கட்டுரைகள்

November, 2014

  • 2 November

    யஃகூப் நபியின் வஸிய்யத்து (அல்குர்ஆன் விளக்கம்)

    “யஃகூபுக்கு மரணம் வந்தபோது (யூதர்களே!) நீங்கள் (அங்கு) பிரசன்ன மாக இருந்தீர்களா? அவர் தனது பிள்ளைகளிடம், “எனக்குப் பின் நீங்கள் எதை வணங்குவீர்கள்?” எனக் கேட்ட போது அவர் கள், “உமது இரட்சகனும் உமது மூதாதையர்களாகிய இப்றாஹீம், இஸ்மாஈல், இஸ்ஹாக் ஆகியோரின் இரட்சகனுமாகிய ஒரே இரட்சகனையே வணங்கி அவனுக்கே நாங்கள் முற்றிலும் கட்டுப்பட்டவர்களாக நடப்போம்” எனக் கூறினர்.” (2:133) யஃகூப் நபி தனது மரண வேளையின் போது தனது புதல்வர்களை அழைத்துத் தனது மரணத்திற்குப் பின்னர் தடம் புரண்டுவிடாது அல்லாஹ் ஒருவனையே வணங்க வேண்டும் ...

  • 2 November

    மகாமு இப்றாஹீம் (அல்குர்ஆன் விளக்கம்)

    கஃபாவில் இருக்கின்ற மகாமு இப்றாஹீம் குறித்து இந்த வசனம் பேசுகின்றது. இதனை ஒரு அற்புதமாகவும், அத்தாட்சியாகவும் அல்குர்ஆன் எடுத்துக் காட்டுகின்றது. இது குறித்து மற்றுமொரு வசனம் இப்படிப் பேசுகின்றது “அதில் தெளிவான அத்தாட்சிகளும், மகாமு இப்றாஹீமும் உள்ளன. மேலும் அதில் யார் நுழைகிறாரோ அவர் அச்சமற்ற வராகி விடுவார். மனிதர்களில் அதற்குச் சென்றுவர சக்தி பெற்றவர்கள் மீது அல்லாஹ்வுக்காக அவ்வீட்டை ஹஜ் செய்வது கடமையாகும். எவர் நிராகரிக்கின்றாரோ நிச்சயமாக அல்லாஹ் அகிலத்தாரை விட்டும் தேவையற்றவன்.” (3:97) மகாமு இப்றாஹீம் என்பதற்கு, “இப்றாஹீம் நின்ற இடம்”, “இப்றாஹீம் ...

  • 2 November

    அரசியல், சமயத் துறையில் நலிந்துவிட்ட சமூகம்

    இலங்கை முஸ்லிம்களின் சமய, சமூக, அரசியல் நிலவரம் தொடர்ந்தும் சட்டியிலிருந்து அடுப்புக்குள் விழும் கதையாகவே தொடர்ந்து கொண்டிருக்கின்றது. சென்ற நோன்புப் பெருநாள் விடயத்தில் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா தவறு விட்டது! ஒரு தவறு நடந்தால் அதிலிருந்து பாடம் படித்து, திருந்தி அது போன்ற தவறு மீண்டும் வராமல் இருக்க வழிவகை செய்ய வேண்டும். ஆனால், பிரச்சினைக்கு மற்றுமொரு பிரச்சினையே தீர்வாக மாறி வருகின்றது. நோன்புப் பெருநாள் விவகாரத்தில் ஜம்இய்யதுல் உலமா விட்ட தவறால் இலங்கை முஸ்லிம்களில் பலரும் ஜம்இய்யதுல் உலமா மீது அவநம்பிக்கையை ...

