புனித மாதங்கள்

‘(போர் செய்யத் தடுக்கப்பட்ட) புனித மாதத்திற்குப் புனித மாதமே நிகராகும். புனிதப்படுத்தப்பட்ட (அவற்றின் புனிதம் மீறப்பட்டால் அவற்று)க்கும் பழிவாங்குதல் உண்டு! ஆகவே, எவரேனும் உங்கள் மீது வரம்பு மீறினால் அவர் உங்கள் மீது வரம்பு மீறியது போன்று நீங்களும் அவர் மீது வரம்பு மீறுங்கள்! மேலும், அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள். நிச்சயமாக அல்லாஹ் பயபக்தியாளர்களுடன் இருக்கின்றான் என்பதையும் அறிந்து கொள்ளுங்கள்.’ (2:194)

புனித மாதங்களில் போர் செய்யக் கூடாது என இஸ்லாம் கூறுகின்றது. அந்தப் புனித மாதங்களில் எதிரிகள் போரை ஆரம்பித்தால் நாம் எதிர் தாக்குதல் செய்யலாம். அந்த சந்தர்ப்பத்தில் கூட வரம்பு மீறக் கூடாது என அற்புதமான போர் விதிகளை இந்த வசனம் கூறுகின்றது.

‘அல்லாஹ்விடம் நிச்சயமாக மாதங்களின் எண்ணிக்கையானது, வானங்கள் மற்றும் பூமியைப் படைத்த நாள் முதல் அல்லாஹ்வின் பதிவேட்டில் பன்னிரெண்டு மாதங்களாகும். அவற்றில் நான்கு புனிதமானவையாகும். இதுதான் நேரான மார்க்கம். இவற்றில்; (போர் செய்து) உங்களுக்கு நீங்களே அநியாயம் செய்து கொள்ளாதீர்கள். இணைவைப்போர் உங்கள் அனைவருடனும் போர் புரிவது போன்று நீங்களும் அவர்கள் அனைவருடனும் போர் புரியுங்கள். நிச்சயமாக அல்லாஹ் பயபக்தியாளர்களுடன் இருக்கின்றான் என்பதை நீங்கள் அறிந்து கொள்ளுங்கள்.’
(9:36)

புனித மாதங்கள் நான்கு என இந்த வசனம் கூறுகின்றது. இந்தக் குறித்த மாதங்கள் போர் செய்யத் தடை செய்யப்பட்ட மாதங்களாகும்.

மக்கத்துக் காபிர்கள் முஹம்மத்(ச) அவர்களுடன் பத்து வருடங்கள் போர் நிறுத்த ஒப்பந்தம் செய்திருந்தனர். அந்த ஒப்பந்தத்தை அவர்களே முறித்தனர். அவர்களுக்கு எதிராக நபி(ச) அவர்கள் நடவடிக்கை எடுக்கும் போது கூட இந்த நான்கு மாத கால அவகாசத்தைக் கொடுத்தார்கள்.

‘இணைவைப்பாளர்களில் யாருடன் நீங்கள்  உடன்படிக்கை செய்தீர்களோ அவர்களிடமிருந்து அல்லாஹ்வும், அவனது தூதரும் விலகிக்கொள்ளும் (அறிவிப்பாகும்.)’

‘எனவே நீங்கள் நான்கு மாதங்கள்  இப்பூமியில் சுற்றித் திரியுங்கள். நிச்சயமாக உங்களால் அல்லாஹ்வைத் தோற்கடிக்க முடியாது என்பதையும், நிச்சயமாக அல்லாஹ் இந்நிராகரிப்பாளர்களை இழிவுபடுத்துவான் என்பதையும் அறிந்து கொள்ளுங்கள்.’
(9:1-2)

எனவே, போர் செய்வது தடுக்கப்பட்ட இம்மாதத்தில் போர் நடவடிக்கையில் ஈடுபடக் கூடாது என்பதில் நபி(ச) அவர்கள் மிகுந்த அக்கறையைக் காட்டியுள்ளமையை அறியலாம்.

நபி(ச) அவர்கள் உளவு வேலைக்காக ஒரு குழுவினரை மதீனா எல்லைக்கு அனுப்பினார்கள். அவர்கள் எதிரிகளைச் சந்தித்த போது போர் செய்வது தடுக்கப்பட்ட மாதத்தில் அவர்களுக்கு எதிராகத் தாக்குதல் நடாத்திவிட்டனர். இதை நபி(ச) அவர்கள் அங்கீகரிக்காததுடன் அவர்கள் மீது தனது கடுமையான அதிருப்தியையும் வெளியிட்டார்கள்.

