யார் இந்த ISIS

அண்மைக் காலமாக ஊடகங்களின் பரபரப்புச் செய்தியாக ISIS பற்றிய தகவல்கள் வெளிவந்தவண்ணமுள்ளன. இன்றைய இலத்திரனியல் ஊடகங்களில் இவர்களது வீரதீரச் செயல்கள் மட்டுமன்றி இவர்களால் நடாத்தப்பட்டதாகக் கூறப்படும் கொடூரக் கொலைகளும் வெளிவந்து மக்கள் குழப்பத்திற்குள்ளாகியுள்ளனர். சிலர் இவர்களை நபியவர்களால் ஏற்கனவே முன்னறிவிப்புச் செய்யப்பட்ட அமைப்பாகப் பார்க்கின்றனர். மற்றும் சிலர் இஸ்லாத்தின் எதிரிகளால் வழிநடாத்தப்படும் இஸ்லாத்திற்கு எதிரான சிந்தனைப் போக்குள்ள அமைப்பாகப் பார்க்கின்றனர்.

சிரிய அரசாங்கம் இஸ்ரேலை விட மிகக் கொடூரமான முறையில் சிரிய முஸ்லிம்களைக் கொன்று குவித்து வந்தது. அரபு வசந்தம் என்ற பெயரில் அரபு நாடுகளில் புரட்சிகளைத் தூண்டிய துரோகிகளும் அமெரிக்கா போன்ற அயோக்கியர்களும் இந்தக் கொடூரங்களைக் கண்டும் காணாதவர்கள் போல் இருந்தனர். சிரியாவின் கொடூரங்களுக்கு ரஷ்யா ஆதரவு வழங்கி வந்தது.

இந்தச் சூழ்நிலையில் சிரியாவின் கொடூரங்களுக்கு எதிராக அரபு இளைஞர்கள் போராட முன்வந்தனர். சிரியா இராணுவத்தில் இருந்த சிலரும் சிரியாவின் கொடூரத்தைச் சகிக்க முடியாமல் ‘ஜைஸுல் ஹூர்’ சுதந்திரப் படை என்ற பெயரில் சிரியா அரசுக்கு எதிராகப் போராட ஆரம்பித்தனர்.

இந்த நிலையில் சிரியாவின் ஷீஆ அரசுக்கு எதிராக ‘ஜப்ஹதுன் னுஸ்ரா, அல்கைதா, ஜைஸுல் ஹூர்’ போன்ற போராளிக் குழுக்கள் போராடிக் கொண்டிருந்த சூழ்நிலையில் சிரியா அரசு படிப்படியாக ஆட்டம் கண்டு வந்த தருணத்தில்தான் ‘தாயிப்’ என்று  அரபியில் ISIS என்றும் சுருக்கமாக அழைக்கப்படும் இந்தக் குழு பிரபலமானது.

அல்கைதாவில் இருந்து பிரிந்து சென்ற இந்தக் குழுவுடன் பல போராளிகள் இணைந்து கொண்டனர். இவர்கள் பல வெற்றிகளை ஈட்டினர். ஈற்றில் ஈராக், சிரியா ஆகிய நாடுகளின் பல பகுதிகளை உள்ளடக்கி இஸ்லாமிய ஸ்டேட்டை நிறுவி கிலாபத் பிரகடணத்தையும் செய்தனர்.

அல்லாஹ்வுக்காக அநீதிக்கு எதிராகப் போராட வேண்டும் என்ற ஈமானிய உள்ளம் கொண்ட பலரும் இந்த அணியில் இருக்கலாம் என்பதில் ஐயமில்லை. ஆனால், இவர்கள் சரியான பாதையில் செல்கின்றார்களா என்றால் இல்லை என்பதே உண்மையாகும்.

இவர்களைக் கொடூரமானவர்களாகவும், காமுகர்களாகவும் ஊடகங்கள் சித்தரிக்கும் தருணத்தில்தான் ஈராக்கில் பணி புரிந்த இந்தியாவைச் சேர்ந்த தாதிகள் சிலரையும் பத்திரமாகக் காப்பாற்றி இவர்கள் இந்தியாவுக்கு அனுப்பினர். வந்த தாதிகள் அவர்கள் பயங்கரவாதிகள் இல்லைள. போராளிகள். அவர்கள் நோன்பு நோற்றிருந்த நிலையிலும் எமக்கு உணவு தந்தனர். அவர்களின் விரல் நகங்கள் கூட எம்மீது படவில்லை எனக் கூறி அவர்களின் பண்பட்ட நிலையைக் கூறினர்.

