குர்ஆன் விளக்கக் குறிப்புகள்

“இன்னும், அவன் ஆதமுக்கு அனைத்துப் பெயர்களையும் கற்றுக் கொடுத்தான். பின்னர் அவற்றை வானவர்களுக்கு எடுத்துக்காட்டி, “நீங்கள் உண்மையாளர் களாக இருப்பின் இவற்றின் பெயர்களை எனக்கு அறிவியுங்கள்” என்று கூறினான்.”
(2:31)
மனிதனுக்கு அல்லாஹ் கற்றுக் கொடுத்தான் என இந்த வசனம் கூறுகின்றது. ஆதம்(ர), ஹவ்வா(ர) இருவரையும் பூமிக்கு அனுப்பும் போதும் என்னிடமிருந்து உங்களுக்கு நேர்வழி வரும் என்று கூறித்தான் அனுப்பப்பட்டனர். எனவே. அவர்கள் பூமிக்கு அனுப்பப்பட்ட பின்னரும் அவர்களுக்கு வழிகாட்டல் வழங்கப்பட்டது என்பதை அறியலாம்.
கடவுள் நம்பிக்கையற்றவர்கள் மனித வரலாறு பற்றி எழுதும் போது அவன் இயற்கையிடமிருந்துதான் ஒவ்வொன்றையும் அனுபவம் மூலம் கற்றுக் கொண்டான் என்ற கருத்தை முன்வைக்கின்றனர்.
பல நூற்றாண்டுகளாக நாடோடிகளாக அலைந்து திரிந்த மனித இனம் காலப் போக்கில்தான் ஒரு இடத்தில் தங்கி பயிர் செய்யவும், விலங்கு வேளாண்மையில் ஈடுபடவும் கற்றுக் கொண்டதாகத்தான் கூறப்படுகின்றது.
ஆனால், ஆதம் நபியின் ஒரு மகன் விவசாயம் செய்ததாகவும், மற்றுமொரு மகன் கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டதாகவும் எமக்கு இஸ்லாம் கூறுகின்றது. இதிலிருந்து மனித இனம் எதையுமே அறியாத நிலையில் உருவாகி, இயற்கையிடமிருந்து ஒவ்வொன்றாக கால ஓட்டத்தில் கற்றுக் கொண்டது என்ற மனித இன வரலாறு தவறானது என்பதை அறியலாம்.
ஆகவே, மனிதன் கற்றுக் கொடுக்கப்பட்ட நிலையில்தான் பூமிக்கு வந்தான் என்பதே உண்மை என்பதை இந்த வசனம் தெளிவுபடுத்துகின்றது.
மறைவான அறிவு வழங்கப்படாத மலக்குகள்:
“அவர்கள், (இரட்சகனே!) “நீ தூய்மையானவன்; நீ எங்களுக்குக் கற்றுத் தந்ததைத் தவிர வேறறிவு எங்களுக்கில்லை. நிச்சயமாக நீயே நன்கறிந்தவனும்ளூ ஞானமிக்கவனுமாவாய்” எனக் கூறினார்கள்.”
(2:32)
இது தமது அறிவின் எல்லை பற்றிய மலக்குகளின் வாக்குமூலமாகும். அல்லாஹ் அல்லாமல் வேறு யாருக்காவது மறைவான அறிவு இருப்பதாக இருந்தால் மலக்குகள்தான் அதற்குத் தகுதியானவர்கள். அந்த மலக்குகளே அல்லாஹ் கற்றுத் தந்ததைத் தவிர எங்களுக்கு வேறு எதுவும் தெரியாதுÉ எமக்கு மறைவான அறிவு இல்லையென்று கூறுகின்றனர் என்றால் அல்லாஹ்வைத் தவிர நபிமார்களுக்கோ, ஜின்களுக்கோ ஏனைய படைப்புக்களுக்கோ மறைவான அறிவு இல்லையென்பதை இதன் மூலம் உணரலாம்.
