். யதார்த்தம் என்ன?

    குலபாஉர் ராஷீதூன்களில் அதிகமான விமர்சனங்களைச் சந்தித்தவராக உஸ்மான்(வ) அவர்கள் திகழ்கின்றார்கள். தனது மரணத்தின் பின் நுபுவ்வத்தின் அடிப்படையிலான கிலாபத் குறிப்பிட்ட காலம் இருக்கும் என நபி(ச) அவர்கள் கூறினார்கள். அவ்வாறு நபியவர்களால் நபித்துவத்தின் அடிப்படையில் அமைந்த கிலாபத் எனும் போற்றப்பட்ட ஆட்சியில் உஸ்மான்(வ) அவர்களின் ஆட்சியும் ஒன்றாகும். அன்று வாழ்ந்த இஸ்லாத்தின் எதிரிகளும், இஸ்லாத்தின் பெயரில் மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்த விரும்பியவர்களும் உஸ்மான்(வ) அவர்களது கிலாபத் நிர்வாகம் தெடர்பிலும் மார்க்க விவகாரங்கள் தொடர்பிலும் பல குற்றச்சாட்டுக்களை முன்வைத்தனர். ஆட்சித் தலைவர் மீது அவநம்பிக்கையை ...

  • 25 October

    இயேசுவை இழிவுபடுத்தும் பைபிலும் கண்ணியப்படுத்தும் குர்ஆனும்

    இயேசுவின் பிறப்பு பற்றி அல்குர்ஆன் மிகவும் தெளிவாகவும் உறுதியாகவும் இரண்டாம் கருத்துக்கு இடமில்லாமலும் கூறி அவரை கண்ணியப்படுத்தியுள்ளமையும், பைபிள் இது பற்றிக் கூறும் போது அல்குர்ஆன் அளவுக்கு அவரது அற்புதப் பிறப்பு பற்றி உறுதிப்படக் கூறாத ஒரு போக்கைக் கடைப்பிடிப்பதுடன் அவர் யோசோப்பின் குமாரன் என அறியப்பட்டார் எனக் கூறி அதில் சந்தேகத் தன்மையையும் உண்டு பண்ணுகின்றது. இந்த அடிப்படையில் இயேசுவின் பிறப்பு விடயத்தில் அல்குர்ஆன் அவரை கண்ணியப்படுத்தும் அதே வேளை பைபிள் அவரை அசிங்கப்படுத்துகின்றது என்பதைச் சென்ற இதழில் நோக்கினோம். இயேசுவின் பரம்பரை: ...

  • 25 October

    மரணித்தும் வாழும் உயிர்த்தியாகிகள் (அல்குர்ஆன் விளக்கம்)

    ‘அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்பட்டோரை மரணித்தவர்கள் என்று கூறாதீர்கள். மாறாக, அவர்கள் உயிருடன் இருக்கின்றார்கள். ஆனால், நீங்கள் உணர்ந்து கொள்ளமாட்டீர்கள்.’ (2:154) அல்லாஹ்வின் பாதையில் உயிர்த்தியாகம் செய்தவர்களை ‘அம்வாத்’ – ‘இறந்தவர்கள்’ என்று கூறாதீர்கள். அவர்கள் உயிருடன் இருக்கின்றனர். எனினும், நீங்கள் உணரக் கூடிய விதத்தில் அல்ல என்று இந்த வசனம் கூறுகின்றது. ‘அல்லாஹ்வின் பாதையில் கொல்லப் பட்டவர்களை மரணித்தவர்கள் என்று நிச்சயமாக நீர் எண்ண வேண்டாம். மாறாக, அவர்கள் தமது இரட்சகனிடத்தில் உயிருடன் இருக்கின்றனர். (அவனால்) அவர்கள் உணவளிக்கப்படுகின்றனர்.’ ‘அவர்களுக்கு அல்லாஹ் தனது அருட்கொடையிலிருந்து ...