ஊடகங்கள் இவர்கள் பற்றி மோசமாகச் சித்தரிப்பதன் மூலம் இஸ்லாத்தின் மீது களங்கம் கற்பிக்க முனைகின்றனர். அண்மையில் ISIS தீவிரவாதி ஏழு வயதுக் குழந்தையை திருமணம் செய்ததாக புகைப்படத்துடன் செய்தி வெளிவந்தது. ஒரு ஏழு வயதுச் சிறுமியை ஒருவர் அணைத்துக் கொண்டிருக்கும் புகைப்படம் பரவலாக உலா வந்தது.

    அது ஒரு வீடியோவில் வந்த நிகழ்ச்சியின் ஒரு கட்டக் காட்சியாகும். ஒரு போட்டி நடக்கின்றது. அதில் கருப்புக் கொடியை மேலில் போட்ட நிலையில் ஒரு சிறுமி குர்ஆன் ஓதுகின்றாள். அவள் பிழை விடும் போது அறிவிப்பாளர் திருத்திக் கொடுக்கின்றார். அந்தச் சிறுமி அழுகிறாள். அப்போது அறிவிப்பாளர் ஒரு கையால் அந்தச் சிறுமியை அரவணைத்து அமைதிப்படுத்தி ஓத வைக்கின்றார். இந்த இடம்தான் புகைப்படமாக வெளிவந்தது. அது ஏழு வயதுச் சிறுமியை மணந்ததாகப் பகிரங்கப்படுத்தப்படுகின்றது. அதன் பின் அந்தச் சிறுமிக்கும் நிகழ்ச்சியில் பங்கு கொண்ட ஏனைய சிறுவர்களுக்கும் பரிசில்கள் வழங்கப்படுகின்றன. இந்த நிகழ்ச்சிதான் ஏழு வயதுச் சிறுமியை மணந்ததாகக் கதை கட்டக் காரணமானது.

இதிலிருந்து ஊடகங்களில் இவர்கள் குறித்து வரும் அத்தனையும் உண்மைப்படுத்த முடியாது என்பதை அறியலாம்.

முகத்தை மூடிக் கொண்டு யார் வேண்டுமானாலும், எதை வேண்டுமானாலும் செய்துவிட்டு இவர்களின் தலையில் போட்டுவிடலாம். ஈராக்கைப் பொருத்த வரையில் இஸ்ரேலிய, அமெரிக்க உளவாளிகள் நிறைந்து வழியும் பூமி. அவர்கள் இது போன்ற குழப்பங்களைத் தூண்டி குழப்பத்தை உண்டுபண்ணி வருகின்றனர்.

இதே வேளை, இந்த ISIS இனரைப் பொருத்தவரையில் தவறான கோணத்தில் யாரோ சில கிங்மேக்கரால் வழிநடாத்தப்படுகின்றனர். அது யாராக இருக்க முடியும் என்ற ஐயம் பரவலாக உள்ளது.
ஈரான், சிரியா கூட்டுக்கட்சி:

சிரியாவின் ஷீஆ ஆட்சியை ஒழிக்க உருவானவர்கள்தான் இவர்கள். ஆனால், இவர்கள் திட்டமிட்டுத் தவறாக வழிநடாத்தப்பட்டு கிலாபத்தை அறிவித்தனர். இவ்வாறு தனிப்பட்ட சூழ்ச்சிகளால் இஸ்லாமியக் கலீபா தெரிவு செய்யப்படுவது இஸ்லாமிய வழிமுறையல்ல. இந்தக் கிலாபத் அறிவிப்பின் பின்னர் இவர்களுக்கு ஷீஆ அரசை ஒழிப்பதை விட தமது கிலாபத் ஆட்சியைப் பாதுகாப்பதும், பரப்புவதுமே இலக்காக மாறிவிட்டது. இதன் மூலம் அவர்களது இலக்கு திசைமாறிவிட்டது. இதனால் சிரியாவும் ஈரானுமே பயணடைந்துள்ளன.

அடுத்து, இவர்களின் கிலாபத் அறிவிப்பை ஏற்காத ஏனைய போராளி அமைப்புக்களுடன் இவர்கள் இப்போது மோத ஆரம்பித்துள்ளனர். இதன் மூலம் சிரியாவில் ஷீஆ எதிர்ப்புப் போராட்டம் இன்னும் பலவீனப்பட்டுள்ளது.