ஆதம் நபியின் சுவர்க்கம்:
“மேலும் நாம், “ஆதமே! நீரும் உம் மனைவியும் இச்சுவர்க்கத்தில் குடியிருங்கள். மேலும், நீங்கள் இருவரும் விரும்பியவாறு தாராளமாக அதிலிருந்து புசியுங்கள். ஆனால், நீங்கள் இருவரும் இம்மரத்தை நெருங்க வேண்டாம். அவ்வாறெனில், “நீங்கள் இருவரும் அநியாயக்காரர்களில் ஆகிவிடுவீர்கள்” என்றும் நாம் கூறினோம்.”
(2:35)
ஆதம்(ர) அவர்கள் தமது மனைவியுடன் சுவர்க்கத்தில் குடியமர்த்தப்பட்டு தடுக்கப்பட்ட கனியைப் புசித்ததனால் அங்கிருந்து வெளியேற்றப்பட்டதாக குர்ஆன் கூறுகின்றது. சுவர்க்கம் என்பதைக் குறிக்க அறபியில் “ஜன்னத்” என்று கூறப்படும். சாதாரண தோட்டத்திற்கும் அறபியில் இதே வர்த்தைதான் பயன்படுத்தப்படும். இந்த அடிப்படையில் ஆதம் நபி குடியமர்த்தப்பட்டது உண்மையான சுவனத்திலா? அல்லது பூமியில் உள்ள சாதாரண தோட்டத்திலா? என்பதில் கருத்து வேறுபாடு உள்ளது.
பூமியில் உள்ள சாதாரண ஒரு தோட்டத்தில் குடியமர்த்தப்பட்டார்கள் என்று பைபிள் கூறுகின்றது. இதே கருத்தை முஃதஸிலாக்கள், ஜஹ்மிய்யாக்கள் போன்ற வழிகேடர்களும் கூறுகின்றனர். பெரும்பாலான இஸ்லாமிய அறிஞர்கள் அவர்கள் சுவனத்தில்தான் குடியமர்த்தப்பட்டார்கள்É அதிலிருந்துதான் வெளியேற்றப்பட்டார்கள் என்று கூறுகின்றனர். இதுதான் குர்ஆன், சுன்னாவின் அடிப்படையில் சரியான கருத்தாகும்.
இது தொடர்பில் தேவையற்ற சந்தேகங்களுக்கு இடம் கொடுப்பதைத் தவிர்க்க வேண்டும் என்பதனால் சற்று விரிவாக நோக்குவது இன்றியமையாதது.
பொதுவாக அறபியில் “அல்” என்ற வார்த்தை ஒரு பெயருடன் இணைக்கப்பட்டால் குறித்த ஒன்றைக் குறித்துத்தான் அது பேசுவதாகக் கொள்ளப்படும். உதாரணமாக, “அபுன்” என்றால் ஒரு தந்தை என்பது அர்த்தமாகும். “ஜாஅ அபுன்” என்றால் ஒரு தந்தை வந்தார் என்பது அர்த்தமாகும். அவர் யாரோ ஒரு இனம் தெரியாத தந்தையாக இருப்பார். இதே வேளை “ஜாஅல் அபு” என அல் பயன் படுத்தப்பட்டால் “தந்தை வந்தார்” என்பது அர்த்தமாகும். அவர் பேசுபவரது அல்லது கேட்பவரது தந்தையாக அறியப்படாத ஒருவராக இருக்கலாம். குர்ஆனிலும் ஹதீஸிலும் “அல் ஜன்னத்” என்ற பதம் பயன்படுத்தப்பட்டதால் சுவர்க்கம் என எது அறியப்பட்டிருக்கிறதோ அதைத்தான் அந்தப் பதம் குறிக்கும். சாதாரண ஒரு தோட்டத்தைக் குறிக்காது.
அடுத்து ஆதம்(ர) அவர்களை அல்லாஹ் குடியமர்த்திய சுவர்க்கம் பற்றி அல்லாஹ் பின்வருமாறு கூறுகின்றான்.
“வானவர்களிடம் ஆதமுக்கு (சிரம் பணிந்து) “சுஜூது” செய்யுங்கள் என்று நாம் கூறியபோது, இப்லீஸைத் தவிர அவர்கள் (அனைவரும்) “சுஜூது” செய்தனர். அவன் மறுத்துவிட்டான்.”
