குழந்தையின் நடத்தை பிறழ்வுகள்; காரணங்களும் தீர்வுகளும்.- 01

குழந்தையின் நடத்தை பிறழ்வுகள்;
காரணங்களும் தீர்வுகளும்.- 01

ஆக்கம்: எம்.ஐ. ஹுர்ரா பின்து இஸ்மாயில் ஸலபி
(மகளின் ஆக்கம்)

பீடிகை குழப்பங்கள் நிறைந்த இந்த சமூக சூழலில் குழந்தைகளை நடத்தை பிறழ்வுக்கு இட்டுச் செல்லும் காரணங்கள் அதிகரித்துள்ளன. சகல திக்குகளில் இருந்தும் அவர்கள் தீமையின் பால் ஈர்க்கப்படுகின்றனர்.

குழந்தைகளை வழிநடத்துபவர்கள் தமது பொறுப்பையும் அமானிதத்தையும் புரிந்து குழந்தைகளின் நெறிபிறழ்வுக்கான காரணங்களையும் அவற்றைக் களையும் வழிமுறைகளையும் அவற்றிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் விதத்தையும் தெளிந்த சிந்தனையுடன் அறிந்திருக்காவிட்டால் குழந்தைகள் சமூகத்தில் குற்றவாளிகளாகவும் குழப்பக்காரர்களாகவும் அழிந்து போகும் அடுத்த தலைமுறையாகவும் மாறிவிடுவார்கள் என்பதில் சந்தேகமில்லை.

நான் இந்தக் கட்டுரையில் நடத்தை நெறிபிறழ்வுக்கான காரணங்களையும்; அவற்றைக் களையும் வழிமுறைகளையும் விபரித்துள்ளேன். இதன் மூலம் இஸ்லாம் ஞானம்மிக்க மார்க்கம் என்பதையும் குழந்தைகளை பாதுகாக்க வல்ல ஆழமான அடித்தளத்தையும் சரியான வழிமுறைகளையும் இஸ்லாம் காட்டித் தந்துள்ளது என்பதையும் அறியலாம்.

குழந்தைகளின் நெறி பிறழ்வுக்கான அடிப்டையான காரணங்களையும் இஸ்லாத்தின் நிழலில் அவற்றிலிருந்து விடுபடும் வழிமுறைகளையும் அறிந்து கொள்வோம்.

01. சில வீடுகளைக் குடிகொண்டிருக்கும் வறுமை:

ஒரு குழந்தை அதற்குப் போதுமான அளவு ஆடையையோ, உணவையோ வீட்டில் பெற்றுக்கொள்ளாவிட்டால் தனது வாழ்க்கைக்குத் தேவையான வாழ்வை உயர் நிலைக்குக் கொண்டு செல்ல உதவக்கூடியவை கொடுக்கப்படாவிட்டால் தன்னைச் சூழ ஏழ்மையையும், கஷ்டத்தையும் கன்டால் அக்குழந்தை தனக்குத் தேவையான வாழ்வாதாரங்களைத் தேடி கஷ்டமான வீட்டுச் சூழலைவிட்டு வெளியேறும் என்பது அறிந்தவிடயமே! அவ்வாறு வெளியேறும் குழந்தையானது மோசமானவரகளின் கைகளில் சிக்கிக் கொண்டால் மக்களில் செல்வந்தத்திற்கும், மானத்திற்கும், உயிருக்கும் ஆபத்தை ஏற்படுத்துவம் ஒரு குற்றவாளியாக சமூகத்தில் வளர்வான்.
(உ-ம்: திருடன். கொலையாளி)

இதன் காரணமாகவே நேர்மையான சட்ட திட்டங்களை இஸ்லாம் மார்க்கமானது முன்வைத்துள்ளது. ஏழ்மையை மொத்தமாக எதிர்த்துப் போராடுவதற்கான திட்டங்களை அது வரைந்து காட்டியுள்ளது.

அவற்றுள் சில பின்வருமாறு:

வேலை செய்யும் ஆற்றலுள்ள ஒவ்வொருவருக்கும் இஸ்லாமிய அரசு வேலைவாய்ப்புக்களைப் பெற்றுக்கொடுக்கும் பொறுப்பை ஏற்றல்.

வேலை செய்ய இயலாதோருக்கு (வயோதிபர். நோயாளி) பைத்துல் மாலின் மூலம் மாதாந்தக் கொடுப்பனவுகளை வழங்குதல்.

மனைவி, குழந்தைகள் உள்ள ஒவ்வொரு தந்தைக்கும் குடும்ரீதியான உதவிச் சட்டங்களை விதியாக்கள்.

அநாதைகள், வயோதிபர்கள் போன்றோருக்கு சிறந்த வாழ்க்கையை உறுதிப்படுத்தும் வகையிலும் அவர்களின் கண்ணியத்தைப் பாதுகாக்கும் வகையிலும் கண்கானித்தல்.

இவை போன்ற இன்னும் பல திட்டங்களையும் முன்வைத்துள்ளது. இவ்வாறான திட்டங்கள் நடைமுறைப் படுத்தப்பட்டால் குழந்தைகள் வீணாகி இழிவாகிச் செல்லும் முக்கிய காரணம் சமூகத்திலிருந்து நீங்கும்.

2.தாய்-தந்தையர்களுக்கு இடையில் ஏற்படும் சண்டைகளும், பிளவுகளும்.

ஒரு குழந்தை பெற்றோருடன் இருக்கும் சந்தர்ப்பங்களில் அவர்களுக்கிடையில் நடக்கும் சண்டைகளும் தொடர்ச்சியான பிளவுகளும் குழந்தைகளை நெறிபிறழ்வின் பால் இட்டுச்செல்லும் இன்னொரு அடிப்படைக் காரணமாகக் காணப்படுகின்றது.