அடுத்து, இந்தக் குழுவினர் தாம் ஈராக்கைப் பிடித்துவிட்டு அடுத்து ஷீஆ அரசான ஈரானையும் பிடிப்போம் என்று கூறாமல் சவூதியைப் பிடிப்போம்! ஜோர்தானைப் பிடிப்போம் என அறைகூவல் விட்டுள்ளனர். இதுவும் இவர்களை ஷீஆக்களே இயக்குகின்றனர் என்ற சந்தேகத்தை வலுப்படுத்துகின்றது. அத்துடன் ஷீஆக்களை எதிர்க்களம் கண்டவர்கள் தவறான கிலாபத் அறிவிப்பால் ஸுன்னத் வல் ஜமாஅத்தையே எதிர்க்க ஆரம்பித்துள்ளனர். இவற்றைப் பார்க்கும் போது இந்த இயக்கத்தின் செயற்பாட்டால் ஈரானும் சிரியாவுமே அதிக இலாபம் அடைந்துள்ளனர். எனவே, இது ஷீஆக்களால் திட்டமிட்டு உருவாக்கப்பட்ட ஒரு குழு என சில இஸ்லாமிய அறிஞர்கள் அபிப்பிராயப்படுகின்றனர்.

அமெரிக்கா:

அடுத்து, இன்றைய உலக நாடுகள் பலவும் தமக்கு எதிராகச் செயற்படும் சில தீவிரவாதக் குழுக்களைத் தாமே உருவாக்கி வழிநடாத்துகின்றது. இத்தகைய தீவிரவாதக் குழுக்கள் மூலம் தம்மை நியாயப்படுத்திக் கொள்ளவும் நீண்டகால நலன்களை நல்கக்கூடிய ஆயுதத் தாக்குதல்களை நடாத்துவதற்காகவும், அரசியல் அபிலாசைகளை அடைந்து கொள்வதற்காகவும் பயன்படுத்துகின்றன. செப்டம்பர் – 11 தாக்குதலைத் தானே நடத்திவிட்டு அல்கைதாவின் பெயரில் போட்டு ஆப்கான் மீதான போரை அமெரிக்கா தொடங்கியதை இதற்கு உதாரணமாகக் கூறலாம். அவர்களின் அரசியல் இலக்குகளை அடைய அவர்கள் எதை வேண்டுமானாலும் செய்யலாம் என்பதற்கு இது சிறந்த எடுத்துக்காட்டாகும்.

ISIS இன் வெற்றிகள்:

ISIS இற்குப் புகழையும் அதே நேரம் நபிகளாரினால் முன்னறிவிப்புச் செய்யப்பட்ட அமைப்பு என்ற எண்ணத்தையும் தேடிக் கொடுத்தது அதன் திடீர் வெற்றிகளே! இந்த வெற்றிகள் திட்டமிட்டு அவர்களுக்கு வழங்கப்பட்ட வாய்ப்புக்களாகத் தென்படுகின்றன.

ISIS இனர் ஈராக் வசமுள்ள பல பகுதிகளைக் கைப்பற்றுகின்றனர். இதன் மூலம் அதிகளவிலான ஆயுதங்களைப் பெறுகின்றனர். அந்த ஆயுதங்களைக் கண்காட்சியாக வைத்து உலகைத் தம்பக்கம் திரும்பிப் பார்க்க வைக்கின்றனர்,

பொதுவாக ஒரு ஆயுதப்படை தாக்குதலுக்குத் தாக்குப்பிடிக்க முடியாமல் பின்வாங்குவதாக இருந்தால் எதிரியின் கைகளுக்கு ஆயும் கிடைக்கக் கூடாது என்பதற்காக ஆயுதக் கிடங்குகளை அழித்துவிட்டே செல்வார்கள். பின்வாங்கிய அமெரிக்கா, ஈரான் சார்பு ஈராக் படையினர் ஏன் ஆயுதங்களை அழிக்காமல் ISIS அமைப்பினருக்குத் தாரை வார்த்தனர்?

ஈராக்கின் வங்கிகள் ISIS வசமாகி பல்லாயிரம் கோடி அமெரிக்க டொலர்கள் அவர்கள் வசமாயின! பின்வாங்கும் படையினர் ஏன் இந்த வங்கிகளை அழிக்கவில்லை? திட்டமிட்டு ISIS இனருக்கு ஆயுதங்களும் பணமும் வழங்கியது போல் இது அமையவில்லையா?