  • 2 November

    சுன்னாவுக்கும் பித்ஆவுக்குமிடையில் ஷஃபான் மாத நோன்பு

    ஷஃபான் மாதம் சுன்னத்தான நோன்புகள் அதிகமாக நோக்கத்தக்க சிறந்த மாதமாகும். இருப்பினும் இந்த மாதத்தின் 15 ஆம் நாளில் விஷேடமாக நோன்பு நோற்கப்படுகின்றது. அது “பராத்”, “விராத்” என முஸ்லிம்களால் அழைக்கப்படுகின்றது. இது பித்அத்தான வழிமுறையாகும். ஷஃபான் 15 ஆம் இரவில்தான் குர்ஆன் அருளப்பட்டது என்று சிலர் நம்புகின்றனர். அல்குர்ஆன் ரமழான் மாதத்தில் அருளப்பட்டது என்ற திருக்குர்ஆனின் கூற்றுக்கு எதிரான கருத்தாக இது உள்ளது. சுன்னத்தான நோன்புகளை நோற்காது மார்க்கம் அனுமதிக்காத 15 ஆம் நாள் நோன்பை மட்டும் மக்கள் நோற்று வருவதால் ஷஃபான் ...

  • 2 November

    அல்லாஹ்வின் நாட்டத்திற்கும் தக்லீத் சிந்தனைக்கும் இடையில் சூனியம் – புதிய பித்னா

    ஒன்லைன் PJ இணைய தளத்தில் சூனியம் பற்றிப் பேசும் 2:102 வசனத்திற்கு புதிய விளக்கம் ஒன்று அளிக்கப்பட்டுள்ளது. தான் உருவாக்கிய வழிகெட்ட சிந்தனையைப் பாதுகாக்க குர்ஆனைக் கூட திரிவுபடுத்த முனைந்துவிட்டனர் என்பதற்கு இது சிறந்த ஆதாரமாக அமைந்துவிட்டது. இந்த விளக்கத்தை அவதானித்தால் குர்ஆனுடன் விளையாடும் இவர்களது வழிகெட்ட போக்கையும் அல்லாஹ்வையும், ரஸூலையும் மிஞ்சிப் போகும் இவர்களது வழிகெட்ட சுபாவத்தையும் புரிந்து கொள்ளலாம். அந்த வெளியீட்டில் புதிய சூனிய பித்னா என்று உருவாக்கப்பட்டுள்ளது. அதாவது, இல்லாத ஒரு இலக்கண விதியைச் சொல்லி குர்ஆனில் உள்ள ஒரு ...

  • 2 November

    இந்தியத் தேர்தலும் இலங்கை இனவாதமும்

    இந்தியாவின் தேர்தல் முடிவுகள் முஸ்லிம்களுக்கும் ஏனைய சிறுபான்மை சமூகங்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்து அடிப்படைவாத அமைப்பான பாரதீய ஜனதா கட்சி அதிக ஆசனங்களைக் கைப்பற்றியுள்ள அதே வேளை, காங்கிரஸைப் படுபாதாளத்தில் வீழ்த்தியுள்ளது. குஜராத் முஸ்லிம்களுக்கு எதிரான கலவரத்திற்கு முக்கிய காரணமாக சொல்லப்பட்ட “மோடி” இந்தியாவின் 16-ஆம் பிரதமராகிவிட்டார். இந்த அரசியல் மாற்றம் ஆசியாவில் மதவாதமும் இனவாதமும் கூர்மை பெற்று வருவதற்கான வெளிப்படையான அடையாளமாகக் கொள்ளலாம். பர்மாவில் பற்றி எரியும் பௌத்த மதவாதத் தீ இலங்கையில் தாக்கத்தை ஏற்படுத்தியது போல், இந்தியாவில் இந்துத் தீவிரவாத அமைப்பின் ...