குழந்தை சண்டைக்காட்சிகளை வீட்டில் வெளிப்படையாகக் கண்களால் பார்ப்பதால் அக்கெட்ட வீட்டுச் சூழலை விட்டு விட்டு தன்னுடன் சந்தோஷமாக இருக்கும் அதிக மான ஓய்வு நேரங்களைத் தன்னுடன் கழிக்கும் நண்பர்களைத்தேடி வெளியேறும். அவ்வாறு செல்லும் போது நண்பர்கள் கெட்டவர்கலாக காணப்பட்டால் அவர்களும் இணைந்து அக்குழந்தையும் படிப்படியாக வழிதவறிச் செல்லும். அதனுள் கெட்ட பழக்கவழக்கங்களும் இழிவான குணங்களும் ஏற்படும். இதனால் அக்குழந்தை நாட்டிற்கும் மக்களுக்கும் ஒருசோதனையாகவும். ஆபத்தாகவும் மாறும். எனவே நல்ல பெற்றோர்களாலேயே நல்ல சந்ததிகளை உருவாக்க முடியும்.

எனவே இஸ்லாம் ஒரு பெண்ணுக்கு எவ்வாறு கனவனை சிறந்த முறையில் தெரிவு செய்கின்றோமோ அவ்வாறே மனைவியையும் (சிறந்த பண்பை உடையவளாக)
சிறந்த முறையில் தெரிவு செய்யுமாறு உறுதியான ஒரு திட்டத்தை திருமணப் பேச்சுவார்த்தை நிகழ்த்துபவனுக்கு முன்வைத்துள்ளது. (அவ்வாறு கணவனோ மனைவியோ சிறந்த முறையில் தெரிவுசெய்யப்படாவிடில்) கணவன் மனைவிக்கிடையில் அன்பு, புரிந்துணர்வு. உதவும் மனப்பாங்கு ஏற்படாது. இதன் பின்னர் அவர்களிடையே குடும்பப் பிரச்சினைகள் தொடரும்.

ஒரு சந்தோசமான குடும்பத்தின் அடிப்படை புரிந்துணர்பு, அன்பு, உதவும் மனப்பாங்கு என்பதில் எவ்வித மாற்றுக் கருத்தும் இல்லை. எனவே, ஒரு குடும்பத்தின் அடிப்படையை அடைய சிறந்த கணவண். மனைவி தேர்வு அவசியம்.

03. விவாகரத்தும் அதனால்ஏற்படும் வறுமையும்:

ஆழமான முறையில் குழந்தை நெறிபிரழ்விற்கு இட்டுச் செல்லும் அடிப்படைக் காரணிகளில் தலாக்குடைய நிலைமையும் அதனால் ஏற்படும் பிளவுகளும், வறுமையும். சீரழிவுகளும் ஒன்றாகும்.

ஒரு குடும்பத்தில் தலாக் ஏற்பட்டால் அக்குகுழந்தைகளைப் பொறுத்தவரையில் இரண்டு இக்கட்டான நிலைகளில் ஒன்று ஏற்பட்டே தீரும். ஒன்று, ஒரு குழந்தை இவ்வுலகைப் பார்க்கும் போது அதற்கு இரக்கம் காட்டக் கூடிய தாயை பெற்றுக்கொள்ளாது. இரண்டாவதாக தன்னை கவணிக்கக் கூடிய தனது விடயங்களை செய்து தரக்கூடிய தந்தையைப் பெற்றுக் கொள்ளாது. இவ்வாறான இரண்டு சந்தர்ப்பங்களிலும் குழந்தை குற்றத்திற்கு ஆளாகி பாவத்தின் பால் வளர்க்கப்படும் என்பதில் எந்தவொரு சந்தேகமுமில்லை.

அதிலும் முத்தலாக் சொல்லப்பட்ட ஒரு பெண் இன்னொரு திருமணம் செய்யும் போது குழந்தைகள் மிக வேகமாகவே இழிவின் பக்கமும் நெறிபிரழ்வின் பக்கமும் சென்றுவிடுகின்றனர்.

அதே போன்றே தலாக் சொல்லப்பட்ட பெண்ணின் ஏழ்மை இந்நிலைமையில் அப்பெண் வீட்டை விட்டு வெளியேறி வேலைக்குச் செல்லும் நிர்ப்பந்தம் அதையும் விட சிறு குழந்தைகளை இரவு நேரச் சமபவங்களுககும் பகல்நேரக் குழப்பங்களுக்கும் பாதையில் விட்டு விட்டு கவணிப்புகளோ பாதுகாப்போ இல்லாமல் சுதந்திரமாக வீட்டை விட்டு வேலைக்குச் செல்லுதல் என்று கூறுவது இவ்விடத்தில் பொருத்தமானதாகும்.

இவ்வாறாக கைவிடப்பட்ட குழந்தைகளிடம் நெறிபிறழ்வையும் குற்றத்தையுமே பெற்றுக் கொள்வோம். அல்லாற் அருள்பாலித்தவர்களைத் தவிர அவர்கள் சொற்பமாணவர்களே உண்ண போதிய உணவையும் அணிவதற்கு ஆடையையும் வசிப்பற்கு ஏற்ற வீட்டையும் பெறாத இவர்களிடம் வேறு எதைத்தான் நாம் எதிர்பார்க்க முடியும்?

(இன்ஷா அல்லாஹ் தொடரும்)

Leave a Reply

Your e-mail address will not be published. Required fields are marked *