ஈராக்கின் முக்கிய எண்ணெய் வயல்கள் ISIS அமைப்பினரால் கைப்பற்றப்பட்டுள்ளன. போரில் ஈடுபடுபவர்களுக்குத் தேவையான பணத்தையும் எண்ணெய்யையும் பெற்றுக் கொள்ளும் நோக்கிலேயே இந்த எண்ணெய் வயல்கள் தாரைவார்க்கப்பட்டுள்ளன என எண்ணத் தோன்றுகின்றது.

ஸதாம் ஹுஸைனிடம் இரசாயன ஆயுதங்கள் இருப்பதாகக் கூறியே ஈராக் மீது அநியாயமான போரை அமெரிக்கா நடாத்தியது. ஐ.நா வும் ஈராக்கின் ஸதாமின் உள்ளாடைகள் வரை இரசாயன ஆயுதத்தைத் தேடி அலைந்து வந்தது. அதன் பின்னர் பல ஆண்டுகள் அங்கே அமெரிக்காவின் ஆட்சிதான் நடக்கிறது. இவர்களால் கண்டு பிடிக்கப்படாத இரசாயன ஆயுதங்கள் ISIS இனரால் ஓரிரு மாதங்களுக்குள் கண்டு பிடித்து எடுக்கப்பட்டது என்றால் இது காதில் பூ சுற்றுவதாகத் தெரியவில்லையா?

பொதுவாக எதிர்ப்படை பலமானதாக இருந்தாலும் அதன் பலத்தைக் குறைத்துக் காட்டவே எவருவம் விரும்புவர். ஆனால், இதற்கு மாற்றமாக அமெரிக்க ஜனாதிபதியே இவர்கள் ஒரு பலமான படையாக வளர்ந்து வருகின்றனர்! உண்மையில் ஒரு பிரச்சினைதான் என்று கூறி இவர்களை இஸ்லாமிய உலகின் ஹீரோக்களாகக் காட்ட முற்படுகின்றார் என்றால் காரணம் இல்லாமல் இருக்குமா?

அமெரிக்க ஊடகங்கள் இவர்கள் கையில் பெருந்தொகைப் பணம் சிக்கியுள்ளதையும் அவர்களின் 800 பேரைக் கண்டு தமது படையில் உள்ள 30000 பேர் பயந்து ஓடியதையும் பகிரங்கமாகப் பேசியதில் இருந்து இவர்களை ஏதோ ஒரு உள்நோக்கத்திற்காக ஹீரோக்களாகக் காட்ட முற்படுகின்றனர் என்பதை யூகிக்கலாம்.

இவற்றை நோக்கும் போது ஈரான், சிரியா போன்ற நாடுகளுடன் இணைந்து அமெரிக்காவும் ஏதோ ஒரு உள்நோக்கத்திற்காக இவர்களை வலிமைப்படுத்துகின்றது. ISIS இனர் தமது போராளிகளுக்கு நல்ல சம்பளம் கொடுக்கின்றனர். உலக அளவில் உள்ள போராளிகளைத் தம்மோடு இணைந்து போராட அழைத்துள்ளனர். உலக மட்டத்தில் உள்ள போராளி முஸ்லிம்களை ஒரே இடத்தில் எடுத்து அவர்களை அழித்துவிட அமெரிக்கா திட்டம் தீட்டியிருக்கலாம்.

அல்லது, இவர்களை வளர்த்து இவர்கள் மூலமாக முழு முஸ்லிம் உலகிலும் குழப்பத்தை உண்டுபண்ணத் திட்டமிட்டிருக்கலாம். முஸ்லிம் உலகில் இவர்களுக்கு ஆதரவான பொதுமக்கள் உருவாகுவார்கள். அவர்கள் தமது அரசுகளுக்கு எதிராகக் கிளர்ந்தெழுவார்கள். இதன் மூலம் முஸ்லிம் உலகை ஒரு கொந்தளிப்பான நிலையில் வைத்திருக்கலாம் எனத் திட்டம் தீட்டியிருக்கலாம்.

இவர்களுக்கும் ஏனைய போராளிக் குழுக்களுக்கும் இடையில் மோதவிட்டு போராளிகளைப் போராளிகள் மூலமாகவே அழிக்கத் திட்டமிட்டிருக்கலாம். இவர்களின் நடவடிக்கைகள் மூலம் இஸ்லாத்தைக் கொச்சைப்படுத்த முயற்சிக்கலாம். இஸ்லாமிய ஆட்சியொன்று வந்தால் அங்கு இப்படித்தான் கொடூரமான கொலைகள் நடக்கும் எனக் காட்ட முற்படலாம். இப்படிப் பல காரணங்கள் இருக்கலாம். ஆனால், இவர்கள் மூலம் ஒரு போதும் இஸ்லாம் பயன்பெறப் போவதில்லை என்பது மட்டும் உண்மை!