  • 2 November

    ஸஹாபாக்களை “கிரிமினல்” என வசைபாடும் கொள்கை விஷக்கிருமிகள்

    அம்ரிப்னுல் ஆஸ்(ரலி) அவர்கள் ஒரு கிரிமினலா? அம்ரிப்னுல் ஆஸ்(ரலி) அவர்கள் ஒரு சிறந்த நபித்தோழராவார். போர்த் திறமையும், தந்திரமும், தலைமைத்துவப் பண்பும் நிறைந்த இவரை நபி(ஸல்) அவர்கள் போர்களுக்குத் தளபதியாக நியமித்துள்ளார்கள். இவர் மூலம் பல வெற்றிகளை இஸ்லாமிய உலகு அடைந்துள்ளது. இவரின் தலைமையில்தான் எகிப்தும் கைப்பற்றப்பட்டது! இவரது வரலாறு, இவர் இஸ்லாத்தை ஏற்ற நிகழ்வு, இஸ்லாத்திற்கு முற்பட்ட இவரது வாழ்வு, இவரது மரணம் அனைத்தும் விரிவாகப் பார்க்கப்பட வேண்டிய அம்சங்களாகும். தமிழ் உலகில் தவ்ஹீதுக்கு ஏகபோக உரிமை கோரும் சிலரால் இவர், “கிரிமினல்” ...

  • 2 November

    அறிவீனத்திற்கும் தெளிவிற்கும் மத்தியில்

    “பத்வா” என்றால் மார்க்கத் தீர்ப்பு என்று பொருள்படும். பத்வா வழங்கும் மார்க்க அறிஞர் “முப்தீ” என அழைக்கப்படுவார். இஸ்லாமியச் சட்டவாக்கத்தில், மார்க்கச் சட்டம் குறித்துக் கேட்கப்படும் கேள்விக்கு அது குறித்த மார்க்கத்தின் சட்டத்தை எடுத்துச் சொல்வதே பத்வா எனப்படுகின்றது. இஸ்லாம் என்பது ஒரு வாழ்க்கைத் திட்டமாகும். எனவே ஒரு முஸ்லிமின் முழு வாழ்வும் மார்க்க வழிகாட்டலுக்கு உட்பட்டதாக இருக்க வேண்டும். அவனது இபாதத், இல்லற வாழ்வு, பொருளீட்டல் அனைத்தையும் அவன் மார்க்க அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு செயற்படும் போது அலை அலையாகக் கேள்விக் ...

  • 2 November

    இலங்கைத் தாயின் இனிய மைந்தர்களாக…

    பலநூறு ஆண்டுகளாக அந்நியரின் ஆதிக்கத்தின் கீழ் இருந்த இலங்கை, 1948 இல் சுதந்திரம் பெற்றது. உலக நாடுகள் பலவும் காலனித்துவத்தின் கோரப் பிடியிலிருந்து விடுதலை பெற்ற தினத்தை சுதந்திர தினமாகக் கொண்டாடுகின்றன. இந்த அடிப்படையில் பெப்ரவரி மாதம் நான்காம் திகதி என்பது எமது தாய் நாட்டின் சுதந்திர தினமாகும். அந்நிய ஆதிக்கத்திலிருந்து நாடு விடுதலை பெற்றமை என்பது இந்த நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்கும் மகிழ்ச்சியைத் தரும் செய்தி என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. பொதுவாக அரசியல் ரீதியில் அந்நியரின் நேரடியான ஆதிக்கத்தின் கீழ் இருந்து விடுதலை ...

  • 2 November

    மூஸா(அலை) அவர்களது சமூகமும் அவர்களது மீறப்பட்ட வாக்குறுதிகளும்

    இன்னும் “மூஸாவே! அல்லாஹ்வைக் கண்கூடாக நாங்கள் காணும் வரை உம்மை நம்பிக்கை கொள்ளமாட்டோம்” என்று நீங்கள் கூறியபோது, நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கும் போதே உங்களை இடியோசை பிடித்துக் கொண்டதை (எண்ணிப்பாருங்கள்.)” (2:55) அல்லாஹ்வை நேரடியாகக் காணும் வரை உம்மை நாம் நம்பமாட்டோம் என இஸ்ரவேல் சமூகம் கேட்ட போது அவர்கள் இடி முழக்கத்தால் தாக்கப்பட்டார்கள் என இந்த வசனம் கூறுகின்றது. இது இஸ்ரவேல் சமூகத்தின் ஆணவத்திற்கும், அவநம்பிக் கைக்கும் வழங்கப்பட்ட தண்டனையாகும். அவர்களது இந்த வேண்டுதல் மிக மோசமானது என்பதைப் பின்வரும் வசனம் எடுத்துக்காட்டுகின்றது. ...