மக்கத்துக் காபிர்களைப் பொருத்த வரையில் முஸ்லிம்கள் பலரைக் கொலை செய்தவர்கள்É ஊரை விட்டும் விரட்டியவர்கள்É உடைமைகளைச் சூறையாடியவர்கள். அவர்கள் முஸ்லிம்களை மக்காவிற்குள் நுழையவிடாமல் தடுத்தவர்கள் என பல தவறுகளைச் செய்தவர்கள். அவர்கள் மீதுதான் தாக்குதல் நடாத்தப்பட்டது. இருப்பினும் நபி(ச) அவர்கள் தனது தோழர்கள் மீது கடுமையான அதிருப்தியை வெளியிட்டார்கள். அச்சந்தர்ப்பத்தில் பின்வரும் வசனம் அருளப்பட்டது.

‘(நபியே!) புனித மாதத்தில் போர் புரிவது பற்றி உம்மிடம் கேட்கின்றனர். அதில் போர் புரிவது பெரும் குற்றமாகும். (எனினும்) அல்லாஹ்வின் பாதையை விட்டும், (மக்களைத்) தடுப்பதும் அவனை நிராகரிப்பதும், மஸ்ஜிதுல் ஹராமை விட்டும் தடுப்பதும் அங்குள்ளோரை அங்கிருந்து வெளியேற்றுவதும் அல்லாஹ்விடத்தில் மிகப்பெரும் குற்றமாகும். மேலும், குழப்பம்  விளைவிப்பது கொலையை விடப் பெரும் குற்றமாகும் என்று (நபியே!) நீர் கூறுவீராக! அவர்களுக்கு முடியுமானால் உங்கள் மார்க்கத்தை விட்டும் உங்களைத் திருப்புகின்ற வரை உங்களுடன் அவர்கள் போரிட்டுக் கொண்டேயிருப்பார்கள். உங்களில் எவர் தனது மார்க்கத்தை விட்டும் மாறி காபிராக மரணித்தும் விடுகின்றாரோ, அவர்களது செயல்கள் இம்மையிலும் மறுமையிலும் அழிந்துவிடும். அவர்கள் நரகவாசிகளாவர். அதில் அவர்கள் நிரந்தரமாக இருப்பார்கள்.’ (2:217)

இந்த வசனமும் புனித மாதங்களில் போர் செய்வது கொடிய குற்றம் என்பதை உறுதி செய்கின்றது. மக்கத்துக் காபிர்களின் செயற்பாடுகளுடன் ஒப்பிடும் போது அது ஒன்றும் பெரிதில்லை என்று கூறப்படுகின்றது.

எதிரிகளுடனும் போர்க் களத்தில் கூட வரம்பு மீறாது நடந்து கொள்ள வேண்டும் என இஸ்லாம் வலியுறுத்தியுள்ளமை இங்கு கவனிக்கத்தக்கதாகும்.

அடுத்து, புனித மாதங்கள் பற்றி அல்குர்ஆன் பேசினாலும் அம்மாதங்கள் எவையென அல்குர்ஆனில் கூறப்படவில்லை. அவை ‘துல்கஃதா, துல்ஹஜ், முஹர்ரம் மற்றும் ரஜப் மாதங்களாகும். இது குறித்து நபிமொழிகளே பேசுகின்றன. ‘குர்ஆன் மட்டும் போதும், நபிமொழி தேவையில்லை’ என்று வாதிடும் வழிகேடர்களால் நபிமொழிகளின் துணை இல்லாமல் அந்த நான்கு மாதங்களும் எவை என்பதைக் கண்டறியவே முதுடியாது. இதிலிருந்து குர்ஆன் மட்டுமன்றி நபிமொழியும் வஹீ எனும் வேத வெளிப்பாடுதான் என்ற உண்மையையும் உறுதி செய்துகொள்ளலாம்.

