அரசியல்

January, 2015

December, 2014

November, 2014

  • 25 November

    முஸ்லிம்களின் அரசியல் இலக்கு

    ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்படா விட்டாலும் ஆளும் கட்சியும் எதிர்க் கட்சிகளும் தேர்தல் காய் நகர்த்தல்களில் முழு மூச்சுடன் கவனம் செலுத்தி வருகின்றனர். அண்மையில் நடந்த தேர்தல்கள் குறிப்பாக, ஊவா தேர்தல் அரசின் வாக்கு வங்கி சரிந்து வருவதைத் தெளிவாக உணர்த்தியது. இதனால் திடீரென ஜனாதிபதித் தேர்தலை நடாத்தி தன்னை நிலை நிறுத்திக் கொள்ள வேண்டிய இக்கட்டான நிலை ஆளும் தரப்புக்கு ஏற்பட்டுள்ளது. இதே வேளை, ஊவா தேர்தல் பிரதான எதிர்க்கட்சிக்குப் பெரும் உற்சாகத்தையூட்டியுள்ளது. முயற்சித்தால் கூட்டணி அமைத்தால் ஜனாதிபதித் தேர்தலில் வெற்ற பெறலாம் என்ற ...

  • 20 November

    திருக்குர்ஆன் தீவிரவாதத்தைப் போதிக்கின்றதா?

    இலங்கை சிங்களவர்களைப் பெரும்பான்மையாக் கொண்ட ஒரு நாடாகும். இந்த நாட்டின் அரசியல் யாப்பின் பிரகாரம் பௌத்த மதத்தைப் பேணிப் பாதுகாப்பது அரசின் தலையாய கடமையாகும். இந்த அடிப்படையில் இந்த நாட்டு அரசு பௌத்த மதத்தைப் பாதுகாப்பதற்காகப் பாடுபட்டால் அதை யாரும் குறை காண முடியாது. இதே போன்று இந்நாட்டு மதகுருமார் தத்தமது மார்க்கத்தைப் போதனை செய்து பரப்புவதற்கும் பாதுகாப்பதற்கும் முயற்சிப்பதையும் யாரும் குறை காணமாட்டார்கள். குறை காணவும் முடியாது. இந்த வகையில் பௌத்த மதத்தைப் பாதுகாப்பதற்கென BBS முற்பட்டால் அது அவர்களது உரிமையும் கடமையுமாகும். ...

  • 2 November

    இலங்கை முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு யார் பொறுப்பு?

    2011 ஆம் ஆண்டிலிருந்து இந்த நாட்டில் சுமார் இரண்டரை வருடங்களாக முஸ்லிம்களுக்கும் இஸ்லாத்திற்கும் எதிரான இன, மத வாதப் பிரச்சாரத்தை BBS, சிங்கள ராவய போன்ற அமைப்புக்களும், ஆளும் கட்சியில் அங்கம் வகிக்கும் சில அமைச்சர்களும் முன்னெடுத்து வருகின்றனர். இவர்களது இனவாதக் கருத்துக்களால் தூண்டப்பட்ட இளைஞர்கள் மூலம் பல பள்ளிவாயில்கள், முஸ்லிம்களது வர்த்தக நிலையங்கள் தாக்கப்பட்டு வந்தன. அனுராதபுர தர்கா உடைப்பு முதல் தர்கா நகர், பேருவலை, பாணந்துறை போன்ற பிரதேசங்களில் முஸ்லிம்களின் சொத்தழிப்பு வரை இந்த இனவாதக் கும்பலின் அடாவடித்தனம் நீண்டு கொண்டே ...

  • 2 November

    அரசியல், சமயத் துறையில் நலிந்துவிட்ட சமூகம்

    இலங்கை முஸ்லிம்களின் சமய, சமூக, அரசியல் நிலவரம் தொடர்ந்தும் சட்டியிலிருந்து அடுப்புக்குள் விழும் கதையாகவே தொடர்ந்து கொண்டிருக்கின்றது. சென்ற நோன்புப் பெருநாள் விடயத்தில் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா தவறு விட்டது! ஒரு தவறு நடந்தால் அதிலிருந்து பாடம் படித்து, திருந்தி அது போன்ற தவறு மீண்டும் வராமல் இருக்க வழிவகை செய்ய வேண்டும். ஆனால், பிரச்சினைக்கு மற்றுமொரு பிரச்சினையே தீர்வாக மாறி வருகின்றது. நோன்புப் பெருநாள் விவகாரத்தில் ஜம்இய்யதுல் உலமா விட்ட தவறால் இலங்கை முஸ்லிம்களில் பலரும் ஜம்இய்யதுல் உலமா மீது அவநம்பிக்கையை ...