“ஆதமே! நிச்சயமாக இவன் உமக்கும், உமது மனைவிக்கும் விரோதியாவான். எனவே, இந்த சுவர்க்கத் திலிருந்து உங்கள் இருவரையும் அவன் வெளியேற்றிட வேண்டாம். அவ்வாறெனில் நீர் துர்ப்பாக்கியத்திற்குள்ளாவீர் என நாம் கூறினோம்.”

“நிச்சயமாக அதில் நீர் பசித்திருக்க மாட்டீர். மேலும், நீர் நிர்வாணமாக இருக்கவும்; மாட்டீர்.”
“நிச்சயமாக நீர் அதில் தாகித்திருக்கவும் மாட்டீர். வெயிலில் (சிரமப்) படவும் மாட்டீர் (என்றும் கூறினோம்.)”
(20:116-119)
இது சாதாரண உலகத் தோட்டம் குறித்த ஒரு வார்த்தையாகக் கொள்ள முடியாது.
அடுத்து ஆதம் நபி தவறு செய்த பின்னர் அவரைப் பார்த்து அல்லாஹ்,
“இறங்குங்கள். உங்களில் சிலர் சிலருக்கு எதிரிகள். உங்களுக்கு பூமியில் குறிப்பட்ட காலம் வரை வாழ்விடமும் வசதியும் உள்ளன.” (2:36)
என்று கூறியதாக குர்ஆன் கூறுகின்றது.
இதிலிருந்து இந்த நிகழ்ச்சி நடக்கும் போது அவர்கள் பூமியில் இருக்கவில்லை என்பது உறுதியாகின்றது. பூமியில் ஒரு தோட்டத்தில் அவர்கள் வசித்திருந்தால் பூமிக்குப் போங்கள் என்று கூறுவது முரண்பாடாக அமைந்துவிடும்.
“மறுமை நாளில் மக்கள் ஒன்று சேர்க்கப்பட்டிருக்கும் போது முஃமின்கள் ஆதம் நபியவர்களிடம் வந்து எமது தந்தையே! இந்த சுவர்க்கத்தை எமக்காக திறந்து தாருங்கள் எனக் கேட்பார்கள். அதற்கு ஆதம்(ர) அவர்கள் இந்த சுவனத்தை விட்டும் உங்கள் தந்தை ஆதமின் தவறுதானே உங்களை வெளியேற்றியது….. என பதில் கூறுவார்கள்.”
அறிவிப்பவர்: ஹுதைபா(வ)
ஆதாரம்: முஸ்லிம் – 503

இது போன்ற ஹதீஸ்களும் ஆதம் நபி சாதாரண தோட்டத்தில் இருந்து வெளியேற்றப் படவில்லை. சுவனத்திலிருந்துதான் வெளி யேற்றப்பட்டார்கள் என்பதைத் தெளிவுப் படுத்துகின்றன.
ஆதாரங்கள் இந்தக் கருத்தைத் தெளிவாகச் சொன்னாலும் சில ஐயங்களின் அடிப்படையில்தான் யூத நஸாராக்களின் கருத்தை இஸ்லாமிய கருத்தாகக் காட்ட சிலர் முற்படுகின்றனர்.
1. சுவர்க்கத்துக்குள் ஷைத்தான் எப்படி நுழைந்து ஆதம் நபியை வழிகெடுத்தான் என்பது ஒரு சந்தேகம்.

iஷத்தான் சுவர்க்கத்துக்குள் நுழைந்து வழிகெடுத்தான் என்று நேரடியாக எதுவும் கூறப்படவில்லை. மனிதனது இரத்த நாளங்களிலெல்லாம் அவன் ஓடுகின்றான். ஒரு வேளை அவன் சுவனத்துக்குள் நுழைந்து வழி கெடுத்திருந்தால் கூட அல்லாஹ் தனது நாட்டத்தை நிறைவேற்றுவதற்காக அவனுக்கு ஒரு சந்தர்ப்பத்தை வழங்கியதாக எடுத்துக் கொள்ளலாம்.