ஹஜ்ஜும் சாதிப்பாகுபாடு ஒழிப்பும்:

‘பின்னர் மக்கள் எங்கிருந்து திரும்புகிறார்களோ அங்கிருந்து நீங்களும் திரும்பிவிடுங்கள். இன்னும் அல்லாஹ்விடம் பாவமன்னிப்புத் தேடுங்கள். நிச்சயமாக அல்லாஹ் மிக்க மன்னிப்பவன்ளூ நிகரற்ற அன்புடையவன்.’
(2:199)

ஹஜ் கடமையை ஆண்டு தோறும் இலட்சக்கணக்கான முஸ்லிம்கள் நிறைவேற்றி வருகின்றனர். வெள்ளை-கறுப்பு என்ற நிற பேதம் இல்லாமல் அரபி-அஜமி என்ற மொழி பேதமில்லாமல் பிரதேச வேறுபாடில்லாமல் எல்லா மக்களும் ஒன்று போல் கூடும் சமத்துவ, சகோதரத்துவ சங்கமம் அது! ஜாஹிலிய்யாக் காலத்தில் இருந்து வந்த எல்லா வகையான தீண்டாமைக் கொடுமைகளையும் கொழுத்திப் போட்டது இந்த ஹஜ் கடமை. ஹஜ்ஜின் ஒன்பதாம் நாள் மக்கள் எல்லோரும் அறபாவில் ஒன்று கூட வேண்டும் என்பது இஸ்லாத்தின் கட்டளையாகும்.

ஜாஹிலிய்யா காலத்தில் உயர் குலத்தவர்களான குறைஷpகள் முஸ்தலிபா எனும் புனித பிரதேசத்தில் இருப்பார்கள். சாதாரண மக்கள் அறபா எனும் இடத்தில் இருப்பார்கள். நபி(ச) அவர்களும் உயர் குலத்தில் பிறந்தவர். இந்த சந்தர்ப்பத்தில் நபி(ச) அவர்கள் தனது குலத்தைப் பாதுகாக்க நினைத்தால் தம்மோடு வந்து சேருவார். அவரது தோழர்களான சாதாரண மக்களை விட்டும் பிரிந்து வருவார் என உயர் குலத்தவர்கள் எண்ணினர். ஆயினும் நபி(ச) அவர்கள் அறபா எனும் சாதாரண மக்கள் ஒன்று கூடும் இடத்தில் ஒன்று கூடி தீண்டாமையை ஒழித்தார்கள். அது மட்டுமன்றி ஹஜ்ஜின் ஒன்பதாம் நாள் அறபாவில் ஒன்று கூடாவிட்டால் ஹஜ் கடமையே நிறைவேறாது என்றும் அறிவித்து குலப்பெருமை பேசியவர்களைத் தனிமைப்படுத்தினார்கள்.

மக்கள் எங்கிருந்து புறப்படுகின்றார் களோ அங்கிருந்து நீங்களும் புற்படுங்கள் எனக் கூறும் இந்தக் குர்ஆன் வசனமும் ஜாஹிலிய்யா காலத்தில் ஒதுக்கப்பட்டவர்களை மக்கள் என்று கூறும் அதே நேரம் தாம் உயர் சாதியினர் எனப் பெருமை பேசியவர்களை மனிதர்கள் என்ற வார்த்தைக்குள் சேர்க்கவில்லை என்பதும் கவனிக்கத்தக்கதாகும். நபி(ச) அவர்களின் இந்த நடவடிக்கை சாதி வெறி மீது விழுந்த சம்மட்டி அடியாகும்É சாதி வெறிக்குக் கட்டிய சமாதியாகும் என்பதில் ஐயமில்லை.

ஆன்மீகமும், லௌகீகமும்:

”எங்கள் இரட்சகனே! எங்களுக்கு இவ்வுலகில் நல்லதையும், மறுமையில் நல்லதையும் தந்தருள்வாயாக! மேலும், நரக வேதனையை விட்டும் எம்மைப்  பாதுகாப்பாயாக!’ என்று பிரார்த்திப்போரும் அவர்களில் உள்ளனர்.’ (2:201)

ஆன்மீகம் போதித்த பலர் உலக வாழ்விற்கான வழிகாட்டலில் தவறுவிட்டனர். உலக வாழ்வு பற்றிப் பேசிய பலரும் ஆன்மீகத்தை மறந்தனர். இஸ்லாம் ஆன்மீகத்தையும் லௌகீகத்தையும் இணைத்து வழிகாட்டும் மார்க்கமாகும்.

