கட்டுரைகள்

February, 2019

  • 4 February

    பாகிலானி(ரஹ்) அவர்களும் அவர்களின் சாதுர்யமும் | Article | Anan Ismail | Tamil | Unmai Udayam.

    By: Anan Ismail முஹம்மத் இப்னு தையிப் இப்னு முஹம்மத் இப்னு ஜப்பார் இப்னுல் காஸிம் அல் காலி அபூ பக்கர் அல் பாகிலானி எனப்படும் இவர் ஹிஜ்ரி 338 ஆம் ஆண்டு தொடக்கம் 402 ஆம் ஆண்டு வரை இவ்வுலகில் வாழ்ந்தார். இக்காலகட்டத்தில் வாழ்ந்த மிகப்பெரும் அறிஞர்களில் இவரும் ஒருவராக மதிக்கப்படுகின்றார். இவர் பல்துறைகளிலும் தேர்ச்சி பெற்றிருந்தார். ஹதீஸ் கலையில் இவருக்கு இருந்த அறிவினால் ஷெய்குஸ் ஸுன்னா என்று புனைப்பெயர் சூட்டப்பட்டார். மேலும், இவர் மிக்க பேச்சாற்றல் மிக்கவ ராகவும் விளங்கினார். அதனால் ...

January, 2019

  • 28 January

    இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால் எல்லாம் சௌக்கியமே! | Politics | Sri Lanka |World | Ismail Salafi | Unmai Udayam |Article.

    ஐம்பது நாள் அரசியல் குழப்பம் முடிவுக்கு வந்துள்ளது. இந்த அரசியல் குழப்பங்களால் இலங்கையின் நன்மதிப்புக்கு சரிவு ஏற்பட்டது. நாணயத்தின் மதிப்பிலும் சரிவு ஏற்பட்டது. இலங்கையின் சுற்றுலாத்துறை வளர்ச்சியில் பாரிய வீழ்ச்சி…. என பல சரிவுகள் ஏற்பட்டன. அதனை சரி செய்ய வேண்டிய நிலையில் நாடு உள்ளது. நாட்டில் ஏற்பட்ட இந்த குழப்பநிலை முற்று முழுதாக முடிவுக்கு வந்துவிடவில்லை. விவாகரத்தை வேண்டி நிற்கும் தம்பதிகள் போல ஜனாதிபதியும் பிரதமரும் செயற்பட்டால் நாட்டைக் கட்டியெழுப்ப முடியாது. நாடு குட்டிச் சுவராகிவிடும். தமது அரசியல் காய் நகர்த்தல்கள் அனைத்தும் ...

  • 16 January

    குத்பாவின் ஒழுங்குகள் | பிக்ஹுல் இஸ்லாம் (41) | Article | Ismail Salafi.

    ஜும்ஆத் தொழுகை என்பது இரண்டு குத்பா உரைகளையும் இரண்டு ரக்அத்துத் தொழுகையையும் கொண்டது என்பதை முன்னரே குறிப்பிட்டோம். ஜும்ஆ தொழுகை நிறைவு பெற குத்பா என்பது ஷர்த்தாகும். நபி(ச) அவர்கள் தன் வாழ்நாளிலே எந்த ஜும்ஆத் தொழுகையையும் குத்பா இல்லாமல் நிகழ்த்தியதே இல்லை. அத்துடன், ‘நம்பிக்கை கொண்டோரே! வெள்ளிக்கிழமை தினத்தில் தொழுகைக்காக அழைப்பு விடுக்கப்பட்டால், அல்லாஹ்வை நினைவு கூர்வதன்பால் நீங்கள் விரைந்து செல்லுங்கள். இன்னும், வியாபாரத்தையும் விட்டு விடுங்கள். நீங்கள் அறிந்து கொள்பவர்களாக இருந்தால் இதுவே உங்களுக்குச் சிறந்ததாகும்.” (62:9) இந்த வசனத்தில் குத்பாவின்பால் ...