ISIS இன் அபரிமிதமான நம்பிக்கை:

இறுதிக் காலத்தில் கருப்புக் கொடியுடன் ஒரு கூட்டத்தினர் வருவார்கள் என்ற கருத்தில் பல பலவீனமான ஹதீஸ்கள் உள்ளன. இவர்கள் கருப்புக் கொடி ஏந்தியுள்ளதாலும், தமக்குப் பலமான வெற்றி கிடைத்து வருகின்றமையினாலும் நபியவர்களினால் முன்னறிவிப்புச் செய்யப்பட்ட அந்த அமைப்பு தாமே என அவர்கள் நம்புகின்றனர். அழிந்து போன கிலாபத்தையும் தாம் மீளக் கட்டியெழுப்பிவிட்டதாகவும் நம்புகின்றனர். எனவே, வாக்களிக்கப்பட்ட இந்த அமைப்பின் கீழ் அனைத்து அமைப்பினரும் வர வேண்டும்! முஸ்லிம் நாடுகளும் தமது கலீபாவை ஏற்றுக் கொள்ள வேண்டும் என அவர்கள் எதிர்பார்க்கின்றனர். மார்க்க அறிவு குறைந்த, இஸ்லாத்திற்காகப் போராட வேண்டும் என்ற உணர்வு மட்டுமே உள்ள இந்த இளைஞர்கள் தாம் சத்தியத்தில் இருப்பதாக உறுதியாக நம்புவதால் மற்றைய அனைவரும் அசத்தியத்தில் இருப்பதாக உறுதியாக நம்புகின்றனர். அசத்தியவாதிகளுக்கு எதிராகப் போராட வேண்டும் என்ற உணர்வில் தம்மைச் சேராத இயக்கங்களுடன் மோதி சகோதரப் படுகொலைகளைச் செய்து வருகின்றனர். இந்த வகையில் இவர்கள் இந்த நூற்றாண்டின் கவாரிஜ்களாகச் செயற்படுகின்றனர். இஸ்லாத்திற்குப் புறம்பான முறையில் கிலாபத்தை அறிவித்த இவர்கள் இஸ்லாத்தின் எதிரிகளின் வேலைகளை இலகுவாக்கிவிட்டனர்.

நல்ல உள்ளமும் ஈமானும் உள்ள பலரும் இதன்பால் கவரப்பட்டிருக்கலாம். ஆனால், இவர்கள் தவறான இலக்கை நோக்கி இஸ்லாமிய எதிரிகளால் வழிநடாத்தப்படுகின்றனர் என்பதில் எவ்வித ஐயமுமில்லை.

எனவே, இலங்கை வாழ் முஸ்லிம்கள் இவர்களது வீடியோக்களை வலைத்தளங்களில் Shere பண்ணுவதையும் இவர்களது வீடியோக்களுக்கு Facebook போன்ற தளங்களில் Like பண்ணுவதையும் தவிர்த்துக் கொள்ளுமாறு அன்புடன் வேண்டிக் கொள்கின்றோம்.

One comment

  1. -அல்லாஹ்வுக்காக அநீதிக்கு எதிராகப் போராட வேண்டும் என்ற ஈமானிய உள்ளம் கொண்ட பலரும் இந்த அணியில் இருக்கலாம் என்பதில் ஐயமில்லை. ஆனால், இவர்கள் சரியான பாதையில் செல்கின்றார்களா என்றால், இல்லை என்பதே உண்மையாகும்.
    இவர்கள் திட்டமிட்டுத் தவறாக வழிநடாத்தப்பட்டு கிலாபத்தை அறிவித்தனர். இவ்வாறு தனிப்பட்ட சூழ்ச்சிகளால் இஸ்லாமியக் கலீபா தெரிவு செய்யப்படுவது இஸ்லாமிய வழிமுறையல்ல. –