இந்த வகையில் ஹஜ் கடமையை நிறைவேற்றும் போது வர்த்தகம் செய்வதை இஸ்லாம் அனுமதித்தது. அது மட்டுமன்றி ‘யா அல்லாஹ்! இந்த உலகத்திலேயே எல்லாவற்றையும் தா!’ எனக் கேட்போரும் மனிதர்களில் உள்ளனர் எனக் கூறிவிட்டு உண்மையான முஸ்லிம்கள் ‘உலக வாழ்வு, மறுமை வாழ்வு இரண்டிலும் நல்லதைத் தா!’ என்றே பிரார்த்திக்க வேண்டும் என்று கற்றுத் தருவதுடன்,

‘(இவ்வாறு பிரார்த்திக்கும்) அவர்களுக்கு அவர்கள் சம்பாதித்தவற்றிலிருந்து நற்பேறுண்டு. அல்லாஹ் விசாரணை செய்வதில்  தீவிரமானவன்.’ (2:202)

என்று வாழ்த்துக் கூறப்படுகின்றது.

இந்த வகையில், முஸ்லிம்கள் தமது உலக வாழ்வின் முன்னேற்றத்திற்காகவும் ஆகுமான வழிகள் மூலம் முயற்சிக்க வேண்டும். மறுமையை மறந்துவிடக் கூடாதுÉ மறுமைக்காக முயற்சிக்கின்றேன் என்ற பேரில் இம்மையை மறந்துவிடவும் கூடாது. இரண்டையும் இணைத்துச் செல்லும் சீரிய வழியில் பயணிக்க வேண்டும்.
வாதத்திறமை உள்ள வழிகேடர்கள்:

‘(நபியே!) இவ்வுலக வாழ்வில் தன்னுடைய (சாதுர்யமான) வார்த்தை மூலம் உம்மைக் கவர்ந்து தனது உள்ளத்தில் உள்ளவற்றுக்கு அல்லாஹ்வைச் சாட்சியாக்கு பவனும் மனிதர்களில் உள்ளான். அவன்தான் கடுமையான விரோதியாவான்.’

‘அவன் (உம்மை விட்டும்) விலகிச் சென்றாலோ பூமியில் குழப்பம் விளைவிக்கவும், பயிரினங்களையும் உயிரினங்களையும் அழிக்கவும் முயற்சிக்கிறான். அல்லாஹ் குழப்பத்தை விரும்பமாட்டான்.’

”அல்லாஹ்வை அஞ்சிக்கொள்’ என அவனிடம் கூறப்பட்டால் (அவனது) வறட்டு கௌரவம் அவனைப் பாவத்தில் தள்ளி விடுகின்றது. அதனால் நரகமே அவனுக்குப் போதுமானதாகும். தங்குமிடத்தில் அது மிகக் கெட்டதாகும்.’
(2:204-206)

வாதத்திறமைமிக்க வழிகேடர்கள் மிகவும் ஆபத்தானவர்கள். இவர்கள் குறித்து இவ்வசனங்கள் பேசுகின்றன. நபி(ச) அவர்களையே கவரும் விதத்தில் பேசும் ஆற்றல் பெற்றுள்ளவர்களாக அவர்கள் இருந்தனர். அவர்களது வசனங்கள் தேனை விடவும் இனிமையாக இருக்கும். அவர்களின் உள்ளங்கள் நரித்தனம்மிக்கதாக இருக்கும். தங்கள் தவறுகளையும் அழகாக நியாயப்படுத்திக் காட்டும் திறமை பெற்றவர்களாக அவர்கள் இருப்பார்கள். குழப்பம் விளைவிப்பது அவர்களின் குணமாக இருக்கும். அல்லாஹ் மீது அச்சம் இல்லாது குழப்பம் விளைவிப்பர்.

‘மனிதர்களில் அல்லாஹ்வுக்கு மிகவும் வெறுப்பானவன் வாதத்திறமை உள்ளவனாவான்.’ என நபி(ச) அவர்கள் கூறியுள்ளார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷh(ரழி)
ஆதாரம்: புஹாரி: 7188, 2457, 4523,
முஸ்லிம்: 2668

தவறான அடிப்படையில் வாதத் திறமையைப் பயன்படுத்துபவர்கள் அல்லாஹ்வின் கோபத்திற்குரியவர்கள் என்பது கவனிக்கத்தக்கதாகும்.

இன்ஷா அல்லாஹ்
தொடரும்….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.