  • 1 January

    ஹதீஸ் குர்ஆனுக்கு முரண்படுமா?|குர்ஆன் விளக்கக் குறிப்புக்கள் (24)

    فَاِذَاۤ اُحْصِنَّ فَاِنْ ا تَيْن بِفَاحِشَة فَعَلَيْهِن نِصْف مَا عَلَى الْمُحْصَنٰتِ مِنَ الْعَذَابِ‌ ؕ “அவர்கள் திருமணம் முடித்த பின்னர் மானக்கேடான செயலைச் செய்து விட்டால், சுதந்திரமான கன்னிப் பெண்களுக்கு வழங்கும் தண்டனையில் அரைவாசியே அவர்களுக்குரிய தண்டனையாகும்.” (4:25) மேற்படி வசனத்தை மொழிபெயர்ப்புச் செய்வதில் ஏற்பட்ட குளறுபடியில் இலங்கையில் பெரிய கொள்கைக் குழப்பமே ஏற்பட்டது எனலாம். இந்த அத்தியாயத்தின் 24, 25 ஆம் வசனங்களில் அல் முஹ்ஸனாத் என்ற பதம் நான்கு முறை பயன்படுத்தப்பட்டுள்ளது. அல் முஹ்ஸனாத் என்பதற்கு திருமணம் ...

December, 2018

  • 29 December

    பீ.ஜே. யின் கருத்துக்களை மீளாய்வு செய்யுங்கள்| தொடர் 02 | கட்டுரை.

    குர்ஆனின் நேரடி அர்த்தத்திற்கு மாற்றமாகத் தனது விளக்கத்தை முற்படுத்துதல். இவரது தர்ஜமா விளக்கக் குறிப்புக்களில் அநேகமாக இந்தத் தவறைச் செய்துள்ளார். உதாரணமாக: ஆதம், ஹவ்வா இருவரையும் அல்லாஹ் சுவர்க்கத்தில் நிர்வாணமாக விடவில்லை. ஆடையுடன்தான் விட்டான் என குர்ஆன் கூறுகின்றது. ‘நிச்சயமாக அதில் நீர் பசித்திருக்க மாட்டீர். மேலும், நீர் நிர்வாணமாக இருக்கவும்; மாட்டீர்.” (20:118) ‘சுவர்க்கத்தில் நிர்வாணமாக மாட்டீர்கள்” என அல்லாஹ் கூறுகின்றான். அவர்கள் தடுக்கப்பட்ட கனியைப் புசித்ததும் நிர்வாணமானார்கள். ஆனால், அவர் தனது 174 விளக்கக் குறிப்பில் அவர்கள் சுவர்க்கத்தில் நிர்வாணமாக இருந்ததாகவும் ...

  • 27 December

    ஜும்ஆவின் முன் சுன்னத்து | பிக்ஹுல் இஸ்லாம் (39)

    ஜும்ஆத் தொழுகை ஜும்ஆவுக்கு இரண்டு அதான் கூறுவது தொடர்பில் சென்ற இதழில் ஆராய்ந்தோம். ஜும்ஆவின் முன் சுன்னத்து: முதல் அதான் கூறப்பட்ட பின்னர் முஅத்தின் ஜும்ஆவின் முன் சுன்னத்தை தொழுமாறு கூறுவார். அதன் பின் எல்லோரும் எழுந்து ஜும்ஆவின் முன் சுன்னத்துத் தொழுவர். இந்தப் பழக்கம் இலங்கையில் மட்டுமல்லாது மற்றும் பல நாடுகளிலும் உள்ளது. சென்ற இதழில் நபி(ச) அவர்கள் காலத்திலும் அபூபக்கர், உமர்(ர) இருவர் காலத்திலும் உஸ்மான்(ர) அவர்களின் ஆட்சியின் ஆரம்ப காலத்திலும் ஜும்ஆவுக்கு ஒரு அதான் மட்டுமே கூறப்பட்டு வந்தது. அந்த ...

  • 25 December

    குழந்தையின் நடத்தை பிறழ்வுகள்; காரணங்களும் தீர்வுகளும்.- 03

    கனவன் மனைவி இருவரும் தத்தமது கடமைகளை நிறைவேற்றி அடுத்தவர் உரிமையை மதித்து நடந்தால் அமைதியான குடும்பம் அமையும் நல்ல சந்ததிகள் உருவாகுவார்கள். இதன் பின்பும் கணவனின் மோசமான பண்புகளாலோ, மனைவியின் மோசமான பண்புகளாலோ இருவருக்குமிடையிலான உடன் பாட்டிற்கு சிரமம் ஏற்பட்டாலே அவர்களுக்கிடையிலான வாழ்க்கையை நிலைபெற செய்ய முடியாவிட்டாலோ கணவன் தலாக் எனும் முடிவை எடுக்கும் முன் கீழ்வரும் படித்தரங்களைப் பூரணமாக நிறைவேற்றுவது கடமையாகும். நல்லுபதேசம் செய்தல்: நல்லுபதேசம் ஈமானுடையோருக்கு பயனளிக்கும் என்ற வகையில் இது அமையும். படுக்கையில் இருந்து பிரித்தல் இது உளவியல் ரீதியான ...