2. சுவர்க்கத்துக்குள் நுழைபவர்கள் வெளியேற்றப்படமாட்டார்கள். ஆதம் நபி எப்படி வெளியேற்றப்பட்டார்?
சுவர்க்கத்துக்குள் நுழைபவர்கள் மீண்டும் வெளியே வரமாட்டார்கள் என்பது விசாரணையின் பின் சுவனம் நுழைபவர்கள் சம்பந்தப்பட்ட சட்டமாகும். இங்கே ஆதம் நபி சுவர்க்கத்தில் குடியமர்த்தப்படும் போதே iஷத்தான் இதை விட்டும் உங்களை வெளியேற்றிவிடா வண்ணம் கவனமாக இருங்கள் என்று போதிக்கப்படுகின்றது. அதாவது, தவறு செய்தால் வெளியேற நேரிடும் என்பது கூறப்படுகின்றது.
3. சுவர்க்கத்தில் மனிதன் நினைத்த தைச் செய்யலாம். ஆனால், இங்கு ஆதம் நபிக்கு குறித்த ஒரு கனியைச் சாப்பிட வேண்டாம் என தடை விதிக்கப் படுகின்றது. எனவே, அவர்கள் குடியிருந்தது சுவனத்தில் அல்ல என்று வாதிக்கப்படுகின்றது.
நினைத்ததை உண்ணலாம், எந்தத் தடையும் இல்லை என்பது விசாரணையின் பின் கிடைக்கும் சுவனம் பற்றியதாகும். இது சோதனைக்காக வழங்கப்பட்ட ஒரு இடம் என்பதால் அதனோடு இதைச் சம்மந்தப்படுத்திப் பார்க்க முடியாது.
4. சுவனம் என்பது நிரந்தரமானது. ஷைத்தான் ஆதம் நபியை ஏமாற்றும் போது இதை சாப்பிட்டால் நீங்கள் இருவரும் மலக்குகளாக அல்லது நிரந்தரமானவர்களாக மாறிவிடுவீர்கள் என்று கூறுகின்றான். ஆதம் நபி சுவனம் என்ற நிரந்தரமான இடத்தில் இருந்திருந்தால் நிரந்தரமானவர்களாக மாறுவதற்காக ஷைத்தான் சொன்னதை நம்பி அந்தக் கனியைச் சாப்பிட்டிருப் பார்களா? அப்படி சாப்பிட்டிருக்கவே முடியாது. எனவே, அவர்கள் பூமியில் நிரந்தரமில்லாத ஒரு தோட்டத்தில்தான் தங்க வைக்கப் பட்டார்கள் என்று வாதிடுகின்றனர்.
ஆதம் நபி பூமியில் ஒரு தோட்டத்தில் குடியமர்த்தப்பட்டிருந்தால் பூமி அழியக்கூடியது என்பதை அவர்கள் அறிந்திருப்பார்கள். இந்தக் கனியைச் சாப்பிட்டால் நிரந்தரமான வாழ்வு கிடைக்கும் என்று ஷைத்தான் சொல்கின்றான். பூமி அழிந்த பின் நான் எப்படி நிரந்தரமாக இருப்பது என ஆதம் நபி சிந்தித்திருக்க மாட்டாhர்களா? என்ற கேள்விக்கு இவர்களிடம் பதில் இல்லை.
எனவே, ஆதம் நபி பூமியில் ஒரு தோட்டத்தில் தங்க வைக்கப்பட்டார்கள் என்ற தவறான கருத்தை முன்வைப்பவர்கள் ஆதாரங்கள் எதையும் முன்வைக்காமல் வாதங்களை முன்வைத்தே தமது கருத்தை நிலைநாட்ட முற்படுகின்றனர். அந்த வாதங்களுக்கு முழுமையான பதில் கிடைக்காவிட்டால் கூட ஆதாரங்களின் அடிப்படையில் முடிவு காண்பதே சரியானதாகும்.
எனவே, ஆதம் நபி சுவனத்தில்தான் குடியமர்த்தப்பட்டார்கள். அங்கிருந்துதான் வெளியேற்றப்பட்டார்கள் என்பதே சரியான கூற்றாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.