  • 2 November

    இந்தியத் தேர்தலும் இலங்கை இனவாதமும்

    இந்தியாவின் தேர்தல் முடிவுகள் முஸ்லிம்களுக்கும் ஏனைய சிறுபான்மை சமூகங்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்து அடிப்படைவாத அமைப்பான பாரதீய ஜனதா கட்சி அதிக ஆசனங்களைக் கைப்பற்றியுள்ள அதே வேளை, காங்கிரஸைப் படுபாதாளத்தில் வீழ்த்தியுள்ளது. குஜராத் முஸ்லிம்களுக்கு எதிரான கலவரத்திற்கு முக்கிய காரணமாக சொல்லப்பட்ட “மோடி” இந்தியாவின் 16-ஆம் பிரதமராகிவிட்டார். இந்த அரசியல் மாற்றம் ஆசியாவில் மதவாதமும் இனவாதமும் கூர்மை பெற்று வருவதற்கான வெளிப்படையான அடையாளமாகக் கொள்ளலாம். பர்மாவில் பற்றி எரியும் பௌத்த மதவாதத் தீ இலங்கையில் தாக்கத்தை ஏற்படுத்தியது போல், இந்தியாவில் இந்துத் தீவிரவாத அமைப்பின் ...

  • 2 November

    இலங்கைத் தாயின் இனிய மைந்தர்களாக…

    பலநூறு ஆண்டுகளாக அந்நியரின் ஆதிக்கத்தின் கீழ் இருந்த இலங்கை, 1948 இல் சுதந்திரம் பெற்றது. உலக நாடுகள் பலவும் காலனித்துவத்தின் கோரப் பிடியிலிருந்து விடுதலை பெற்ற தினத்தை சுதந்திர தினமாகக் கொண்டாடுகின்றன. இந்த அடிப்படையில் பெப்ரவரி மாதம் நான்காம் திகதி என்பது எமது தாய் நாட்டின் சுதந்திர தினமாகும். அந்நிய ஆதிக்கத்திலிருந்து நாடு விடுதலை பெற்றமை என்பது இந்த நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்கும் மகிழ்ச்சியைத் தரும் செய்தி என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. பொதுவாக அரசியல் ரீதியில் அந்நியரின் நேரடியான ஆதிக்கத்தின் கீழ் இருந்து விடுதலை ...

  • 2 November

    நாட்டின் நலம் காக்க நல்லுறவை வளர்ப்போம்

    பயமும் பட்டினியும் இல்லாத வாழ்வு என்பது அல்லாஹ் வழங்கும் அருள்களில் முக்கியமானதாகும். நாட்டை ஆள்பவர்களின் அடிப்படையான கடமையும் இதுதான். மக்களுக்கு அச்சமற்ற ஒரு வாழ்வை வழங்குவதும், பொருளாதார சுபீட்சத்தை ஏற்படுத்தி பட்டினியில்லாத சூழ்நிலையை உருவாக்குவதும்தான் ஆட்சியாளர்களின் அடிப்படைக் கடமையாகும். பலமான மக்களிடமிருந்து பலவீனர்கள் பாதுகாக்கப்படுவதும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நியாயம் வழங்குவதும் ஆட்சியாளர்களின் அடிப்படைப் பண்புகளில் ஒன்றாக மிளிர வேண்டும். அபூபக்கர்(வ) அவர்கள் ஆட்சிப் பொறுப்பை ஏற்ற போதும் இதைத்தான் கூறினார்கள். ‘உங்களில் பலவீனமானவன் அவனது உரிமையை அவனுக்குப் பெற்றுக் கொடுக்கும் வரை அவன்தான் என்னிடம் ...