    @@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
    Question: எவ்வாறு கிலாபத் அறிவிக்க படவேண்டும், கிலபதை மீள கொண்டுவருவது எப்படி? எதிரிகளுடன் ஜிஹாத் செய்யமேல் கிலபதை கொண்டுவர முடியுமா? கலிபாவின் பண்புகள் என்ன? அவை பூர்த்தி செய்ய பட்டதா ? க்கிலாபாதின் அடிப்படை கலமைகள் / பண்புகள் என்ன அவை பூர்த்தி செய்யபடாத ? தயவு செய்து விளக்குங்கள் ?
    @@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

    2-இவர்களுக்கு ஷிஆ அரசை ஒழிப்பதை விட தமது கிலாபத் ஆட்சியைப் பாதுகாப்பதும், பரப்புவதுமே இலக்காக மாறிவிட்டது. இதன் மூலம் அவர்களது இலக்கு திசைமாறிவிட்டது.

    @@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
    Question: Fighting Apostate and rebel within the Khilafa and protecting its border take precedence over fighting kuffar for spreading Islam. “Protect the Capital before Make profit”
    அமெரிக்கா, சவுதி, UAE மற்றும் பல நாடுகள் IS இற்கு எதிராக சண்டை பிடிகிறார்கள். க்கிலாப்தின் எல்லையை பாதுகாப்பது , ஷியா களுடன் சண்டை இடுவதை விட முக்கியமானது
    NO LAND – NO KHILAFA
    If you have diferent oponion kinldy explain ?
    @@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

    3-இவர்களின் கிலாபத் அறிவிப்பை ஏற்காத ஏனைய போராளி அமைப்புக்களுடன் இவர்கள் இப்போது மோத ஆரம்பித்துள்ளனர். இதன் மூலம் சிரியாவில் ஷிஆ எதிர்ப்புப் போராட்டம் இன்னும் பலவீனப்பட்டுள்ளது
    அசத்தியவாதிகளுக்கு எதிராகப் போராட வேண்டும் என்ற உணர்வில் தம்மைச் சேராத இயக்கங்களுடன் மோதி சகோதரப் படுகொலைகளைச் செய்து வருகின்றனர்.
    இந்த வகையில் இவர்கள் இந்த நூற்றாண்டின் கவாரிஜ்களாகச் செயற்படுகின்றனர்.

    @@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
    Question:
    இங்கு கவனிகவண்டிய இரண்டு பிரிவினர் உள்ளநேர்
    1- சிரியாவுக்கு Democracy இணை கொண்டுவர விருன்புவோர் – (Ex : FSA )
    2- சிரியாவுக்கு சரிய (Islamic law) இணை கொண்டுவர விருன்புவோர் (NUSRA FRONT )

    DemoCRAZY is not Islam, both are deferent belief, who ever belief democracy and reject sharia (Islamic Law) are Apostate. (DO YOU HAVE ANY Different OPINION then explain)
    For the group like Nushra front – if two group of Muslim fight, it is not necessary other group is Khawarij
    What about fitna between ALI (RA) and Aisha (RA). What about the fight between Ali (RA) and Muawiah (ra).
    Didn’t Ali (ra) belief that it is incumbent upon him to fight and take bayyah from people of sham by force since he is already a Khalifa.
    IF NOT EXPLAIN?

    SIDE NOTE : KHAWAJIJ ( people who make Thakfir on Muslim for major sin such as zina or use of alcohol) . They will kill Muslim unlawfully and leave kuffar untouched
    Kindly give to your evidence to prove IS khawarij
    @@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

    4-அடுத்து, இந்தக் குழுவினர் தாம் ஈராக்கைப் பிடித்துவிட்டு அடுத்து ஷிஆ அரசான ஈரானையும் பிடிப்போம் என்று கூறாமல் சவூதியைப் பிடிப்போம்; ஜோர்தானைப் பிடிப்போம் என அறைகூவல் விட்டுள்ளனர்.

    @@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
    How can you fight USA, IRAN and ISRAEL when their allay and friends (KSA, UAE, JORDAN and Etc) ) in fighting Muslims is in your back yard.
    When Salahudeen ayubi (Rahimahullah) was asked, how come you fight Muslim and not fighting crusade. he told I do not want my back open while fighting crusade. He fought until he clear the fitna (Kufr) in Muslim land then he move to Palestine (History)
    @@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

    5-இவர்கள் மூலம் ஒரு போதும் இஸ்லாம் பயன்பெறப் போவதில்லை என்பது மட்டும் உண்மை! –
    @@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
    Atleast you may get a chnace of readi Jihad and rules of figthing, ahkham of slaves (which was not part of your carriculum in your Madarasa)
    @@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.