  • 23 December

    ஷிர்க்கும் சிலந்தி வீடும் | Article

    அல் குர்ஆன் அடிப்படையான சில விடயங்களைக் கூட உதாரணங்கள் கூறி விளங்க வைக்கும். அவ்வாறு அது கூறும் உதாரணங்களை ஆழமாக நோக்கினால் அல்லாஹ்வின் இறைமையையும் அல்குர்ஆன் இறைவேதம் என்பதையும் உறுதி செய்வதாக அமைந்திருக்கும். இந்த வகையில் இணைவைத்தலுக்கு அல்லாஹ் உதாரணம் கூறும் போது சிலந்தி வீட்டை உதாரணமாகவும் உவமையாவும் கூறுகின்றான். ‘அல்லாஹ்வையன்றி (வேறு) பாதுகாவலர்களை எடுத்துக் கொண்டோரின் உதாரணம், சிலந்தியின் உதாரணத்தைப் போன்றதாகும். அது ஒரு வீட்டை அமைத்துக் கொண்டது. நிச்சயமாக வீடுகளில் மிகப் பலவீனமானது சிலந்தியின் வீடாகும். அவர்கள் அறிபவர்களாக இருந்தால் (இவர்களை ...

  • 22 December

    விபச்சாரக் குற்றமும் நான்கு சாட்சியமும்.

    அல்குர்ஆன் விளக்கக் குறிப்புக்கள் : விபச்சாரக் குற்றமும் நான்கு சாட்சியமும். “உங்கள் பெண்களில் எவரேனும் மானக் கேடான செயலைச் செய்துவிட்டால் அவர்களின் மீது (அதை நிரூபிக்க) உங்களில் நான்கு சாட்சிகளை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். அவர்கள் சாட்சி கூறினால் அப்பெண்கள் மரணிக்கும் வரை, அல்லது அல்லாஹ் அவர்களுக்கு ஒரு வழியை ஏற்படுத்தும் வரை அவர்களை வீடுகளில் தடுத்து வையுங்கள்.” (4:15) இந்த வசனத்தின் முதல் பகுதி விபச்சாரக் குற்றத்தை நிரூபிப்பதற்கு நான்கு சாட்சிகள் தேவை என்கின்றது. அந்நான்கு சாட்சிகளும் தவறை நேரடியாகக் கண்டவர்களாகவும் இருக்க வேண்டும். ...

  • 19 December

    அஹ்லுல் பித்ஆ | அடிப்படை அடையாளம். | Article.

    நபி(ச) அவர்களது மரணத்திற்குப் பின்னர் இஸ்லாத்தின் பெயரில் உருவாக்கப்பட்ட சிந்தனைகள், செயல்கள், வார்த்தைகள் அனைத்தும் பித்அத்துக்கள் ஆகும். இந்த பித்அத்துக்கள் அனைத்தும் வழிகேடுகளாகும். தனக்குப் பின்னர் இந்த உம்மத்தில் பித்அத்துக்கள் தோன்றும் என்றும் அப்போது நபி(ச) அவர்களது சுன்னாவையும் நேர்வழி நடந்த கலீபாக்களின் வழிமுறைகளையும் இறுகப் பற்றிப் பிடிக்கும் படியும் நபி(ச) அவர்கள் எமக்கு வஸிய்யத் செய்துள்ளார்கள். ஒரு பித்அத்தான செயல் உருவாக்கப்பட்டால் அந்த பித்அத்தைச் செய்யும் பித்அத்வாதி சுன்னாவும் மார்க்கமும் விதித்த கடமைகளுக்குக் கொடுக்காத முக்கியத்துவத்தை அதற்குக் கொடுப்பதைக் காணலாம். பித்அத்வாதிகளின் நிலை ...